சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

Post by ஆதித்தன் » Sat Dec 20, 2014 3:39 pm

[youtube]https://www.youtube.com/watch?v=BuOrksWTCwM[/youtube]

[youtube]https://www.youtube.com/watch?v=0Vcl2jl-phQ[/youtube]

[youtube]https://www.youtube.com/watch?v=oR44xDLuaDM[/youtube]

[youtube]https://www.youtube.com/watch?v=BTx61GuFZDg[/youtube]
எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் ஒருவனே தேவன், அவனே சிவன்.... அதனை உணர்ந்துவிட்டால் அவனும் இலன் என்று உரக்கச் சொல்லும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sat Dec 20, 2014 5:53 pm

“நட்ட கல்லைச்
சுற்றி வந்து நாலு புஷ்பம்
சாற்றியே;
சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க
சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட
சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும்
பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sat Dec 20, 2014 6:15 pm

★அக்கர
மனாதியோ ஆத்துமா வனாதியோ
புக்கிருந்த பூதமும்
புலன்களு மனாதியோ
தக்கமிக்க நூல்களும் சதாசிவ
மனாதியோ
மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க
வேணுமே.
ஒன்பதான வாசல்தான்
ஒழியுநா ளிருக்கையில்
ஒன்பதாம் ராமராம
ராமவென்னு நாமமே
வன்மமான பேர்கள் வாக்கில்
வந்துநோ யடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்
திருப்பதே.


★அள்ளிநீரை யிட்டதேது கங்கையில்
குழைத்ததேது
மெள்ளவே மிணமிணென்று
விளம்புகின்ற மூடர்கள்
கள்ளவேட மிட்டதேது கண்ணை மூடி
விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர்
விளம்பிடீர்.


★அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த
சுக்கிலம்
முன்னையே தரித்ததும்
பனித்துளி போலாகுமோ
உன்னிதொக் குளழலுந்
தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதுந்
தூமைகாணும் பித்தரே.


★அழுக்கறத் தினங்குளித் தழுக்கறாத
மாந்தரே
அழுக்கிருந்த தவ்விடம் அழுக்கிலாத
தெவ்விடம்
அழுக்கிருந்த தவ்விடத்து அழுக்கறுக்க
வல்லிரேல்
அழுக்கிலாத
சோதியோடு அணுகிவாழ
லாகுமே.


★அணுத்திரண்ட கண்டமாய்
அனைத்துபல்லி யோனியாய்
மணுப்பிறந் தோதிவைத்த
நூலிலே மயங்குறீர்
சனிப்பதேது சாவதேது தாபரத்தி
னூடுபோய்
நினைப்பதேது நிற்பதேது
நீர்நினைந்து பாருமே.


★ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்
தப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத
சோமனை
பேதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த
ஞானிகாள்
சாதிபேதம்
என்பதொன்று சற்றுமில்லை
யில்லையே.


★ஆக்கைமூப்ப தில்லையே ஆதிகார
ணத்திலே
நாக்குமூக்கை யுள்மடித்து
நாதநாடி வூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த
வல்லிரேல்
பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்ம
மாகுமே.


★அஞ்சுமஞ்சு மஞ்சுமஞ்சு
மல்லல்செய்து நிற்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே அமர்ந்துளே
இருப்பதும்
அஞ்சுமஞ்சு மஞ்சுமே ஆதரிக்க
வல்லிரேல்
அஞ்சுமஞ்சு மும்முளே அமர்ந்ததே
சிவாயமே.


★அஞ்செழுத்தின் அனாதியாய்
அமர்ந்துநின்ற தேதடா
நெஞ்செழுத்தி நின்று கொண்டு
நீசெபிப்ப தேதடா
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவ
தேதடா
பிஞ்செழுத்தின் நேர்மைதான்
பிரிந்துரைக்க வேண்டுமே.


★உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுத்த
தின்முனம்
உயிரதாவ தேதடா உடம்பதாவ தேதடா
உயிரையும்
உடம்பையு மொன்றுவிப்ப தேதடா
உயிரினால் உடம் பெடுத்த
உண்மைஞானி சொல்லடா.

