எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
GibiPoul
Posts: 22
Joined: Sat Apr 18, 2015 2:57 pm
Cash on hand: Locked

எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும்

Post by GibiPoul » Sat Apr 18, 2015 4:37 pm

எறும்பு குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது.

உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. பல்வேறுபட்ட தரவுகளின்படி, இத்தரவுகள் தங்களுக்குள் சிறிதளவு மாறுபடினும், எறும்பிலுள்ள இனங்களின் (species) எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது[1][2][3]. இவ்வாறு மிகக்கூடிய எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன. பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும் நிலைத்திணை(தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே (100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக வளர்ச்சி பெற்றன.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும்

Post by marmayogi » Sun Apr 19, 2015 12:37 am

உலகில் பல பில்லியன் உயிர்கள் பிறந்து மடிகிறது . அந்த உயிர்களுக்கு ஞானம் வருவது எப்போது ?. பிறந்து பிறந்து இறப்பது தான் வாழ்க்கையா ?.

சாதாரண பாமரனும் நோய் வந்து செத்து போகிறான். லச்சம் லச்சமா பணத்தை சம்பாதித்து சேமித்து வைத்தவனும் அதே மாதிரி இறந்து போகிறான் .

லட்சம் லச்சமா college ல கட்டி பட்ட படிப்பு படிக்கின்றனர். பிறகு 60 வயது காலம் வரை ஒரு கம்பெனியில் வேலை பார்கிறார்கள். பிறகு வயதாகிவிடுகிறது. நோய் வருகிறது. லொக்கு லொக்குனு இரும்புகிறார்கள். பிறகு இறந்துவிடுகிறார்கள்.

இறப்பதற்கு லட்சம் லச்சமாக பணம் செலவு செய்து பெரிய பெரிய பட்ட படிப்பு எல்லாம் படிக்கிறார்கள். இது இறந்த பின்பு எதற்கு உதவும் ?. உயிர் உடம்பில் இருந்தால் சிவம் . உயிர் உடலை விட்டு சென்றால் சவம் . இது தான் சாதாரண மனிதனின் வாழ்க்கை.

மரணமில்லா பெருவாழ்வை இலவசமாக கற்று தருகிறேன் என்று கூப்பிட்டால் யாரும் வருவதில்லை. இலவசமாக கிடைக்கும் பொருளுக்கு மதிப்பு இல்லாமல் போகிறது. பணம் கொடுத்து வாங்கினால் தான் மதிப்பு அதிகரிக்கிறது.

மரணத்தை வெல்லும் நுட்பத்தை அறிவதே உண்மையான கல்வி. இந்த கல்வி என்றும் அழியாது. சாக கல்வி. சாகதவற்களே சன்மார்க்கி.

தவநிலை ஒன்றனைச் சாராத மாந்தர்கள்
அவநிலை யாவாரடி குதம்பாய்
அவநிலை யாவாரடி.

கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்
கூடவே வாராதடி! கும்பாய்
கூடவே வாராதடி!

உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
பெற்றார்துணை யாவரோ? குதம்பாய்
பெற்றார்துணை யாவரோ?

போம்போது தேடும் பொருளில்
அணுவேனும்
சாம்போது தான்வருமோ? குதம்பாய்
சாம்போது தான்வருமோ?

தேடிய செம்பொன்னும் செத்தபோ
துன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ?

விந்து விடார்களே வெடிய
சுடலையில்
வெந்து விடார்களடி குதம்பாய்
வெந்து விடார்களடி.

கோயில் பலதேடிக் கும்பிட்ட
தால்உனக்கு
ஏயும் பலன் வருமோ? குதம்பாய்
ஏயும் பலன் வருமோ?

காசி ராமேச்சுரம் கால் நோவச்
சென்றாலும்
ஈசனைக் காணுவையோ? குதம்பாய்
ஈசனைக் காணுவையோ?

செத்தபின் சாப்பறை செத்தார்க்குச்
சேவித்தால்
சத்தம் அறிவாரடி குதம்பாய்
சத்தம் அறிவாரடி.

மாங்காய்ப்பா லுண்டு மலைமே
லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பா லேதுக்கடி குதம்பாய்
தேங்காய்ப்பா லேதுக்கடி.

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்க ளேதுக்கடி குதம்பாய்
கோலங்க ளேதுக்கடி.

சாகாமற் றாண்டி தனிவழி போவார்க்கு
ஏகாந்த மேதுக்கடி குதம்பாய்
ஏகாந்த மேதுக்கடி.


:spe: :spe: :spe: :spe:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”