ஆயுள் ஆரோக்கியம் செல்வம் வழங்கும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

ஆயுள் ஆரோக்கியம் செல்வம் வழங்கும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை

Post by ரவிபாரதி » Sat Oct 11, 2014 11:24 pm

Image

புரட்டாசி கடைசி சனிக்கிழமை - 11.10.2014

இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. பணம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை. பணமிருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க போதிய ஆயுளும், ஆரோக்கியமும் அவசியம். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருவது சனிக்கிழமை விரதம்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும், கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனியை போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தை பொருத்தே ஆயுள்காலம் அமையும்.

ஆனால், அந்த கிரகத்தை கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. ஒவ்வொரு தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்தது. இதற்கு உதாரணமாக கதையும் கூறப்படுகிறது. மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலா காதல்.

எனவே, பெருமாளுக்கு கோவில் கட்டி தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதை கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள் தானா என கூர்ந்து நோக்கினான். அவை மண் மலர்களால்தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தும் மூடிவிட்டு மன்னன் மீண்டும் பூஜையை தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது.

மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான். குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்துவிட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் பெருமாளின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். வாரந்தோறும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும்போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.

காலபோக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒரு நாள் ஆபூர்வ கனவொன்றை கண்டான். அக்கனவில் பெருமாள் தோன்றி, தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்த பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும், என்று கூறி மறைந்தார். தொண்டைமானும், திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான்.

தினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத்திருந்த பெருமாளின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான். உடன் பீமய்யாவை சென்று கட்டி தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன், என்றான். இதற்கிடையில், பெருமாள் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை மெச்சும் நாளில் உனக்கு முக்தி அளித்து, வைகுண்டத்துக்கு அழைத்து கொள்வேன், என, கூறியிருந்தார்.

அதன்படியே, தொண்டைமான் பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு மகிமை உண்டு. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள். ஒவ்வொரு சனிக்கிழமையிலும், விரதமிருக்க முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமை விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர். சனீஸ்வரனுக்குரிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவே கரியப்பட்டினை அவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை.

உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளு பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று. இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம் செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும். ஏனைய விரதங்களுக்கு எண்ணெய் முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால், சனீஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும்.

கறுப்புத்துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் வைத்து நல்லெண்ணை விட்டு அதனை தீபமாக ஏற்றி சனிதோஷங்களுக்கு பிரீதி செய்யலாம். இது முழுதாக எரிந்து நன்றாக நீராகும் வரை நிறைய நல்லெண்ணை விட வேண்டும். அரைகுறையாக எரிந்து பொருமுவது கூடாது. அதிலும், புரட்டாசி மாதத்தில் நாளை கடைசி சனிக்கிழமை என்பதால் சனீஸ்வரரை மனமுருகி வேண்டி விரதமிருந்தால் அதன் பலன் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை.
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: ஆயுள் ஆரோக்கியம் செல்வம் வழங்கும் புரட்டாசி கடைசி சனிக்க

Post by arrs » Sat Nov 29, 2014 7:13 am

[quote="ரவிபாரதி"]Image

புரட்டாசி கடைசி சனிக்கிழமை - 11.10.2014

இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. பணம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை. பணமிருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க போதிய ஆயுளும், ஆரோக்கியமும் அவசியம். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருவது சனிக்கிழமை விரதம்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும், கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனியை போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தை பொருத்தே ஆயுள்காலம் அமையும்.

ஆனால், அந்த கிரகத்தை கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. ஒவ்வொரு தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்தது. இதற்கு உதாரணமாக கதையும் கூறப்படுகிறது. மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலா காதல்.

எனவே, பெருமாளுக்கு கோவில் கட்டி தினமும் பொன் மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒரு நாள் பொன்மலர்களுக்கு இடையே மண் மலர்களும் வந்து விழுவதை கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண் மலர்கள் தானா என கூர்ந்து நோக்கினான். அவை மண் மலர்களால்தான் என்பதை மீண்டும், மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தும் மூடிவிட்டு மன்னன் மீண்டும் பூஜையை தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது.

மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான். குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும், அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்துவிட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

பீமய்யாவும், தனக்கு கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் பெருமாளின் உருவத்தை வடித்து மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். வாரந்தோறும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யா, பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும்போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களிமண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.

காலபோக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒரு நாள் ஆபூர்வ கனவொன்றை கண்டான். அக்கனவில் பெருமாள் தோன்றி, தமது பக்தன் பீமய்யா செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்த பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும், என்று கூறி மறைந்தார். தொண்டைமானும், திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யா செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனிக்கலானான்.

தினமும் செய்வது போலவே பீமய்யா தான் வடிவமைத்திருந்த பெருமாளின் சிலையருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களை தூவி இறைவனை வழிபடுவதை கண்டான். உடன் பீமய்யாவை சென்று கட்டி தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழிபாட்டை திருமால் ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன், என்றான். இதற்கிடையில், பெருமாள் பீமய்யாவின் கனவில் தோன்றி உன் பக்தியின் பெருமையை மெச்சும் நாளில் உனக்கு முக்தி அளித்து, வைகுண்டத்துக்கு அழைத்து கொள்வேன், என, கூறியிருந்தார்.

அதன்படியே, தொண்டைமான் பீமய்யாவின் பக்தியை பாராட்டியதை கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு மகிமை உண்டு. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள். ஒவ்வொரு சனிக்கிழமையிலும், விரதமிருக்க முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமை விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர். சனீஸ்வரனுக்குரிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவே கரியப்பட்டினை அவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை.

உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளு பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று. இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம் செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும். ஏனைய விரதங்களுக்கு எண்ணெய் முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால், சனீஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும்.

கறுப்புத்துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் வைத்து நல்லெண்ணை விட்டு அதனை தீபமாக ஏற்றி சனிதோஷங்களுக்கு பிரீதி செய்யலாம். இது முழுதாக எரிந்து நன்றாக நீராகும் வரை நிறைய நல்லெண்ணை விட வேண்டும். அரைகுறையாக எரிந்து பொருமுவது கூடாது. அதிலும், புரட்டாசி மாதத்தில் நாளை கடைசி சனிக்கிழமை என்பதால் சனீஸ்வரரை மனமுருகி வேண்டி விரதமிருந்தால் அதன் பலன் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை.[/quotநலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாரயணா எண்னும் நாமம்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”