★சுழித்தவோர் எழுத்தையுஞ்
சொன்முகத் திருத்தியே
துன்பவின்ப முங்கடந்து சொல்லுமூல
நாடிகள்
அழுத்தமான வக்கரம் அடங்கியுள்
ளெழுப்பியே
ஆறுபங்கயம் கலந் தப்புறத் தலத்துளே.


★உருத்தரிப்ப தற்குமுன்
னுயிர்புகுந்து நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயமென்ன
சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன்
அறிவுமூலா தாரமாம்
குருத்தறிந்து கொள்ளுவீர்
குணங்கெடுங் குருக்களே
எங்குமுள்ள ஈசனார் எம்முடல்
புகுந்தபின்
பங்குகூறு பேசுவார் பாடுசென்
றணுகிலார்
எங்கள்தெய்வ முங்கள்தெய்வ
மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேத மன்றியே உண்மை ரெண்டு
மில்லையே.


★அரியுமாகி அயனுமாகி
அண்டமெங்கு மொன்றதாய்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாத
மொன்றலோ
விரிவதென்று வேறுசெய்து
வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாருமிங்கு
மங்குமெங்கு மொன்றதே.


★வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமுந்
தரிக்கிறீர்
சிந்தையுள்
நினைந்துமே தினஞ்செபிக்கு மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல
மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன்வந் தியங்குமே
அகாரகா ரணத்திலே அனேகனேக
ரூபமாய்
உகாரகா ரணத்திலே உருத்தரித்து
நின்றனன்
மகாரகா ரணத்திலே மயங்குகின்ற
வையகம்
சிகாரகா ரணத்தி லே
தெளிந்ததே சிவாயமே.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sat Dec 20, 2014 6:20 pm

★அவ்வெழுத்தில் உவ்வுவந் தகாரமுஞ்
சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்து
மொன்றை யொன்றி நின்றதோ
செவ்வையொத்து நின்றலோ
சிவபதங்கள் சேரினும்
மிவ்வை யொத்த ஞானிகாள்
விரித்து ரைக்க வேணுமே.


★ஆதியான அஞ்சிலும் அனாதியான
நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபமற்ற
ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற
வஸ்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ்
செழுத்துமே.


★வானிலாத
தொன்றுமில்லை வானுமில்லை
வானிடில்
ஊனிலாத
தொன்றுமில்லை ஊனுமில்லை
ஊனிடில்
நானிலாத
தொன்றுமில்லை நானுமில்லை
நண்ணிடில்
தானிலாத
தொன்றுமே தயங்கியாடு கின்றதே.


★சுழித்ததோர்எழுத்தையுன்னி சொல்
முகத்திருத்தியே
துன்பஇன்ப முங்கடந்து சொல்லும்நாடி
யூடுபோய்
அழுத்தமான வக்கரத்தின்
அங்கியை எழுப்பியே
ஆறுபங்கயங் கடந்
தப்புறத்து வெளியிலே.


★விழித்தகண் குவித்தபோ தடைந்து
போயெழுத்தெலாம்
விளைத்துவிட்ட இந்திரசால வீடதான
வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி
அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை
யாருமில்லை யானதே.


★நல்லமஞ்
சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ்
சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே
எல்லமஞ் சனங்கள் தேடி ஏக
பூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும்
சிவபதத்து ளாடுமே.


★உயிரகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த
தற்குமுன்
உயிரகாரம் ஆயிடும் உடலுகாரம்
ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்ப
தச்சிவம்
உயிரினால் உடம்புதான்
எடுத்தவாறு உரைக்கிறேன்.


★அண்டமேழும் உழலவே அணிந்த
யோனி உழலவே
பண்டுமால் அயனுடன்
பரந்துநின்று உழலவே
எண்டிசை கடந்துநின்ற
இருண்டசத்தியு உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்ட
மாடுமே.


