உயிரின் அளவு,எடை(size, weight)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உயிரின் அளவு,எடை(size, weight)

Post by marmayogi » Fri Apr 10, 2015 10:05 am

Image
உயிரின் அளவு,எடை(size)
★★★★★★★★★★★★★★★★★

''மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன்
கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே''
:-திருமூலர்

☆உடம்பில் இருக்கும் உயிரின்
வடிவானது, ஒரு பசுவின்
மயிரொன்றை நூறாக கூறிட்டு
அதில் ஒன்றை எடுத்து அதை
ஆயிரமாக கூறுசெய்து. அந்த
ஆயிரத்தில் ஒன்றின் அளவே உயிரின்
அளவு. இந்த உயிரை microscope ல் கூட காண முடியாது. அவ்வளவு மிக நுண்ணுய துகள். இந்த நுண்ணிய துகளே 60 kg எடை உள்ள ஒரு மனிதனை இயக்குகிறது என்று நினைக்கும் போது மனிதன் மாபெரும் ஆற்றல் வாய்ந்தவனாக கருதபடுகிறான் . இதை யாரும் உணர்வதே இல்லை .

☆இந்த நுட்பமான உயிரில் இறைவன்
உள்ளான் என்றும். அந்த இறைவனை
தவத்தின் மூலம் அறியலாம் என்றும்
திருமூலர் கூறுகிறார்.

☆உயிரிலிருந்து வெளிபடும் ஜீவ காந்த ஆற்றலே உடல் முழுதும் பரவி கொண்டு இருக்கிறது.மிக மிக நுண்ணிய உயிரிலிருந்து உயிர் துகள்கள்(ஜீவகாந்தம் ) உடல் முழுதும் பரவி கொண்டு இருக்கிறது. கோடிக்கணக்கான இறைதுகள்கள் ( உயிர்துகள்) விண்ணில் தன்னை தானே சுற்றி கொண்டு இருக்கிறது . ஒரு சிறிய இறைதுகளே மனிதன் .

☆இதுவே கடவுள் துகள், இறைதுகள் ,உயிர், பரமணு என்று பெயர் . மனித உடம்பே இறைதுகளால் ஆனதால் மனிதன் கடவுளுக்கு சமமாக கருதப்படுகிறான். இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் ""நான் யார்"" என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

கேள்வி;
உயிரின் இருப்பிடம்(மையம் ) உடம்பில் எந்த பகுதியில் உள்ளது?. ஒரு சிலர் தலையின் நடுபகுதியில் உள்ளது என்கிறார்கள். ஒரு சிலர் இதயத்தில் உள்ளது என்பார்கள். உண்மையில் உயிர் எங்கு உள்ளது?

இந்த கேள்விக்கான விடை 100% ல் 99% மக்களுக்கு தெரியாது. அடுத்து வரும் பதிவில் உயிரின் இருப்பிடம் எங்கு உள்ளது என்பதை பார்ப்போம். நன்றி.

வாழ்க வளமுடன்.

தொடர்சி
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உயிரின் அளவு,எடை(size, weight)

Post by marmayogi » Sun Apr 10, 2016 9:25 pm

Of course
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: உயிரின் அளவு,எடை(size, weight)

Post by kumarsvm » Sun Apr 10, 2016 10:59 pm

வேறு ஒரு பதிவில் இதை படித்துள்ளேன் ஞாபகம் இல்லை.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”