வடலூர் சத்தியஞானசபை “ஜோதி தரிசனம்” – விளக்கம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வடலூர் சத்தியஞானசபை “ஜோதி தரிசனம்” – விளக்கம்

Post by marmayogi » Sun Mar 08, 2015 10:20 am

வள்ளல் பெருமான் சத்திய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார்.

ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறி அருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே சத்திய ஞான சபை.
.
சத்திய ஞான சபை எண் (8) கோண அமைப்பு உடையது.இந்த அமைப்பு நமது தலை அமைப்பை ஒத்தது ஆகும்.  சத்திய ஞான சபையின் முன் பக்கம் இரு புறமும்  சிற்சபை , பொற்சபை என்று இரு அறைகள்  உள்ளது.  உள் நடுவே- ஞானசபை என்ற  அறை உள்ளது. இந்த ஞான சபையில் தான் தை பூச தினத்தன்று  7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டுவார்.

தை பூச தினதன்று முதல் ஜோதி காண்பிக்கப்படும் நேரத்தில் வலது பக்கம் சூரியனும் , இடது பக்கம் சந்திரனும் நேர் கோட்டில் இருக்கும். நமது உடலிலும் வலது கண் ஒளியும் (சூரிய ஒளி) , இடது கண் ஒளியும்(சந்திர ஒளி)  உள் சென்று அக்னி கலையோடு சேர்வதை குறிக்கவே இந்த ஏற்பாடு.

 முன்வாசலில் உள்ள சிற்சபை , பொற்சபை நம் கண்களை குறிப்பது. ஞான சபை நம் தலை உள் நடுவில் உள்ள ஆன்ம ஸ்தானத்தை (நம் இரு கண்கள் உள் சேரும் இடம்) குறிப்பது.

.
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் ஆன நமது கர்ம வினைகள் எழு திரைகள் போன்று  அமைந்து நம் ஆத்ம ஜோதி தெரியாதபடி மறைத்து கொண்டிருக்கும். இவ்வேழு திரைகள் விலகினால் தான் நமது ஆன்ம ஜோதி தரிசனம் கிட்டும்.

நமது தலை உள் நடுவில் உள்ள ஆன்ம ஒளி (அக்னி) நமது  இரு கண்களில் சூரிய ஒளியாகவும் , சந்திர ஒளியாகவும் துலங்குகிறது. நம் உயிரை பற்றி உள்ள வினைகள் நம் இரு கண்மணியில் நடுவில் உள்ள ஊசி முனை அளவு துவாரத்தை மூடியுள்ளது.  இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது.

கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.(வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே).
குருவிடம் தீட்சை பெற்று- நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி நினைந்து, உணர்ந்து தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும்.
குருவிடம் தீட்சை பெறுவதையே வள்ளல் பெருமான் “தகுந்த ஞான ஆசிரியரிடம் உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்” என்கிறார்.

நமது உடலிலும் வலது கண் ஒளியும் (சூரிய ஒளி) , இடது கண் ஒளியும்(சந்திர ஒளி)  உள் சென்று அக்னி கலையோடு சேரும் போது நமது வினை திரைகள் நீங்கி ஆன்ம ஜோதி தரிசனம் நமக்கு கிட்டும்.

“சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் அனைவரும் தங்களுள் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்று கூறிப்பிடுகிறார்.

இதையே அகஸ்தியர் தனது துறையறி விளக்கத்தில்
“சுடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” என்று  கூறிபிடுகிறார்

சத்ய ஞான சபையில் வெளியே வாசலில் வள்ளலார் பொரிந்த வாசகம் “புலால் கொலை தவிர்த்தவர் மட்டுமே உள்ளே வரவும்” என்று. இதன் மூலம் நம் வினையை வெல்ல, நம்மை உணர, ஆண்டவனை அடைய முதல் செயல் புலால் கொலை முற்றும் தவர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு புலை, கொலை தவிர்த்தவர் தான் தம்முள் உள்ள ஆன்ம ஜோதியை தரிசிக்க தகுதி பெற்றவர் ஆவர்.

.
அன்புடையீர் எனவே புலால் உணவை தவிர்த்து , மது , புகை போன்ற போதை பழக்கத்தை விட்டு வள்ளல் பெருமான் கூறியபடி அகவினத்தாராக மாறுங்கள். வடலூர் வந்து சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் காணுங்கள்.
.
குருவிடம் தீட்சை பெற்று தவம் செய்து வினை திரையை விலக்கி உங்களுள் ஆன்ம தரிசனம் பெறுங்கள். வள்ளல் பெருமான் தங்களிடம் இருந்து காத்து வழிநடத்துவார்

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க.
கொல்ல நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக.

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”