புத்தர் சிலைக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த துறவி!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

புத்தர் சிலைக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த துறவி!

Post by marmayogi » Fri Feb 27, 2015 11:53 am

Image
நெதர்லாந்தில் புத்தர் சிலைக்குள் 1000
ஆண்டுகளாக மறைந்திருந்த துறவி!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

★அசென்: நெதர்லாந்த் நாட்டின் அசென்
நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents)
அருங்காட்சியகத்தில் புத்தர்
சிலை ஒன்றை CT Scan எனப்படும்
அதிநுட்பமான
பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த
பரிசோதனையில், புத்தர்
சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு
எலும்புக்கூடு ஒன்று இருப்பதை
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

★இதை மேலும் பரிசோதனை செய்ததில்,
பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த
சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த
நிலையில் பதப்படுத்தி, அதன் மேல்
புத்தர்
சிலையை வடிவமைக்கப்பட்டுள்ளதை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள்
கூறுகையில், இந்த
எலும்புக்கூடுகளை ஆய்வு
செய்கையில், இவர் சீனாவில்
புகழ்பெற்ற
சோகுஷின்புட்சு(Sokushinbutsu) என்ற
கலையை பயில்வித்த மாஸ்டர்
லியுகுவான்(Master Liuquan) என்ற
துறவியாய் இருக்கலாம் என
யூகிக்கிறோம். இவர் இறப்பிற்கு பின்,
இவரது உடல் புத்தர் சிலைக்குள்
வைக்கப்பட்டு இருக்கலாம்
அல்லது இவரே அமர்ந்த நிலையில்
இறந்து புத்தர் சிலையை அமைக்க
கூறியிருக்கலாம்.

★எனினும் இதை உறுதி செய்ய
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டின்
ஒரு பகுதியை மரபணு(DNA)
சோதனைக்கு அனுப்பியுள்ளோம் என
கூறியுள்ளனர்.
தற்போது ஹங்கேரி நாட்டிற்கு
கொண்டு செல்லப்படும் இந்த புத்தர்
சிலை, அங்குள்ள அருங்காட்சியகத்தில்
மே மாதம்
வரை கண்காட்சிக்கு வைக்கப்படும் என
ஆராய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”