திருக்கோயில் வழிபாட்டு முறை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by RJanaki » Tue Mar 13, 2012 1:28 pm

திருக்கோயில் வழிபாட்டு முறை

திருக்கோயினுள் நுழைவதற்கு முன்னதாகக் கண்ணில் தெரியும் பெரிய கோபுரம் ராஜ கோபுரம் எனப்படும் . அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும்.உள்ளே நுழைந்தவுடன் பலிபீடம் காணப்படும்.அதனருகில் சென்று கீழே வீழ்ந்து வணங்க வேண்டும்.அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும்.கொடிக் கம்பத்தை அடுத்துக் காணப்படுவது தெய்வத்திற்குரிய ஊா்தி.சிவன் கோயிலாயின்
நந்தியும்.திருமால் கோயிலாயின் கருடனும் அமாந்திருக்கும். அவற்றை வழிபட்டுவிட்டுச் சிவன் கோயிலாய் இருந்தால் விநாயகர்.சுப்ரமண்யர். சிவபெருமான்.அம்பிகை துா்க்கை ,சண்டிகேசர்,பைரவர் ஆகியோரையும்,திருமால் கோயிலாயின் மஹாவிஷ்ணு.ராமர்,கிருஷ்ணா், நரசிம்மா்,ஆஞ்சநேயா்,சக்கரத்தாழ்வார், ஆண்டாள்,சரஸ்வதி.இறைவனடியார்கள் ஆகியோரையும் தனித்தனியே துதிக்க வேண்டும்.கோயிலை விட்டு வெளியே வரும்போது சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மறுபடியும் கொடிக்க்பத்திற்கு அருகில் நமஸகாரம் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by muthulakshmi123 » Tue Mar 13, 2012 9:34 pm

ஜானகி திருக்கோவில் வழி பாட்டு முறைகளை நன்றாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்..
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by udayakumar » Wed Mar 14, 2012 12:31 am

இது கண்டிப்பாக எனக்குத் தேவை ஏனெனில் எனது அம்மா என்னை கோயிலுக்குப் போகச் சொன்னால் எனக்காக நீங்களே கும்பிடுங்கள் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுவேன் .. இன்று வரையும் இந்த ஒழுங்கு முறை எனக்குத் தெரியாது.. இதனை இங்கு கொடுத்தமைக்கு ஜானகிக்கு நன்றி..
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by RJanaki » Thu Mar 15, 2012 9:34 am

உங்கள் பாரட்டுக்கு நன்றி முத்துலட்சுமி,உதயகுமார். :thanks: :thanks: :thanks: :thanks: :thanks:
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by udayakumar » Thu Mar 15, 2012 9:44 pm

ஜானகி வினாயகர் கோயிலில் உள்ளே போனால் எவ்வாறு அமைப்பு இருக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறையை கொஞ்சம் சொல்லுங்கள்.. நான் கோயிலுக்கு போக வேண்டும்..
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by RJanaki » Sat Mar 17, 2012 5:21 pm

நாம் தினமும் கோயிலுக்குப் போய் கடவுளை வணக்குவது நல்லது தான்.ஆனால் இது எல்லாராலும் இயலாதே ஒன்று அதனால் செவ்வாய்,வெள்ளி,சனி கிழமை நாட்களிலும் மற்றும் விசேட நாட்களில் கோயிலுக்குச் சென்று வணங்கலாம்.காலையும்,மாலையும்,கோயிலுக்குச் செல்லதற்கான சிறப்பான நேரங்களாகும்.

கோயில் சென்று உடன் அங்கு தண்ணிர் குழாய் இருந்தால் கை,கால் சுத்தம் செய்து.கடவுளை வணங்கும் போது முதலில் துவாரபாலகர்களை வணங்க வேண்டும்.பின்னர் வாகனத்தை வணங்கி அவரது அனுமதியை வேண்டிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.

உள்ளே போய் விநாயகப் பெருமான்க்கு முதல் வணக்கம் செய்ய வேண்டும்.நாம் அறிந்தோ,அறியாமலோ ஏதாவது தவறு செய்திருந்தால் அதனை மன்னிக்கும் படி அவர்முன் தோப்புக்கரணம் மிட்டு வணங் வேண்டு்ம்.

முதலில் கைகள் இரண்டையும் முட்டியாகப் பிடித்திக்கொண்டு நெற்றியிலே மூன்று முறை குட்டிக் கொள்ள வேண்டும்.

Image
பின்பு நமது வலது காதை இடது கையாலும்.இடது காதை வலது கையாலும் மாறிப் பிடித்துக்கொண்டு மூன்று முறை தாழ்ந்து எழந்து தோப்புக்கரணம் போட்டுக் குப்பிட வேண்டும்.

Image
உங்களால் முடிந்தால் ஒரு நெய் தீபம் ஏற்றவும்,அல்லது கற்பூர தீபம் ஏற்றவும்.

விநாயகப் பெருமானின் முதுகில் சனி பகவன் இருப்பார்.அதனால் தவறிக்கூட முதுகில் கை வைக்கூடாது.

சந்நிதியை வலம் புறமாகச் சுற்றிவர வேண்டும்.மூன்று முறை வலம் வரவேண்டும்.

நமஸ்காரம் செய்போது கடவுள் சந்நிதி கிழக்குத் திசை அல்லது மேற்குத்திசை இருந்தால் நாம் வடக்குச் திசை நோக்கி செய்லாம்.ஒரு போதும் கிழக்கு அல்லது வடக்குத் திசைகளை நோக்கி கால் நீட்டி நமஸ்காரம் செய்ய கூடாது.

நமஸ்காரம் செய்போது பெண்ணாக இருந்தால்,முட்டி இட்டு ஜந்து புலன்கள் நிலத்தில் படுமாறு வணங்க வேண்டும்.
ஆண்கள் என்றால் குாப்புற படுத்து அனைத்து புலன்கள் நிலத்தில் படுமாறு வணங்க வேண்டும்.

விநாயக கோயில் சென்று கடவுளின் நல்லருளைப் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by nadhi » Sat Mar 17, 2012 8:57 pm

janaki madam வழபாட்டு முறை ரொம்ப பிடித்திருக்கு.அதிலும் விநாயகர் விழிபாடு.தெரியாத விஷியங்கள் தெரிந்து கொண்டேன்.
udayakumar
Posts: 198
Joined: Tue Mar 06, 2012 9:39 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by udayakumar » Wed Mar 21, 2012 2:06 am

கண்டிப்பாக இதையெல்லாம் கூறிவிட்டீர்கள் கோயிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டு வருவது முதலில்..
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by muthulakshmi123 » Wed Mar 21, 2012 7:16 am

udayakumar wrote:கண்டிப்பாக இதையெல்லாம் கூறிவிட்டீர்கள் கோயிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டு வருவது முதலில்..

உங்கள் நண்பரை பார்க்க போவது போல முதலில் கோவிலுக்கு போங்கள்..கண்டிப்பாக வாரம் ஒரு முறையாவது போக முயற்சி செய்யுங்கள்...இந்த பழக்கமே தொடர் வழக்கமாக மாறி விடும்.
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: திருக்கோயில் வழிபாட்டு முறை

Post by RJanaki » Wed Mar 21, 2012 5:32 pm

கோயில் போவதால் ஏற்படும் நன்மைகள் ஏறலாம் அதனால் முதலில் ஒரு முறை கோயிக்கு சென்று பாருங்கள். :god: :god: :god:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”