உயிரின் படர்கை நிலை மனம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உயிரின் படர்கை நிலை மனம்

Post by marmayogi » Mon Mar 23, 2015 8:21 pm

உயிரின் படர்கை நிலை மனம்

★உயிர்த்துகளில் ஆதியெனும் பிரம்மம் அறிவாக ஒடுங்கி உள்ளது. அது உயிர்த்துகளிலிருந்து எழும் அலை மூலம் படர்க்கை நிலையில் மனமாக இயங்க்குகிறது. உயிரினுடைய அலை இயக்கம் ஒரு அளவில் வந்து கொண்டு இருக்கிறது. ஒரு அளவில் போய்க்கொண்டேயும் இருக்கிறது.. அது உயிர்த்துகளிலே தோன்றுகிறது. விரிந்து பரந்து பிரம்மத்திலே லயமாகிகொண்டே இருக்கிறது.அலை புறப்படுகிறது.

★அது பரவி விரித்து பரவெளியில் ஒடுங்க்கி போகிறது.இவ்வாறு புறப்படுவதற்கும் ஒடுங்க்குவதற்கும் மத்தியிலே இருக்கக்ககூடிய ஒரு இயக்கம்தான் அழுத்தமாக அவ்வழுத்தம் ஒன்றோடு ஒன்று மோதும்போது ஒலியாக ஒளியாக,சுவையாக மனமாக ஆறுவகையிலேயே உன்னதமான வியக்கதகு ஆற்றலாக உள்ளது..ஆகவே மனம் என்பதை எடுத்துக்கொண்டோம் ஆனல் அது உயிரிலிருந்து வந்து கொண்டே இருக்கும் அலை இயக்கம் தான்.அந்த அலை இயக்கம் தொடர்த்து வந்து கொண்டே இருக்கிறது. இப்போது சிறிது நேரத்துக்குமுன் நான் எதையோ ஒன்றைப் பார்த்தேனே,அதே அலை மூலம் தானா இப்போது மீண்டும் பார்கிறேன் என்றால் இல்லை.

★ அந்த அலைஅந்தப் பொருளைத் தொட்டபோது அதன் மூலமாக இங்கே பதிவாகியிற்று பாருங்க்கள், இதைப் பார்த்தோம்' என்று-அதோடு அது போயிற்று, மறுபடியும் உயிரிலிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கிறது அலை.இது ஒரு தொடர் நிகழ்ச்சியாகும்.
உதராணமாக, நாம் ஆற்றைப் பார்கிறோம். ஆற்றில் தண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து ஒர் ஆறு நிரந்தரமாக இருக்கிற மாதிரி தெரிகிறது.ஒரு நிமிடத்துக்கு முன்னால் ஆற்றிலே நாம் பார்த்த தண்ணிர் இப்போது அந்த இடந்தில் இல்லை. அது போய்விட்டது. புதிதாகத்தான் இவ்போது நீர் வந்து கொண்டுயிருக்கிறது. ஆனாலும், நாம் தொடர்ந்து ஒர் ஆறு இருப்பதாக வைதுக்கொள்கின்றோம். அது போன்றதே மனம் என்ற ஒரு இயக்கம்.உயிரினுடைய ஆற்றல் தொடர்ந்து இயங்க்கிகொண்டே இருகிறபோது அந்த அலை வந்துகொண்டே இருக்கிறது.அதை எந்தெந்த இடத்தில் பாய்ச்சுகிறோமோ,அந்தப் பாய்ச்சலுக்குத்தக்கவாறு இங்கே பதிவைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறது.

★மனம் ஒரு நிரந்திரமான பொருள் இல்லை.தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கக்கூடிய ஒருஇயக்கம் தான்.
மனம் என்று சொல்கிறோம்,எண்ணம் என்றும் சொல்கிறோம், இரண்டும் ஒன்றேதான். ஆனால் ஏன் அதை எண்ணம் என்று சொல்கின்றோமென்றால் மனம் இயங்கும்போது 4 வகைக் கணிப்பாக இயங்குகிறது.-காலமாக, தூரமாக-பருமனாக-வேகமாக. எந்த இயக்கத்திலே, எந்தப் பொருளைப்பற்றி நினைந்தாலும் காலம்,தூரம்,பருமன்,வேகம் என்ற நாங்கு பரிமாணத்தைக் கணகிடுவதாலே கணக்கிடல் என்றசொல் எண்ணுதல் என்று வந்து,அந்த எண்ணுதலிருந்து எண்ணம் என்பதாக வந்தது.

★ எண்ணம் என்றாலே எண்ணுதல் என்ற பொருளை உடையது.ஆகையினாலே மனத்துக்கு எண்ணம் என்ற பெயரும் உண்டாயிற்று.

மனமே அறிவாக இயங்கும் பத்து படி நிலைகள் ;_
1.உணர்ச்சி 2. தேவை 3. முயற்சி 4. செயல் 5. விளைவு 6.அனுபோகம்7.அனுபவம்8.சிந்தனை 9தெளிவு 10.முடிவு.
இதையே புத்தி,சித்தம்-அகங்காரம் இவை அனைத்தும் சேர்ந்து மனம்.

;- வேதாத்திரி மகரிஷி
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உயிரின் படர்கை நிலை மனம்

Post by marmayogi » Sat Jul 18, 2015 7:45 pm

மனம் என்ற நிலத்தில் எது போட்டாலும் விளையும் ஆனால் எது போட வேண்டும் என்று சிந்தித்து போடவேண்டும்.
அருள்தந்தை!
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உயிரின் படர்கை நிலை மனம்

Post by marmayogi » Sat Aug 22, 2015 9:07 am

மரணத்திற்கு அஞ்சாத கடமை (1957)

மரணத்தை எதிர்னொக்கிப் பிறந்த நாமோ
மதிப்பிலே இன்பதுன்பம் அனுப வித்து,
மரணமென்ற இரத்தஓட்ட நிறுத்தத் தின்பின்
மறந்துவிடு வோம்பின்னர் ஒன்றாய்ப் போவோம்.
மரணத்திற் கிடையேநம் தேவை எல்லாம்
மனிதஇனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்.
மரணத்திற் கஞ்சாமல் மறந்திடா மல்
மதிஉடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்.

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”