ஆக்கினைச் சக்கரம்(புருவமத்தி , மூன்றாவது கண்)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஆக்கினைச் சக்கரம்(புருவமத்தி , மூன்றாவது கண்)

Post by marmayogi » Wed Feb 25, 2015 12:24 am

Image

/////ஆக்கினைச் சக்கரம்\\\\\\
←←←←→→→→

★உயிர் புலன்கள் மூலம்
விரிந்து படர்கை நிலையில் மனமாக
இருக்கிறது. புலன் மயக்கத்தில்
குறுகி நிற்பதால் உயிரின்
பெருமையும் பேராற்றலும்
மறந்து பிற பொருட் கவர்ச்சியில்
சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின்
இத்தகைய மயக்க நிலைதான்
மாயை எனப்படும்.


★உயிர் அடையும்
மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும்
துன்பம் விளைவிக்கும் தீமைகள்
அறுவகைக் குணங்களாகும்.
அவையே பேராசை, சினம், கடும்பற்று,
முறையற்ற பால்வேட்பு,
உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம்
என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள்
செயலாற்றும் போது ஏற்படும் தீய
விளைவுகளே எல்லாத் துன்பங்களும்
ஆகும். மயக்க
நிலையிலிருந்து தெளிவு பெற
உயிருக்கு விழிப்பு நிலைப்
பயிற்சி அவசியம்.


★ஆக்கினைச் சக்கர யோகத்தால்
உயிருக்கு இத்தகைய
விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது.
மேலும் புலன்களைக் கடந்து நிற்கும்
வல்லமையும் இப்பயிற்சியினால்
ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக்
கொண்டே இருக்கிறது. புலன்கள்
மூலம் ஆன்மா செயலாற்றும்
போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி,
ஒளி, சுவை மணம் இவையாக
மாற்றி அதையே தனது இன்ப துன்ப
உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.


★தனது இயக்க விளைவுதான் இன்பமும்
துன்பமும் எனும்
உண்மையை உணராமல் மயங்கி நிற்கும்
நிலையிலிருந்து தெளிவு பெற்றுத்
தன் ஆற்றலைப்
பொறுப்புணர்ந்து செலவிடும்
பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால்
ஓங்கும்.


★தேவையுணர்ந்து தனது ஆற்றலைச்
செலவிடவும் தேவையில்லாத
போது செலவிலிருந்து தன்னை மீட்டு
சேமிப்பு நிலையில் இருக்கவும்
ஆன்மாவுக்குத் திறமை பெருகும்.
மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள்
புகும் வாயில் ஆக்கினைச் சக்கர
யோகமேயாகும்.


★ஆசானால் எழுப்பப்
பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க
விரைவு நாளுக்கு நாள் கூடிக்
கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம்
ஓங்கும். முகம் அழகு பெறும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”