ஒன்பது வகையான அகத்தவ பயிற்சி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஒன்பது வகையான அகத்தவ பயிற்சி

Post by marmayogi » Sun Mar 29, 2015 4:21 pm

Image
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


தியானம் என்ற மனதுக்கான அகத்தவப் பயிற்சியில் மன அலைச்சுழல் குறைந்து மன அமைதி பெற்று இறைநிலையோடு ஒன்ற மகரிஷி ஒன்பது வகையான அகத்தவ பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார். அவையாவன


1) ஆக்கினை தவம்(விழிப்புணர்வு பெற புருவ மத்தியில் உயிரை கவனிக்கும் பயிற்சி)

2) சாந்திதவம் (உடலை சூடான நிலையிலிருந்து எப்போதும் சமநிலையில் வைத்திருக்கும் மூலாதாரத்தில் உயிரை கவனிக்கும் பயிற்சி)

3) துரியதவம் (பூர்வ நிலையை அறிந்து தூய்மை பெறுவதற்காக தலை உச்சியில் உயிரை கவனிக்கும் பயிற்சி.)

4) துரியாதீத தவம் (அண்ட சராசரங்களையும் கடந்து சுத்தவெளியோடு கலக்கும் பயிற்சி)

5) பஞ்ஞேந்திரிய தவம் (நம் பஞ்ச இந்திரியங்களான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவற்றை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவற்றின் மீது இயற்றும் தவம்)

6) பஞ்ச பூத நவக்கிரக தவம் ( நிலம், நீர், காற்று, நெருப்பு,விண் எனும் பஞ்ச பூதங்களோடு ஒன்றி அவற்றிலிருந்து நன்மை பெறுவதோடு நவக்கிரகங்களோடும் கலப்பு பெற்று நன்மையே பெறும் வகையில் அவற்றோடு ஒன்றி அவற்றிலிருந்து வரும் அலைகளை நட்பாக்கிக் கொள்ளும் தவப் பயிற்சி.)

7) ஒன்பது மைய தவம் (நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களின் மீது தவம் செய்து, பின் சந்திரன், சூரியன், பிரபஞ்சம் என கடைசியில் எல்லாம் வல்ல இறைநிலையோடு கலக்கும் பயிற்சி)

8) நித்தியானந்த தவம் (மூச்சைக் கொண்டு உடலை கல்பமாக்கி, மன அலைச்சுழலை குறைத்து, உயிரை கெட்டிப்படுத்தும் தவம் ([பிராணாயாமத்தின் முக்கிய பயிற்சி]).

9) இறைநிலைத் தவம் (பரம்பொருளோடு கலக்கும் தவம்).

பிரம்ம ஞானம்
★★★★★★★

உடற்பயிற்சி, தவத்துடன் மனம் அமைதி நிலையில் நிலைக்கும்போது பூர்வ ஜென்ம பதிவுகளும், பிறந்து 3 வயதுக்குப் பின் நாம் செய்த செயல்களும், எண்ணிய எண்ணங்களும் படமாய் மூளையில் ஓட ஆரம்பிக்கும். அந்த நிலையில் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும். அதற்காக அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி வகுத்த பயிற்சிதான் அகத்தாய்வு என்ற சிறப்பு பயிற்சி முறை. இதில் எண்ணம் ஆராய்தல், சினம் தவிர்த்தல், ஆசை சீரமைத்தல், கவலை ஒழித்தல், நான் யார்? என்று அகத்தாய்வு பயிற்சி முறைகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.


இந்த பயிற்சிகளை முறையாக பயின்ற அன்பர்களுக்கு பிரம்ம ஞானம் என்னும் பிரபஞ்ஞ இரகசியங்களை பேராசிரியர்கள் மூலம் கற்று இயற்கை மற்றும் அதன் மூலமான இறைநிலை இரகசியங்களை அறிந்து கொள்ளும் வகையில் அருட்தந்தை மனவளக்கலையை வகுத்துக் கொடுத்துள்ளார்.
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

Re: ஒன்பது வகையான அகத்தவ பயிற்சி

Post by thiruusha » Mon Mar 30, 2015 9:46 pm

Online work vidalaam entry mud is why hub it ten ungal face book I'd kodungal
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: ஒன்பது வகையான அகத்தவ பயிற்சி

Post by marmayogi » Mon Mar 30, 2015 10:30 pm

thiruusha wrote:Online work vidalaam entry mud is why hub it ten ungal face book I'd kodungal
Facebook username: marmayogi

Vazga valamudan. guruve thunai :ro:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”