★உருவநீர்
உறுப்புகொண்டு உருத்தரித்து
வைத்திடும்
பெரியபாதை பேசுமோ
பிசாசையொத்த மூடரே
கரியமாலும் அயனுமாக
காணொணாத கடவுளை
உரிமையாக
வும்முளே உணர்ந்துணர்ந்து
கொள்ளுமே
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள்
அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபே ருரைக்கிறீர்கள்
ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்
தளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த
வொன்றை நெஞ்சிலுன்னுமே
நாலதான யோனியுள்
நவின்றவிந்து மொன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு
மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க
வேணுமே.


★அருவமா யிருந்தபோது அன்னையங்கு
அறிந்திலை
உருவமா யிருந்தபோது உன்னைநா
னறிந்தனன்
குருவினால்
தெளிந்துகொண்டு கோதிலாத
ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரம்ம
மானதே.
பிறப்பதும் இறப்பதும்
பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத்
தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும்
சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீட
டங்குமே.


★கண்ணிலே யிருப்பனே கருங்கடல்
கடைந்தமால்
விண்ணிலே யிருப்பனே மேவியங்கு
நிற்பனே
தன்னுளே யிருப்பனே தராதலம்
படைத்தவன்
என்னுளே யிருப்பனே எங்குமாகி
நிற்பனே.


★ஆடுநாடு தேடினும்
ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும்
குறுக்கேவந்து நிற்குமோ
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த
தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்
வந்து நிற்குமே.


★எள்ளிரும்பு கம்பிளி யிடும்பருத்தி
வெண்கலம்
அள்ளியுண்ட நாதனுக்கோர்
ஆடைமாடை வஸ்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான
மீதிரால்
மெள்ளவந்து நோயனைத்து மீண்டிடுஞ்
சிவாயமே.


★ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க்
கூடியே
தேரிலே வடத்தையிட்டு
செம்பைவைத் திழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த
நாதரை
பேதையான மனிதர் பண்ணும்
பிரளிபாரும் பாருமே.


★மருள் புகுந்த சிந்தையால்
மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த
வல்லிரேல்
குருக்கொடுத்த தொண்டரும்
குகனொடிந்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான்
படுவரே.


★அன்னைகர்ப்ப அறையதற்குள் அங்கியின்
பிரகாசமாய்
அந்தறைக்குள்
வந்திருந்து அரியவிந்து ரூபமாய்
தன்னையொத்து நின்றபோது
தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய்
வளர்ந்ததே.


★உன்னையற்ப நேரமும் மறந்திருக்க
லாகுமோ
உள்ளமீது உறைந்தெனை மறப்பிலாத
சோதியை
பொன்னைவென்ற பேரொளிப்
பொருவிலாத ஈசனே
பொன்னடிப் பிறப்பிலாமை யென்று
நல்கவேணுமே.


★பிடித்ததெண்டும் உம்மதோ பிரமமான
பித்தர்காள்
தடித்தகோல
மத்தைவிட்டு சாதிபேதங்
கொண்மினோ
வடித்திருந்த
தோர்சிவத்தை வாய்மைகூற
வல்லிரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட
லாகுமே.


★சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனுநீ சிவாயமாம்
எழுத்துநீ
முத்திநீ முதலுநீ மூவரான தேவர்நீ
அத்திறமும்
உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.


★சட்டையிட்டு மணிதுலங்கும்
சாத்திரச் சழக்கரே
பொஸ்தகத்தை மெத்தவைத்து
போதமோதும் பொய்யரே
நிட்டையேது ஞானமேது நீரிருந்த
அக்ஷரம்
பட்டையேது சொல்லிரே பாதகக்
கபடரே.


★உண்மையான சுக்கிலம் உபாயமாய்
இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்து நீர
தானதும்
தண்மையான காயமே தரித்துருவ
மானதும்
தெண்மையான ஞானிகாள்
தெளிந்துரைக்க வேணுமே.


★வஞ்சகப்
பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின்
உண்மையை அறிவிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும்
வல்லிரேல்
அஞ் செழுத்தின்
உண்மையை அறிந்துகொள்ள
லாகுமே.


★காயிலாத சோலையில் கனியுகந்த
வண்டுகாள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல்
உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப்
படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன
ஞானமே.


