திருவள்ளுவர் தன் மனையாளை தேர்வு செய்த முறை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

திருவள்ளுவர் தன் மனையாளை தேர்வு செய்த முறை

Post by marmayogi » Sun Feb 22, 2015 3:56 pm

திருவள்ளுவர் தன் மனையாளை தேர்வு செய்த முறை
திருவள்ளுவருக்கு கல்யாணம் பேச ஆரம்பித்த வுடன் ஒரு நிபந்தனை விதித்தார் அதாவது பெண் பார்க்கும் போது தானும் வருவதாக சொன்னார். எனக்குப் பிடித்த பெண்ணாய் இருக்கவேண்டும் அதற்காகத்தான் என்று சொன்னார் . ஒவ்வொரு வீட்டிலும் சென்று பெண் பார்த்து முடித்துடன் திருவள்ளுவர் தான் வைத்து இருந்த சிறு பொட்டலத்தைக் கொடுத்து இதில் அரிசி உள்ளது சமைத்துக் கொண்டு வரச் சொன்னார், சரி என்று அதை வாங்கிச் சென்று சமையல் அறையில் போய் பிரித்துப் பார்த்தால் அதில் அரிசி போன்று உள்ள கற்கள் இருந்தன
பின்னர் அவர்கள் அந்தப் பொட்டணத்தை எவரிடம் திரும்பக் கொடுத்தனர் . அப்போது திருவள்ளுவர் கூறியது இந்த அரிசியை எந்த பெண் சமைத்துக் கொடுக்கிறாலோ அந்தப் பெண்ணை நான் கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். எல்லோருக்கும் தெரியும் இது கல் என்று இதை எப்படி சமைக்க முடியும் என்று கண்கலங்கிய போது அவர் சொன்னது மனம் தளர வேண்டாம் எப்போதும் போல் பெண் பார்க்க போகலாம்,. இதை சமைக்கும் பெண் இங்கு வாழ்ந்துகொண்டு இருக்கின்றாள் என்று சொன்னார்,. ஒருநாள் வாசுகி அம்மையாரைப் பெண் பார்க்கப் போன போது எப்போதும்போல் தான் வைத்து இருந்த பொட்டணத்தை கொடுத்து சமைக்கச் சொன்னார் , வாசுகி சமையல் அறையில் சென்று பிரித்துப் பார்த்தபோது அதே அரிசி போல் உள்ள கற்கள் இருந்தன, வாசுகி அம்மையார் , ஓ இது அரிசியாகத்தான் இருக்க வேண்டும் நமக்குத்தான் கல் போல் தெரிகிறது அரிசியாக இருப்பதால் தான் சமைக்கச் சொல்கிறார், நாம் சமைத்து இந்த அரிசி உணவை இவருக்கு படைக்க வேண்டும் என்று நினைத்து உலையில் இட்டு வேக வைத்து கடவுளை வேண்டுகிறாள் , எனக்கு வரப் போகும் இந்த கணவருக்கு நான் சுவைபட உணவு கொடுக்க அருள்புரியுமாறு வேண்டுகிறாள் , உண்மையில் அந்த அரிசி சோறாக
மாறிய பின்னரும் நல்ல வேளை இந்த அரிசி கல் போன்று தோன்றியது எனக்கு உண்மையில் இது அரிசிதான் என்று உணர்ந்து சமைத்த உணவை திருவள்ளுவருக்கு பரிமாறினாள் , இவர்கள் கணவன் மனைவியாக உலகிற்கு வாழ்ந்து காட்டினார்கள் ,. இந்த ஆணும் , பெண்ணும் ஆகிய இரு சித்தர்கள்
i
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”