பேசா மந்திரம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பேசா மந்திரம்

Post by marmayogi » Sat Mar 07, 2015 8:42 pm

★அகத்தியர் தமது அடுக்கு நிலைப் போதத்தில் இவ்வாறு கூறுகிறார்.
சொல் பிறந்த விடமெங்கே ,முப்பாழ் எங்கே
சொல் பிறக்குமிடம் இந்த மறைமுகமான இடம்.இந்த இடத்தில் பேச்சு நடந்து கொண்டே இருக்கிறது.


’இந்தப் பேச்சு நடப்பதையே ‘ ‘பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி’.உயிர் இருப்பதின் அடையாளமான இந்த இடத்தில் பேச்சு நடந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது, யமன் என்ற பெரும்பூனை உயிரை எடுக்க வரும் போது இந்த இடம் பேசாமல் இருக்கும் என்பதையே கூறுகிறார்கள்.
“பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே


மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்


காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.’
-திருமந்திரப் பாடல் எண்: 1579.
பேச்சற்ற இன்பம் அதுவே மவுனம்.அதன் இன்பமான முடிவு சமாதி,சிவானுபத்தில் சாலோகம் ,சாமீபம்,சாயுச்சியம் என மூன்றாக கூறுவார்கள்.சாலோகம் என்பது இப்போது நாம் செத்துக் கொண்டிருக்கும் லோகமே.சாமீபம் என்பது சிவனுக்கு சமீபமாக(பக்கத்தில்) செல்வது.சாயுச்சியம் என்பது இறையனுபவத்தின் உச்சியேயாகும்.

அந்த சாயுச்சியம் என்பது சிவமாகவே ஆகிறதாகும்.அந்நிலை அடைந்தால் (மாள்வித்து) செத்தாரைப் பொலாவோம்.செத்தாரைப் போலத்திரி என்று சித்தர் பாடல்களில் குறிப்பிடும் அந்த நிலைஅடைந்தால் செத்தாருக்கு இருப்பதைப் போல் சிந்தனையற்று, நம்மில் உள்ள ஓரிடம் மாறும்.
அதற்கு காச்சற்ற சோதியான ரவி,மதி ,சுடர் முச்சுடர் கைக்கொண்டு வாய்த்த புகழ் மாள தாள் என்ற (சாகாக்கால்)காலைத் தந்து மன்னும் ( பூமியில் நிலைபெற வைக்கும்)
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”