மனிதனிடம் இருக்கும் சக்திவாய்ந்த தேகம்- சூக்கும சரீரம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனிதனிடம் இருக்கும் சக்திவாய்ந்த தேகம்- சூக்கும சரீரம்

Post by marmayogi » Thu Mar 05, 2015 4:51 pm

★மரணம் என்பது இந்த பூத உடலுக்கு மட்டும்தான் . இந்த பூத உடல் அல்லது ஸ்தூல உடல் உருவாக்கப் படுகிறது அதேபோல் சூக்கும உடலும் இயற்கையால் உருவாக்கப் படுகிறது . ஸ்தூல உடலை பாதுகாக்க சூக்கும உடல் உருவாக்கப் படுகிறது.

★ உதாரணம் ஒரு மனிதன் தன வாழும் நாளில் ஒருநாள் ஒரு கையையோ காலையோ இழந்தால் மீதி உள்ள நாட்களில் உடலின் உறுப்புக்களை இழந்த நபராக நாம் பார்க்கிறோம் ,. ஆனால் அதே நபரின் சூக்கும உடலைப் பார்த்தல் எல்லா உறுப்புகளையும் காணலாம் ,. எனவே ஸ்தூல உடல் உறுப்புகளை இழந்து இருந்தாலும் சூக்கும உடலில் அந்த உறுப்புக்கள் இருக்கும் ஸ்தூல உடலில் ஒரு பக்கம் வெளிச்சம் படுமானால் மறு பக்கம் நிழல் காணப் படும் ,.

★ஆனால் சூட்சம உடலில் வெளிச்சம் அல்லது ஒளி பட்டால் ஊடுருவிச் செல்லும் மறுபுறம் நிழல் வராது
ஸ்தூல உடலின் மனம் மட்டும் சூட்சம உடலையும் இயக்கம்

★வள்ளலாரைப் பொறுத்த வரை அவர் ஒளி உடம்பில் வாழ்ந்தார். ஒளி உடம்பு என்பது சூட்சம உடம்பு ஆகாது,. வள்ளலார் தாயின் கருவில் உதித்து பிறந்தவர் என்பதால் இந்த உலக சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டிய நிர்ப்பந்தம். தோட்டத்தில் அவர்மேல் ஒருமுறை பாம்பு விழுந்து சென்றது இன்னொரு சமயம் அவரை தீண்டிய பாம்பு இறந்தது ,.

★எனவே அவர் ஸ்தூல உடம்பில் வாழ்ந்தார் என்பதற்கு சான்று ,. பிரிதொரு சமயம் தான் காய கல்பக உடல் பெற்றுள்ளதாக நிரூபிக்க வந்தனிடம் வள்ளலார் அவர் உடம்பில் அவன் கையில் உள்ள வாளை தன் உடம்பில் செலுத்தச் சொன்னார் ஒருபுறம் செலுத்திய வாள் வள்ளல்ளர் உடம்பினுள் ஊடுருவிச் சென்றது ,.அவர் உடம்பு காயப் பட வில்லை வாள் மட்டுமே மறுபுறம் சென்றது . இது அவர் சூட்சம உடம்பில் வாழ்ந்தார் என்பதற்க்குச் சான்று . தன்னிடம் இருந்தவர்களிடம் இப்படிக் கூறினார் வள்ளலார் , அதாவது என்னை இறைவன் ஆட்கொண்டு கூட்டிச் சென்றான் . எல்லா நிலைகளையும் தாண்டி கூட்டிச் சென்றான் , அப்போதுதான் நான் பார்த்தேன் முருகன் , விநாயகர் போன்றோர் ஒரு நிலையில் நிற்ப்பதை , அதேபோல் ருத்திரன் சிவன் போன்றோரும் ஒரு நிலையில் நின்று விட்டதை , இறைவன் அதையும் தாண்டி என்னை கூட்டிச் சென்றான் என்று .


★ எனவே வள்ளலார் சூக்கும உடலினும் மேலான ஒளி உடம்பை பெற்றது புலனாகிறது
. சூக்கும உடம்பு பிற உலகிற்கு செல்லும் தகுதி பெற்றதல்ல . அது ஒரு கால கட்டத்தில் அழியும் தன்மை உடையது . எப்படி சதைப் பிண்டமான உடல் மண்ணுக்குச் சொந்தமோ அவ்வாறே பஞ்ச பூதங்களால் ஆன உடல் அவற்றால் அழிக்கப் படும் இந்த உலகை விட்டு வெளியே செல்ல முடியாது


★ இது என்னுடைய தனிப் பட்ட கருத்து ஆகும் மாற்றுக் கருத்து இருப்பின் கூறலாம் ஏற்றுக் கொள்வதாய் இருப்பின் நலமே , மிக்க நன்றி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”