பசியை வெல்லும் யோகம் ( அங் முத்திரை , கேசரி முத்திரை)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பசியை வெல்லும் யோகம் ( அங் முத்திரை , கேசரி முத்திரை)

Post by marmayogi » Mon Apr 06, 2015 11:58 pm

Image
பசியை வெல்லும் யோகம் ( அங் முத்திரை , கேசரி முத்திரை)
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

★அங் முத்திரை விளையாட்டாக செய்தால் தானாகவே நாக்கு உள்நோக்கி செல்லும். தவம் செய்யும் போது அங் முத்திரை செய்து பழகினால் இயல்பான நிலையில் தானாகவே நாக்கு உள் நாக்கிற்கு மேலே தொடும். அங் முத்திரை செய்வது மிகவும் எளிது . நாக்கை மடித்து மேல் தொண்டையில் நாக்கின் நுனி படுமாறு வைப்பதே அங் முத்திரை.


அந்த சமயத்தில் அமிழ்தம் சொட்டு சொட்டாக சுரக்கும். அமிழ்தம் தேன் போல இனிக்கும். அந்த இனிப்பு சுவையே அமிர்தம் என்கிறார்கள். இதையே பேரின்பம் என்று கூறுகிறார்கள். அமிழ்தம் சுரந்துவிட்டால் பசி எடுக்காது. 24 மணி நேரமும் அமிழ்தம் அண்ணாக்கு மேலே சுரப்பதனால் பசியை வெல்லும் தன்மை வரும். கேசரி யோகம் சித்தி ஆகும். பசிக்கு உணவே கிடைக்கவில்லை என்ன நிலை வரும்போது எவர் உதவியையும் தேட வேண்டியதில்லை. ஒரு மண் புழு தனக்கு தானே recycling செய்து கொள்வது போல மனிதனும் தனக்கு தானே உயர் சக்தியை recycling செய்து கொள்ளலாம்.

★அந்த சமயத்தில் மூச்சு காற்று மூக்கின் வழியாக செல்லாது. அதற்கு பதிலாக சுழுமுனை நாடி திறந்து முதுகுதண்டு மூலமாக செல்லும். சுழுமுனை நாடி திறந்துவிட்டால் மரணம் இல்லை. மரணத்தை வென்ற மகான்கள் இந்த உலகில் இருக்க விரும்ப மாட்டார்கள் . அவர்கள் உடம்பில் இருந்து உயிரை பிரித்து சிவகலத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள். அதுவே முழுமையான வீடுபேறு.

★யோகம் என்பதை விளையாட்டாக செய்ய வேண்டியது தான். எதையும் serious ஆக செய்தால் ஆபத்து. முனிவர்கள் , சித்தர்கள் அட யோகம் செய்வார்கள். ஆனால் இல்லறத்தில் இருப்பவர்கள் கடும் தவம் செய்ய வேண்டிய தேவை இல்லை . எந்த செயலையும் தியானமாக மாற்றலாம். நடக்கும் போது, உண்ணும் போதும் , உறங்கும் போதும் சிவலயத்தில் இருந்தால் அது 24 மணி நேரமும் தவம் செய்ததற்கு சமம்.

வாழ்க வளமுடன்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”