கொக்கென்று நினைத்தாயா , கொங்கணவா ?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கொக்கென்று நினைத்தாயா , கொங்கணவா ?

Post by marmayogi » Sun Feb 22, 2015 3:51 pm

கொக்கென்று நினைத்தாயா , கொங்கணவா ?
கொங்கனவரும், திருவள்ளுவரும் ஒத்த காலத்தவர்கள் , நன்கு அறிமுகமான நட்பாளர்கள். திருவள்ளுவரும் வாசுகி அம்மையாரும் நெசவுத் தொழில் செய்தும் தனக்கு என்று இரண்டு துணிமணிக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை ,. வறுமையில் வாழ்வதைக் கண்டதும் இவர்களுக்கு ஏதாவது செய்து இவர்கள் வறுமையை போக்க வேண்டும் என்று எண்ணினார்.,. அதற்கு தகுந்தாற்போல் சந்தர்ப்பம் கிடைத்தது . அதாவது வாத செய்முறையில் வாத சித்தி பெற்றார், தான் அறிந்து தெரிந்த வற்றை திருவள்ளுவரிடம் விளக்கி வாத முறையில் பொன் செய்து அவரது வாழ்க்கைத் தரம் உயர உதவி செய்ய எண்ணி புறப்பட்டு திருவள்ளுவர் வாழ்கின்ற ஊர் நோக்கி செல்லலானார்.
வரும் வழியில் களைப்பு மிகுதியால் குளத்தின் கரையோரம் இருந்த ஆல மரத்தின் அடியில் படுத்து இளைப்பாறினார் . நல்ல நிழலும் காற்றும் வீசியதால் சற்று கண்னயர்ந்தார்,. இவர் இருந்த இடத்திற்கு மேல் உள்ள ஆலமரக் கிளையில் ஒரு கொக்கு அமர்ந்து இருந்தது . கொக்கு திடீரென எச்சமிட்டது அது கீழே படுத்து இருந்த கொங்கனவரின் மேல் விழுந்தது . இவருக்கு உடனே கொக்கை கோபத்துடன் நோக்கினார் ,.அடுத்த கணம் கொக்கு எரிந்து சாம்பலாகியது ,. பின்னர் இவர் திருவள்ளுவர் வீட்டை நோக்கி நடக்கலானார். திருவள்ளுவரின் வீட்டை அடைந்ததும் வீட்டின் கதவைத் தட்டினார் ,. திருவள்ளுவர் அச் சமயம் வெளியே சென்று இருந்ததால் வாசுகி அம்மையார் அவர்கள் வெளியில் செல்ல உடுத்தும் ஆடையைத் தேடி பின் உடுத்திக் கொண்டு வந்து கதவைத் திறந்தார்கள் ,. கொங்கனவர் கதவைத் தட்டி வெகு நேரம் கழித்து அம்மையார் வந்ததால் கோபமுற்று வாசுகியைப் பார்த்தார் ,. அக்கினிக் கனலாக ,. உடனே வாசுகி அம்மையார் , சொன்னார்கள் என்னை கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா , என்று கூறிய உடன் அப்படியே வாயடைத்து நின்று விட்டார் , காரணம் , நாம் கொக்கை கோபத்துடன் பார்த்தால் அது எரிந்து விழுந்தது, இந்நிகழ்ச்சி இவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்று ,.. சிறிது நேரத்தில் திருவள்ளுவர் அவர்கள் வந்து விட தனது ஆதங்கத்தை எடுத்துரைக்க முயன்றார் ,. ஊடனே வள்ளுவனார் அவர்கள் கொங்கனவரை வெளியில் அழைத்துச் சென்று கொங்கனவரின் ஆசைகள் என்ன என்று கேட்டார் , கொங்கனவர் தான் கற்ற வாத சித்தி முறைகளைச் சொல்லி தங்கம் செய்து அது விற்று பணம் அதிகம் பெற்று மற்றவர்களைப் போல் விலை மதிப்புள்ள ஆடைகளை வாங்கி உடுத்துங்கள் , உங்கள் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துங்கள் என்றார். திருவள்ளுவர் இவரை சற்று தூரம் அழைத்துச் சென்று அங்கு கிடந்த சிறு கற்களின்மேல் தனது மூத்திரத்தைப் பெய்தார் ,. அந்த சிறுநீர்பட்ட கற்களெல்லாம் பொன்னாக மாறியது , இதைக் கண்ட கொங்கனவர் ,இல்லறத்தில் வாழ்ந்த , மேலான நிலை அடைந்த இரு சித்தர்களிடம் சீடனைப் போன்ற நான் அவர்களுக்கு ஞான நிலையை சொல்லிக் கொடுக்க நினைத்த நிலையை எண்ணி
வருத்தமுற்றார் ,. சிறியோனை ஆசிவதிக்க வேண்டினார் , வள்ளுவரும் ஆசிர்வத்தித்து வழி அனுப்பி வைத்தார்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”