★பேய்கள்பேய்க ளென்கிறீர் பிதற்றுகின்ற
பேயர்காள்
பேய்கள்பூசை கொள்ளுமோ
பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ
அனாதிபூசை கொள்ளுமோ
காயமான
பேயலோ கணக்கறிந்து கொண்டதே.


★மூலமண்ட லத்திலே முச்சதுர
மாதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுவுதித்த
மந்திரம்
கோலிஎட் டிதழுமாய் குளிர்ந்தலர்ந்த
திட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன்
விளைந்ததே சிவாயமே.


★ஆதிகூடு நாடியோடி
காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த
தூவெளி
ஆதிகூடி நெற்பறித்த
காரமாதி ஆகமம்
பேதபேத மாகியே பிறந்துடல்
இறந்ததே.


★பாங்கினோ டிருந்துகொண்டு
பரமன்அஞ் செழுத்துளே
ஓங்கிநாடி மேலிருந்து உச்சரித்த
மந்திரம்
மூங்கில்
வெட்டி நாருரித்து மூச்சில்செய்
விதத்தினில்
ஆய்ந்தநூலில்
தோன்றுமே அறிந்துணர்ந்து
கொள்ளுமே.


★பண்டரீக மத்தியில் உதித்தெழுந்த
சோதியை
மண்டலங்கள்
மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர
வல்லிரேல்
கண்டகோயில் தெய்வமென்று
கையெடுப்பதில்லையே.

** சிவவாக்கியர்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sat Dec 20, 2014 6:31 pm

★அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற
வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய்
நிற்பன்ஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய்
நின்றஆதி நாயனே
உன்பருக்கு உண்மையாய்
நின்றவுண்மை உண்மையே.

★அண்ண லாவது ஏதடா அறிந்துரைத்த
மந்திரம்
தண்ண லான வந்தவன் சகலபுராணங்
கற்றவன்
கண்ண னாக வந்தவன் காரணத் துதித்தவன்
ஒண்ண தாவது ஏதடா உண்மையான
மந்திரம்.

★உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி
நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும்
என்கிறீர்
உள்ளதும் புறம்பதும்
ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைத் திறந்து காணவேணும்
அப்பனே.

★ஆரலைந்து பூதமாய் அளவிடாத
யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத
பாசமும்
ஓரொணாத அண்டமும் உலோகலோக
லோகமும்
சேரவந்து போயிந்த
தேகமேது செப்புமே.

★என்னகத்துள்
என்னை நானெங்குநாடி ஓடினேன்
என்னகத்துள் என்னை நானறிந்திலாத
தாகையால்
என்னகத்துள்
என்னை நானறிந்துமே தெரிந்தபின்
என்னகத்துள் என்னையன்றி யாது
மொன்றுமில்லையே.

★விண்ணினின்று மின்னெழுந்து
மின்னொடுங்கும் ஆறுபோல்
என்னுள் நின்று எண்ணுமீச ன்என்ன
கத்துஇருக்கையில்
கண்ணினின்று கண்ணில் தோன்றும்
கண்ணறிவி லாமையால்
என்னுள்நின்ற என்னையும் யானறிந்த
தில்லையே.

★அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின்
ஊடுபோய்
அடக்கினிம் அடக்கொணாத
அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினுங் கிலேசம்
வந்திருக்கினும்
நடக்கினும் இடைவிடாத
நாதசங்கு ஒலிக்குமே.

★மட்டுலாவு தண்டுழாய் அலங்கலாய்
புனற்கழல்
விட்டுவீழில் தாகபோக விண்ணில்
கண்ணில் வெளியினும்
எட்டினோடு இரண்டினும் இதத்தினால்
மனந்தனைக்
கட்டிவீடி லாதுவைத்த காதலின்பம்
ஆகுமே.

★ஏகமுத்தி மூன்றுமுத்தி
நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில்
முத்தியன்றி முத்தியாய்
நாகமுற்ற சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி யாகிநின்ற
தென்கொலாதி தேவனே.

