கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்

Post by marmayogi » Sun Feb 22, 2015 4:19 pm

கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
என்று அவ்வை மட்டுமல்ல முதியோரும் சொல்லி வைத்தனர் .
கோவில் கட்டியது மனித உடம்பை வைத்துதான், உடம்பே ஆலயம்
அது பற்றி கடப்பை சச்சிதானந்தர் தெளிவாகக் கூறி உள்ளார்கள்.
அந்தக் காலத்தில் ஆலயங்களை அரசர்கள் மட்டுமே கட்ட முடிந்தது.
அப்போதைய மக்கள் அநேக நேரம் உழைப்பில் களித்தனர்
மனது களிப்புறவும் உடம்பு மனதின் மூலம் ஒழுக்கம் பெறவும்
ஆறுதல் கொள்ளவும் கடவுளை வணங்க வேண்டும் என்று சொன்னதோடு அல்லாமல் ஆலயங்கள் அமைத்து வழி பட
செய்தனர். வேலை இல்லா நேரத்தில் சிந்தனையை சிதற விடாமல்
கடவுள் சிந்தனையை ஏற்படுத்தி ஒழுங்குறச் செய்து ஒழுக்கத்தை
ஏற்படுத்தினர். பாலின வீழ்ச்சியை தடுக்க பெண்ணை,ஆணுக்கு
மனை வி ஆக்கினர்.இல்லையேல் ஆண் மிருக குணம்
கொண்டவனாக மாரிவேடுவான் . அதுபோல்தான் மனிதனை சீர்
படுத்தவே கோயில்களை முதலில் அந்தந்த மக்களே அமைத்தனர்
எல்லா முடிவுகளும் அங்கே எடுத்தனர். ஒரு கல்லை நட்டு வைத்து
பூ மாலை சூடி சாமி என்றனர். அந்தக் கல்லில் சாமி உள்ளதாக மூடனும் முரடனும் நம்பினார்கள், அவிடம் எல்லோரும் மரியாதை
செய்யம் புனித இடம் ஆனது. கடவுளின் தண்டனை தனக்கு
கிடைக்காதிருக்க கல்லை அவன் கடவுளாக கருதி வணங்கினன். பின்னாளில் சாதுக்களும், அறிஞர்களும் ஞானிகளும் மக்களை
கடவுளின் பக்கம் இழுக்க கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபாடு
செய்தனர் மனித உடலில் குடி கொண்டுள்ள ஆன்மாவை இறைவனை
நாடிச் செல்ல இவ்வாறு வழி வகுத்தனர். மக்களின் விருப்பத்திற்கும்
நாட்டின் நலன் விரும்பி அரசன் கோவில் கட்ட தொடங்கினான். இரவில் நட்சத்திரங்களை வைத்தும் பகலில் சூரியன் மற்றும் அதன்
நிழல் பூமியில் விழுவதை வைத்தும் நேரத்தை கணித்தனர். உடலின் கால் பகுதி கோபுரம் எனவே மிக ஓயரமாக தூரத்தில் உள்ள இடங்களில் வாழும் மக்கள் காணும் வண்ணம் வடிவமைத்து கட்டினர். மிக ஒயரத்தில் பெரிய மணியையும் கட்டினர். மணி ஓசை வெகு தொலைவில் இருக்கும் மக்களுக்கும் கேட்க்க முடிந்ததால்
அப்பகுதி மக்களும் கோயில் பூஜை பார்க்க புறப்பட்டு வந்தனர்
காலைப் பூஜை, உச்சிப் பூஜை, அந்திப் பூஜை, இரவுப் பூஜை கோபுர
அழைப்பு மணியின் மூலம் தெரிந்து வழிபட வந்தனர் . முதல் மணி
அடித்த உடன் முன் வாயில் கதவு திறக்கப்படும். பின்பு உள்ளே
மணி அடித்து சன்னிதானத்திற்குள் அழைப்பர். கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். ஒவ்வரு மனிதரும் கடவுள் தன்னைப்போல்
இருப்பதாக எண்ணியதால், சாதாரண கல் பின்பு உருவம் ஆகி பின்னால் அலங்காரங்களும் நடகலாய்ற்று. திரை விலகிய பின் சாமிக்கு தீப ஆராதனை நடை பெரும். அப்போது அனைவரது கவனமும் ஈர்க்கப் பட சன்னதி உள்ளே நிற்பவர் தன் கையில் உள்ள
மணியை மிகக் குறைந்த ஓசையுடன் ஒலிக்கச் செய்வார். எல்லோரும் கண்ணால் கண்டு பின் கண்ணை மூடி காதால் அந்த
மணியோசையை கேட்டு மனதில் நிறுத்த வேண்டும். அப்போது அவர்
மீண்டும் சத்தம் சற்று அதிகமாக இருக்கும்படி மணியால் ஒலி
எழுப்புவார் எல்லோரும் நிசப்தமாயிருகையில் ஒலி வந்தவுடன் கண்
விழித்து மீண்டும் மனதுருகி வணங்கி நிற்பர். அதனால்தான் ஊரில்
தவறு செய்தவர்களை கோவிலில் வைத்து சத்தியம் செய்யச் சொன்னார்கள். கடவுள் தண்டிப்பார் என்பதால் மனச்சாட்சிப்படி மக்கள் நடந்தனர்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”