ஜீவசமாதிக்கும் ஒளிஉடலுக்குமான ஒற்றுமை வேற்றுமைகள் யாவை?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஜீவசமாதிக்கும் ஒளிஉடலுக்குமான ஒற்றுமை வேற்றுமைகள் யாவை?

Post by marmayogi » Mon Apr 13, 2015 12:25 am

Ragunath என்ன அன்பர் கேள்வி கேட்டு இருந்தார்.

மர்ம யோகி ஐயா சமாதி சென்ற பெரியவர்கள் அனைவரும் முக்தி அடைந்தார்களா???
ஜீவசமாதிக்கும் ஒளிஉடலுக்குமான ஒற்றுமை வேற்றுமைகள் யாவை??? சித்தி முக்தி ஞான தெளிவிற்காக மட்டுமே.....கேள்வியில் தவறு இருப்பின் பொருத்து கொள்க....

எனது பதில்:

ஞானம் அடைவது 35 mark வாங்கி pass செய்ததற்கு சமம்

சமாதி என்பது ஊர் மக்களை வர வைத்து சொன்ன நாளில், சொன்ன நொடியில், சொன்ன நேரத்தில், தியான நிலையில் இருந்து உயிரை பிரித்து இறைநிலையோடு ஐக்கியம் ஆவதாகும். ஜீவ சமாதி என்பது ஞானம் அடைந்ததை விட உயர்ந்த வெற்றி. இது 50 mark வாங்கி pass செய்வது மாதிரி.


இதைவிட உயர்த வெற்றி என்பது நம் உடம்பே ஒளி தேகமாக மாரும். இதற்கு பெயர் மாகா காரண சமாதி. வானத்தில் இருக்கும் 27 நட்சத்திரம் அனைத்தும் 27 ரிஷிகள். இவர்கள் உடம்பு ஒளியாக மாறியது. ராமலிங்கம் வள்ளலார் தேகம் ஒளி உடம்பு . இதுவே இருப்பதில் உயர்ந்த வெற்றி. இது 100 mark வாங்கி pass செய்ததற்கு சமம்.

சிக்தி என்பது ஞானம் அடைவதற்கு கொடுக்கபடும் ஒரு award மாதிரி. அல்ப சித்து , உயர்ந்த சித்து என்று இரண்டு உள்ளது . அல்ப சித்து என்பது கையில் திருநீறு வரவைப்பது , எலுமிச்சை பழம் வரவைப்பது. இது குட்டி சைத்தான் , துர் தேவதைகள் அல்ப சித்துக்கு உதவிகள் செய்யும்.

ஆனால் அற்புத சித்து என்பது இரும்பை தங்கமாக மாற்றுவது , ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரந்து செல்வது , தேவையான பொருளை உடனடியாக வரவைப்பது , இதற்கு மகான்கள் , சித்தர்கள் உதவி செய்வார்கள்.

முக்தி அடைந்தவர்கள் யாரும் சித்துகளை உபயோகிக்க மாட்டார்கள். அவர்கள் இறைநிலையில் ஐக்கியம் ஆகி இருப்பார்கள். எனவே அவர்களுக்கு தேவை என்பது இருக்காது. எந்த பற்றும் இல்லாமல் இருப்பார்கள். யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்வார்கள். தான் ஞானி என்று காட்டி கொள்ள மாட்டார்கள். இவர்கள் மாகா காரண தேகத்தை பெற்று இருப்பார்கள். இவர்கள் நினைத்தால் ஒளியாக மாறி பிரபஞ்சத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். இதுவே உயர்ந்த வெற்றி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”