உண்மையில் கடவுள் என்பது என்ன?.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உண்மையில் கடவுள் என்பது என்ன?.

Post by marmayogi » Sat Apr 11, 2015 8:03 pm

Image
உண்மையில் கடவுள் என்பது என்ன?.
★★★★★★★★★★★★★★★★

★இறைநிலை, கடவுள், பரம்பொருள், கடவுள் துகள், இறைதுகள், கும் இருட்டு, சிவன், சிவகலம், சுத்தவெளி , வெட்டவெளி இதுவே கடவுள். கடவுள் என்பது ஜடபொருள். கடவுளை வெட்டவெளியாக வணங்க வேண்டும். கடவுளுக்கு உருவம் என்பது இல்லை. அது ஒரு இறைதுகள் . மனித உடம்பினுள் இருக்கும் உயிர் இறைதுகளால் ஆனது. மனிதனே கடவுள். மனிதன் கடவுளாக மாறலாம் என்பதை உணர்த்துவதற்காக சிவனை உருவமாக சித்தர்கள் வழிபட்டனர்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

★சுத்தவெளி தான் இறைநிலை. இதுவே தான் கடவுள் ஆகும். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப் பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து, அதன் சூழ்ந்தழுத்தும் ஆற்றலாலேயே மிக விரைவான தற்சுழற்சி பெற்ற நுண்துகள்கள்தான் முதல்நிலை விண் எனும் பரமாணு.

★இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும். முதல் நிலை விண்களின் விரைவான தற்சுழற்சியானது அதைச் சுற்றியுள்ள தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும்போது எழுகின்ற நுண் அலைகள் தாம் காந்தம் எனும் நிழல் விண்கள்.

★நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தைத் தாங்க முடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்பனவாகும். இறைவெளியானது முதல் விண், நிழல் விண், காந்தம், காந்தத் தன்மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை, இவற்றை மனதில் பதிய வைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால், ஆராய்ந்தால் பேரியக்க மண்டலத் தோற்றம், இயக்கம், விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும்.

★ பரமாணு முதல் கொண்டு எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும். எல்லா இடங்களிலும், எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது.

வேதாத்திரி மகரிஷி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”