உயிரின் இருப்பிடம்(மையம் ) எங்கு உள்ளது?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உயிரின் இருப்பிடம்(மையம் ) எங்கு உள்ளது?

Post by marmayogi » Mon Apr 13, 2015 12:40 am

Image
முதல் பாகம் -1

உயிரின் இருப்பிடம்(மையம் ) எங்கு உள்ளது?
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

★உயிரின் மையம் மூலாதாரத்தல் கருவாயுக்கும்(இனப்பெருக்க மையம்) எருவாயுக்கும்( ஆசனவாய்) இரண்டு அங்குலம் உட்புறமாக உள்ளது.


★ஒரு தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு தாயின் உயிரே குழந்தைக்கும் இருக்கும். பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி அறுக்கும் போது புதிதாக ஆன்மாவானது தொப்புள்கொடி வழியாக குழந்தை உடம்பிற்குள் புகுந்துவிடும். அதேபோல புதிதாக ஒரு உயிரானது தலைபகுதிக்கு வந்துவிடும். தொப்புள்கொடி அறுத்ததும் குழந்தை அழுகை வரவில்லை எனில் குழந்தை இறந்துவிடும்.

★பிறந்த குழந்தைக்கு தலையில் உச்சிகுழி துடிக்கும். அதுவே உயிர். அந்த உயிரானது இரண்டு வருடம் தலைப்பகுதியில் மையம் கொண்டு இருக்கும். அது படிபடியாக கீழே இறங்கி துரியம் , ஆக்கினை, விசுத்தி, அனாதகம், மணிபூரகம், சுவாதிஷ்டானம் , கடைசியில் மூலாதாரத்தல் மையம் கொள்ளும். இப்படி ஒவ்வொரு மையத்தில் உயிரானது இரண்டு வருடம் மையம் கொள்ளும்.

★ இந்த உயிரானது தலைப்பகுதியில்( துரியம்) இருந்து கடைசியில் மூலாதாரம் வரும் போது ஒரு ஆணும் பெண்ணுக்கும் ஈர்ப்பு ஆற்றல் உண்டாகும். 14 வருடம் பிறகு ஒரு ஆண் ஒரு பெண் வயதிற்கு வருகிறார்கள். உயிரானது மூலாதாரத்தல் இருப்பதனால் ஒரு உயிரை உற்பத்தி செய்யும் ஆற்றல் இயற்கையாக உருவாகும்.

★மூலதாரத்தில் மையம் கொண்டுள்ள உயிரிலிருந்து உடம்பின் அனைத்து பகுதிக்கும் உயிர் ஆற்றல்( ஜீவ காந்தம் ) கடத்தபடுகிறது. இந்த உயிரானது கருமையம்( genetic center ) திணிவு பெற்று இருக்கிறது. இங்குதான் ஒரு மனிதன் செய்த நல்வினை, தீவினை அனைத்தும் பதிவாகி இருக்கும். இந்த பதிவுகளுக்கு ஏற்ப மனிதனுக்கு இன்பமோ துன்பமோ ஏற்படும்.

★பல பிறவிகளில் செய்த பாவ பதிவுகள் அனைத்தும் மூலாதாரத்தல் உள்ள கருமையத்தில் பதிவாகி இருக்கும்.
இந்த பாவ பதிவுகளை தியானத்தின் மூலமாக அழித்து இறைநிலையோடு ஒன்றினைய வேண்டும். அப்படி இறைநிலையோடு ஒன்றினையும் போது மீண்டும் பிறக்க வேண்டியதில்லை.


★ மூலாதாரத்தல் மையம் கொண்டுள்ள உயிர் சக்தியை குருவின் உதவியுடன் தட்டி எழுப்பி முதுகுதண்டு வழியாக மீண்டும் தலைபகுதிக்கு கொண்டு வருவதே குண்டலினி யோகம் . குண்டலினி ஆற்றலானது எழும்பும் போது அபரிமிதமான ஆற்றல் உடம்பிற்குள் பாயும்.

★ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு யோகி குண்டலினி ஆற்றலை ஒவ்வொரு மையமாக மேலே கொண்டு வர ஒவ்வொரு மையத்திற்கும் இரண்டு ஆண்டுகள் தவம் செய்ய வேண்டும். மூலாதாரம், சுவாதிஷ்டானம் , மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்கினை, துரியம் இப்படி 12 அல்லது 14 வருடங்கள் தவம் செய்ய வேண்டும். அப்போதுதான் குண்டலினியை மேலே ஏற்ற முடியும். குண்டலினி ஆற்றலை மேலே எழுப்ப முடியாமல் 100% ல் 99% யோகிகள் இறந்து விடுவார்கள். 1% யோகிகள் குண்டலினி ஆற்றலை மேலே எழுப்பி ஞானம் அடைவார்கள். முந்தைய காலத்தில் குண்டலினி யோகம் செய்வது கடினமாக இருந்தது.


★ஆனால் இப்போது குண்டலினி யோகம் செய்வது எளிது. ஒரு குருவின் உதவியுடன் குண்டலினி ஆற்றல் தட்டி எழுப்பி ஆக்கினைக்கு கொண்டு வர முடியும். இது வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த simplify kundalini Yoga. இந்த குண்டலினி யோகம் மூலமாக குண்டலினி ஆற்றல் உடம்பிள் அதிகரிக்கும் போது சமநிலைக்கு கொண்டு வர ஒரு தவ முறை உள்ளது. அந்த தவ முறைக்கு பெயர் சாந்தி தவம். இந்த தவத்தின் மூலமாக குண்டலினி ஆற்றலை தாங்க முடியாத நிலை வரும் போது மூலாதாரத்தல் ஆற்றலானது சேமிக்கப்பட்டுவிடும்


★ இந்த யோக முறை உலக நாடுகளால் ஏற்றுகொள்ளபட்ட யோக முறை. அரசாங்கம் இந்த யோக முறையை பள்ளிகள் , கல்லூரிகளில் கற்க வேண்டும் என சட்டதிட்டம் கொண்டுவந்துள்ளது.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
அடுத்து வருவது;

இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா(மனித உடம்பினுள் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சித்தர்கள் கண்டுபிடித்த easy technology)
மனிதனுக்கு வரும் அனைத்து நோய்களுக்கும் காரணம் கழிவுகளை வெளியேற்றாமல் இருப்பதே . . அதற்கு என்ன என்ன உடல்நல குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.
நன்றி.

வாழ்க வளமுடன்

User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உயிரின் இருப்பிடம்(மையம் ) எங்கு உள்ளது?

Post by marmayogi » Sun Apr 10, 2016 9:26 pm

Definitely
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”