★மூன்றுமுப்பத்து ஆறினோடு
மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்று
மூன்று மூன்றுமாய்
தோன்றுசோதி மூன்றதாய்
துலக்கமில் விளக்கதாய்
ஏன்றனாவின் உள்புகுந்த
தென்கொலோ நம்ஈசனே.

★ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அல்லவத்துள்
ஆயுமாய்
ஐந்துமூன்றும்
ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்
அமைந்தனைத்து நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண
வல்லரே.

★ஆறும்ஆறும்ஆறுமாய்
ஓரைந்துமைந்தும் ஐந்துமாய்
ஏறுசீரிரண்டுமூன்றும் ஏழும்ஆறும்
எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி
மெய்யினோடு பொய்யுமாய்
ஊறுமோசை யாய்அமர்ந்த மாயமாய
மாயனே.

★எட்டும்எட்டும் எட்டுமாய்
ஓரேழும்ஏழும் ஏழுமாய்
எட்டுமூன்றும்
ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
எட்டுமாய பாதமோடு இறைஞ்சிநின்ற
வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள்
அல்லல்நீங்கி நிற்பரே.

★பத்தினோடு பத்துமாய்
ஓரேழினோடும் ஒன்பதாய்
பத்துநாற் திசைக்குள்நின்ற
நாடுபெற்ற நன்மையா
பத்துமாய் கொத்தமோடும் அத்தலமிக்
காதிமால்
பத்தர்கட்க
லாதுமுத்தி முத்திமுத்தி யாகுமே.

★வாசியாகி நேசமொன்றி வந்தெதிர்ந்த
தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மைசேர்
பவங்களில்
வீசிமேல்
நிமிர்ந்ததோளி யில்லையாக்கி
னாய்கழல்
ஆசையால் மறக்கலாது அமரராகல்
ஆகுமே.

★எளியதான காயமீது எம்பிரான்
இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும்
உகாரமும்
கொளுகையான சோதியுங்
குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும்
ஒன்றிலே விளைந்ததே சிவாயமே.

★அஞ்செழுத்து மூன்றெழுத்தும்
என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் அல்ல
காணு மப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி
அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்து மூன்றெழுத்தும்
அவ்வுபாயஞ் சிவாயமே.

★பொய்யுரைக்க
போதமென்று பொய்யருக்
கிருக்கையால்
மெய்யுரைக்க
வேண்டுதில்லை மெய்யர்மெய்க்
கிலாமையால்
வையகத்தில்
உண்மைதன்னை வாய்திறக்க
அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய
நாதனே.

★ஒன்றையொன்று கொன்றுகூட
உணவுசெய் திருக்கினும்
மன்றினூடு பொய்களவு மாறுவேறு
செய்யினும்
பன்றிதேடும் ஈசனைப் பரிந்துகூட
வல்லிரேல்
அன்றுதேவர்
உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

★மச்சகத்துளே இவர்ந்து மாயைபேசும்
வாயுவை
அச்சகத்
துளேயிருந்து அறிவுணர்த்திக்
கொள்விரேல்
அச்சகத் துளேயிருந்து அறிவுணர்த்தி
கொண்டபின்
இச்சையற்ற எம்பிரான்
எங்குமாகி நிற்பனே.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sat Dec 20, 2014 6:37 pm

★வயலிலே முளைத்த செந்நெல்
களையதான வாறுபோல்
உலகினோரும் வண்மைகூறில்
உய்யுமாற துஎங்ஙனே
விரகிலே முளைத்தெழுந்த
மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடுபட்ட
பாடதே.

★ஆடுகின்ற
எம்பிரானை அங்குமெங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்த
தொன்றை ஓர்கிலீர்
காடுநாடு வீடுவீண் கலந்துநின்ற
கள்வனை
நாடியோடி உம்முளே நயந்துணர்ந்து
பாருமே.

★ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற
மதிப்புறம்
தேடுநாலு வேதமும் தேவரான
மூவரும்
நீடுவாழி பூதமும் நின்றதோர்
நிலைகளும்
ஆடுவாழின்
ஒழியலா தனைத்துமில்லை
இல்லையே.

