மரணமில்லை!!!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மரணமில்லை!!!

Post by marmayogi » Sun Feb 08, 2015 3:15 pm

Image
★★மரணமில்லை! ★★★


☆200 ஆண்டுகளாக தவ
நிலையில் இருக்கும் புத்த
துறவியின் உடல் கண்டெடுப்பு.


☆மங்கோலியாவின்
சாங்கினோகைர்கான் மாகாணத்தில்
கடந்த ஜனவரி 27-ந்தேதி கடைவீதியில்
வைத்து ஒரு பொருளை ஒருவர்
விற்று கொண்டு இருந்தார்.
அதை எல்லோரும்
அப்போது ஆச்சரியத்துடன்
வேடிக்கை பார்த்து கொண்டு
இருந்தார்கள். ஒரு அட்டைபெட்டியில்
தாமரை என்ற நிலையில் தவம் இருந்த
நிலையில் இருந்த புத்த துறவியின்
பதப்படுத்தப்பட்ட உடலை (மம்மியை)அவர்
பெட்டியில் வைத்து விற்பனைக்காக
கொண்டு வந்து இருந்தார்.


☆அந்த துறவியின் தோல் கால்நடை தோல்
போல் இருந்தது. அவர்
கால்களை மடித்து தவ நிலையில்
இருந்தார். அவர் உட்கார்ந்த நிலையில்
அவரது உள்ளங்கைகள் தயான்
முத்ரா வடிவில் இருந்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது போலீசார்
வந்து துறவியின் பதப்படுத்தப்பட்ட
உடலை விற்பனைக்கு கொண்டு வந்த
மனிதனை கைது செய்தனர்.



☆அவனது பெயர் என்க்டர்
என்று தெரியவந்தது. அவனிடம்
விசாரணை நடத்தியதில் அவன்
மங்கோலிய தலைநகர் படோர்
நகரை சேர்ந்தவன் என்றும் அங்குள்ள
ஒரு குகையில் இந்த
மம்மியை கண்டெடுத்ததாகவும்
கூறினான். என்க்டர் மீது போலீசார்
நாட்டின் பாரம்பரிய சொத்தை விற்க
முயன்றதாக
வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இந்த
வழக்கில் அவனுக்கு 5 முதல் 12 வருடம்
வரை தண்டனை கிடைக்க
வாய்ப்பு உள்ளது.



☆புத்த துறவியின் மம்மி தடயவியல்
தேசிய மையம் கட்டுபாட்டில் உள்ளது.
இவர் 1852-1927 வாழ்ந்த
ஹாம்போ லாமா தேசாய்-
டொர்சோ இடிகிளோவ் துறவியாக
இருக்கலாம்
எனவும் .ஒரு வாழ்க்கை போன்ற
தியான நிலையை மேற்கொண்ட அவர்
தனது சீடர்களுக்கு 30
ஆண்டுகளுக்கு பிறகு தன்
உடலை தோண்டி எடுக்க
கட்டளையிட்டதாகவும்
கூறப்படுகிறது.



☆பிரபல புத்த துறவி தலாய்லாம சீடர்
டாக்டர் பேர்ரி கெர்சின் இந்த
துறவி இன்னும் ஆழ்ந்த தியான
நிலையில் உள்ளார் என நம்புகிறார்.
நான் ஒரு தியான நிலையிலுள்ள
துறவியை பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தது.3
வாரங்களுக்கு மேலாகவும் இந்த
நிலையில் இருக்க
முடியும்.இது எப்போதாவது அரிதாக
நடக்கும், உடல் படிப்படியாக
சுருங்கி உள்ளது.இது துக்டம் என்னும்
தவ நிலையாகும்என்று டாக்டர்
கெர்சின் கூறினார்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: மரணமில்லை!!!

Post by கிருஷ்ணன் » Sun Feb 08, 2015 6:57 pm

அற்புதமான தகவல். :clab: :clab: :clab:


தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பணி. :ros: :ros: :ros:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: மரணமில்லை!!!

Post by marmayogi » Sun Feb 08, 2015 7:37 pm

மிக்க மகிழ்ச்சி. நன்றி சார் :thanks:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”