நமக்குள் மர்மமாக இருக்கும் மற்றொரு சரீரம்(சூக்கும தேகம்)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நமக்குள் மர்மமாக இருக்கும் மற்றொரு சரீரம்(சூக்கும தேகம்)

Post by marmayogi » Sun Apr 19, 2015 1:04 am

Image
★சூக்கும தேகம் வெளிபட ஒரு தியான முறை உள்ளது. அந்த பயிற்சிக்கு பெயர். கண்ணாடி பயிற்சி , தீப பயற்சியை செய்ய வேண்டும்.

★உடம்பின் மூலமாக ஒருவரிடம் பேசுவது சரீரி. உடம்பு இல்லாமல் ஆன்மாவிடம்( இறந்த ஆன்மாக்கள்) பேசுவது அசரிரி. அசரிரியாக மகான்கள் நம்முடன் பேசுவார்கள். அதற்கு உடல் என்ற கருவி தேவையில்லை. வாய் வேண்டும் என்ற அவசியம் இல்லை. அசரிரி என்பது பேசாமல் பேசுவது , அதுவே மவுன மொழி. அது அழியாத மொழி. கடவுள் பேசுவதும் ஆன்மா பேசுவதும் ஒன்று.
Image
★இறந்த ஆன்மாவுடம் பேச உடம்பு , வாய் தேவை இல்லை. ஆன்மாவும் ஆன்மாவும் அசரிரியாக பேசலாம்.

★கடவுளிடம் பேசிய மகான்கள் வாய் திறந்து பேச மாட்டார்கள். கடவுள் அசரிரியாக பேசும் போது உடம்பு என்ற கருவியை பயன்படுத்த மாட்டார்கள்.
ஒளி தேகமாக மாறிய உடம்பிற்கு ஸ்தூல தேகத்தில் வாழ மாட்டார்கள்.

★அவர்கள் உடம்பு ஸ்தூல தேகத்தை கடந்து , சூக்கும தேகத்தை கடந்து, மகா காரண தேகத்தில் வாழ்வார்கள். அவர்கள் இந்த உடம்பை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். காரண தேகமாக உடம்பு மாறினால் மனித உடம்பு இறைதுகளின் நுண் இயக்கமாக மாறிவிடும்.

★உடம்பு இல்லாமல் அசரிரியாக இறந்த ஆன்மாவிடம் பேசலாம். ஆன்மா பேசுவது என்பது மவுன மொழி. ஒளி தேகமாக மாறிய உடம்பு ஸ்தூல தேகத்தை கடந்து விடும்.
Image
★சூக்கும தேகம் வெளிபட்டால் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். நம் கண்ணுக்கு தெரியாமல் கோடி கணக்கான இறந்த ஆன்மாக்கள் சூக்குமகமாக உலவி கொண்டு இருக்கிறது . அதை இந்த புற கண்ணால் பார்க்க முடியாது. அதற்கு என்று ஒரு கண் உள்ளது .


★அந்த கண்ணிற்கு பெயர் அககண். அக கண் மூலமாக இறந்த ஆன்மாவை பார்க்க முடியும். சூக்கும தேகம் வெளிபட அஜபா நிலையை திரும்ப திரும்ப பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். புத்தகம் படிப்பதால் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது. தவத்தின் மூலமாக அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”