★ஆவதும் பரத்துளே அழிவதும்
பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும்
பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும்
பரத்துளே
யாவரும் பரத்துளே யானும்அப்
பரத்துளே.

★ஏழுபார் ஏழுகடல்
இபங்களெட்டு வெற்புடன்
சூழுவான் கிரிகடந்து சொல்லும்
ஏழுலகமும்
ஆழிமால் விசும்புகொள்
பிரமாண்டரண்ட அண்டமும்
ஊழியான் ஒளிக்குளே உதித்துடன்
ஒடுங்குமே.

★கயத்துநீர் இறைக்கிறீர் கைகள்
சோர்ந்து நிற்பதேன்
மனத்துள்ஈரம் ஒன்றிலாத மதியிலாத
மாந்தர்காள்
அகத்துள்ஈரங் கொண்டுநீர் அழுக்கறுக்க
வல்லிரேல்
நினைத்திருந்த வோதியும்
நீயும்நானும் ஒன்றலோ
நீரிலே பிறந்திருந்து நீர்சடங்கு
செய்கிறீர்
ஆரையுன்னி நீரெலாம்
அவத்திலே இறைக்கிறீர்
வேரையுன்னி வித்தையுன்னி
வித்திலே முளைத்தெழும்
சீரையுன்ன வல்லிரேல் சிவபதம்
அடைவிரே.

★பத்தொடொத்த வாசலில் பரந்துமூல
வக்கர
முத்திசித்தி தொந்தமென்று
இயங்குகின்ற மூலமே
மத்தசித்த ஐம்புலன் மகாரமான
கூத்தையே
அத்தியூரர்
தம்முளே அமைந்ததே சிவாயமே.

★அணுவினோடும் உண்டமாய்
அளவிடாத சோதியை
குணமதாகி உம்முளே
குறித்திருக்கின் முத்தியாம்
முணமுணென்று உம்முளே
விரலையொன்றி மீளவும்
தினந்தினம் மயக்குவீர்
செம்புபூசை பண்ணியே.

★மூலமான அக்கர
முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற
மூடமேது மூடரே
காலனான அஞ்சுபூதம்
அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ
அனாதியோடு கூடுமோ.

★முச்சதுர
மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுர மாகியே அடங்கியோர்
எழுத்துமாய்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான
தீபமாய்
உச்சரிக்கு மந்திரத்தின்
உண்மையே சிவாயமே.

★வண்டலங்கள் போலுநீர்
மனத்துமாசு அறுக்கிலீர்
குண்டலங்கள் போலுநீர்
குளத்திலே முழுகிறீர்
பண்டும்உங்கள் நான்முகன்
பறந்துதேடி காண்கிலான்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பர்
காணுமே.

★நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று
கூரிதன்று
பந்தமன்று வீடுமன்று பாவகங்கள்
அற்றது
கெந்தமன்று கேள்வியன்று கேடிலாத
வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே
உரைப்பதே.

★பொருந்துநீரும்
உம்முளே புகுந்துநின்ற காரணம்
எருதிரண்டு கன்றைஈன்ற
வேகமொன்றை ஓர்கிலீர்
அருகிருந்து சாவுகின்ற
யாவையும் அறிந்திலீர்
குருவிருந்த உலாவுகின்ற
கோலமென்ன கோலமே.

★அம்பரத்துள் ஆடுகின்ற
அஞ்செழுத்து நீயலோ
சிம்புளாய்பரந்துநின்ற சிற்பரமும்
நீயலோ
எம்பிரானும் எவ்வுயிர்க்கும் ஏகபோக
மாதலால்
எம்பிரானும் நானுமாய்
இருந்ததே சிவாயமே.

★ஈரொளிய
திங்களே இயங்கிநின்றது அப்புறம்
பேரொளிய திங்களே யாவரும்
அறிகிலீர்
காரொளிப் படலமுங் கடந்துபோன
தற்பரம்
பேரொளிப் பெரும்பதம் ஏகநாத
பாதமே.

★கொள்ளொணாது மெல்லொணாது
கோதறக் குதட்டொணா
தள்ளொணாது அணுகொணாது
ஆகலான் மனத் துளே
தெள்ளொணாது தெளியொணாது
சிற்பரத்தின்உட்பயன்
விள்ளொணாத பொருளைநான்
விளம்பு மாறது எங்ஙனே.

★வாக்கினால் மனத்தினால் மதித்தகார
ணத்தினால்,
நோக்கொணாத
நோக்கையுன்னி நோக்கையாவர்
நோக்குவார்,
நோக்கொணாத நோக்குவந்து நோக்க
நோக்க நோக்கிடில்,
நோக்கொணாத
நோக்குவந்து நோக்கைஎங்கண்
நோக்குமே.

★உள்ளினும் புறம்பினும் உலகம்எங்க
ணும்பரந்து
எள்ளில்
எண்ணெய்போலநின்று இயங்கு கின்ற
எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்த
மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன
வண்ணமே.

★வேதமொன்று கண்டிலேன்
வெம்பிறப்பு இலாமையால்
போதம்நின்ற வடிவதாய்ப்
புவனமெங்கும் ஆயினாய்
சோதியுள் ஒளியுமாய்த்
துரியமோடு அதீதமாய்
ஆதிமூலம் ஆதியாய்
அமைந்ததே சிவாயமே.

★சாணிரு மடங்கினால் சரிந்த
கொண்டை தன்னுளே
பேணியப்
பதிக்குளே பிறந்திறந்து உழலுவீர்
தோணியான ஐவரைத் துறந்தறுக்க
வல்லிரேல்
காணிகண்டு கோடியாய்க்
கலந்ததே சிவாயமே.

★அஞ்சுகோடி மந்திரம்
அஞ்சுளே அடங்கினால்
நெஞ்சுகூற உம்முளே நினைப்பதோர்
எழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி உம்முளே
அடங்கினால்
அஞ்சுமோர் எழுத்ததாய்
அமைந்ததே சிவாயமே.

★அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம்
சக்கரத்து சிவ்வையுண்டு சம்புளத்
திருந்ததும்
எள்கரந்த வெண்ணெய்போல்
எவ்வெழுத்தும் எம்பிரான்
உள்கரந்து நின்றநேர்மை யாவர்காண
வல்லரே.

★ஆகமத்தின் உட்பொருள் அகண்டமூல
ம்ஆதலால்
தாகபோகம் அன்றியே தரித்ததற் பரமும்நீ
ஏகபாதம் வைத்தனை உணர்த்தும்அஞ்
செழுத்துளே
ஏகபோகம்
ஆகியே இருந்ததே சிவாயமே.

★மூலவாசல் மீதுளே முச்சதுர
மாகியே
நாலுவாசல் எண்விரல் நடுவுதித்த
மந்திரம்
கோலமொன்று மஞ்சுமாகும்
இங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன்
விளைந்ததே சிவாயமே.

★சுக்கிலத் தடியுளே சுழித்ததோர்
எழுத்துளே
அக்கரத்
தடியுளே அமர்ந்தவாதி சோதிநீ
உக்கரத் தடியுளே உணர்ந்தஅஞ்
செழுத்துளே
அக்கரம்
அதாகியே அமர்ந்ததே சிவாயமே.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Thu Jan 22, 2015 9:53 pm

Image

★அருளிருந்த
வெளியிலே அருக்கன்நின்ற
இருளிலே
பொருளிருந்த
சுழியிலே புரண்டெழுந்த
வழியிலே
தெருளிருந்த
கலையிலே தியங்கிநின்ற
வலையிலே
குருவிருந்த
வழியினின்று ஹு வும்
ஹீயுமானதே.


★ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற
ஆதியே
கானமோடு தாலமீதில்
கண்டறிவது இல்லையே
தானந்தானும்
ஆனதே சமைந்தமாலை காலையில்
வேனலோடு மாறுபோல்
விரிந்ததே சிவாயமே.


★ஆறுகொண்ட வாரியும்
அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும்
துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்குமுட்
கமலமும்
மாறுகொண்ட
ஹூவிலே மடிந்ததே சிவாயமே.


★வாயில் கண்ட கோணமில்
வயங்குமைவர் வைகியே
சாயல் கண்டு சார்ந்த
துந்தலைமன்னா யுறைந்ததும்
காயவண்டு கண்டதும்
கருவூரங்கு சென்றதும்
பாயுமென்று சென்றதும்
பறந்ததே சிவாயமே.


★பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூரின்
வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின்
மேவியே
பிறந்ததே இறந்தபோதில் நீடிடாமற்
கீயிலே
சிறந்துநின்ற
மோனமே தெளிந்ததே சிவாயமே.


★வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல
அனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து
நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி
மூலவீணா தண்டினால்
முளரியால
யங்கடந்து மூலநாடி ஊடுபோய்.


★அடிதுவக்கி முடியளவும்
ஆறுமா நிலங்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள்
சோதியை
உடுபதிக்கண்
அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல
யோகியே.


★மந்திங் கள்உண்டுநீர் மயங்குகின்ற
மானிடர்
மந்திரங் கள்ஆவது மரத்திலூற
ல்அன்றுகாண்
மந்திரங் கள்ஆவது மதித்தெழுந்த
வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணமேதும்
இல்லையே.


★மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற
மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர்
மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ள்உம்முளே மதித்தநீரும்
உம்முளே
மந்திரங் கள்ஆவது மனத்தின்ஐந்
தெழுத்துமே.


★உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி
நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர்
வினாவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும்
ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச
லைத்திறந்து காணவேண்டும்
மாந்தரே.


★ஓரெழுத்து லிங்கமாய் ஓதுமட்ச
ரத்துளே
ஓரெழுத்து யங்குகின்ற
உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய்
முளைத்து எழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே
சிவாயமே.


★முத்தி சித்தி தொந்தமாய்
முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த அப்புனல்கள்
ஆகுமத்தி அப்புலன்
அத்தர்நித்தர் காளகண்டர் அன்பினால்
அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து
கொண்மினே.


★மூன்றிரண்டும் ஐந்துமாய்
முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய்
முயன்றதே உலகெலாம்
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற
நாதமாய்
தோன்றுமோர்
எழுத்தினோடு சொல்ல
ஒன்ம்இமில்லையே.


★வெளியுருக்கி அஞ்செழுத்து
விந்துநாத சத்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி
ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும்
இருவரை அறிந்தபின்
வெளிகடந்த தன்மையால்
தெளிந்ததே சிவாயமே.


★முப்புரத்தில் அப்புறம் முக்கணன்
விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம்அஞ்
செழுத்துமாம்
தற்பரம் உதித்துநின்ற தாணுவெங்கும்
ஆனபின்
இப்பறம் ஒடுங்குமோடி எங்கும்
லிங்கமானதே.


★ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற
சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற
கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்ட
வெளியும் ஆனதே.


★உருத்தரித்த போது சீவன்ஒக்கநின்ற
உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும்
சிவாயமம் அஞ்செழுத்துமாம்
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம்
ஆனபின்
கருத்தினின்று உதித்ததே
கபாலமேந்து நாதனே.


★கருத்தரித்து உதித்தபோது கமலபீடம்
ஆனதுங்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள்
ஆனதுங்
கருத்தரித்து உதித்தபோது
காரணமிரண்டு கண்களாய்
கருத்தினின் றுதித்ததே கபாலம்
ஏந்துநாதனே.


★ஆனவன்னி மூன்று கோணம்
ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்
டுஅலர்ந்தது
ஆனசோதி உண்மையும் அனாதியான
உண்மையும்
ஆனதான தானதா அவலமாய்
மறைந்திடும்.


★ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க
வெளியிலே
நான்றபாம்பின் வாயினால்
நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய்
முப்புரங் கடந்தபின்
ஈன்றெழுந்த
அவ்வினோசை எங்குமாகி நின்றதே
எங்குமெங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகம்
ஒன்றலோ
அங்குமிங்கும்
ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்குதா பரங்களும்
தரித்துவாரது ஒன்றலோ
உங்கள்எங்கள் பங்கினில்
உதித்ததே சிவாயமே.

☆சிவவாக்கியர்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”