வார ராசி பலன்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

வார ராசி பலன்

Post by ரவிபாரதி » Tue Jun 24, 2014 3:37 pm

மேஷம்
வெற்றியில் மயங்காத தோல்வியில் துவளாத, மேஷ ராசிக்காரர்களே!
http://img.dinamalar.com/horoscope/Aries.jpg[/fi]
உங்கள் ராசியில் சுக்கிரன், மூன்றில் சூரியன், ஆறாம் இடத்தில் செவ்வாய் அனுகூலமாக உள்ளனர். மனதில் துணிவு, புதிய திட்டங்களை நிறைவேற்றுகிற ஆர்வம் வளரும். பேசும் வார்த்தை வசீகரமாக அமைந்து, புதியவர்களின் அன்பை பெற்றுத்தரும். சமூக நிகழ்வுகள் சில பாடங்களை கற்றுத்தரும். வாகனத்தில் பராமரிப்பு பணி அவசியமாகும். புத்திரர் அறிவுத்திறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் உருவாகிற போட்டியை, சமயோசிதமாக சரி செய்வீர்கள். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் கவனமுடன் பின்பற்ற வேண்டும். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள் புதிய நண்பரின் உதவியால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: குரு பகவானை வழிபடுவதுடன், ஏழைக் குழந்தைகளுக்கு மஞ்சள் நிற புத்தாடை தானமாக வழங்கலாம். :god:

ரிஷபம்:
http://img.dinamalar.com/horoscope/Taurus.jpg[/fi]
தம்மை எதிர்ப்பவரையும், பண்புடன் நடத்தும், ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி, ராகு, சுபவிரயஸ்தானத் தில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மிகுந்திருக்கும். எதிர்காலத்தேவை கவனத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கண்களுக்கு தகுந்த ஓய்வு பாதுகாப்பு தருவது அவசியம். உறவினர்களிடம் பேசுவதில் நிதான அணுகுமுறை வேண்டும். வீடு, வாகன பாதுகாப்பதில் தேவையான மாற்றம் செய்வீர்கள். புத்திரர் தம் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆவதால் வருத்தம் கொள்வர். எதிர்பாளரால் இருந்த தொந்தரவு குறையும். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். வெளியூர் பயணம் நல்ல விதமாக அமையும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை ஓரளவு கிடைக்கும். பெண்கள், குடும்பத்தின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வர். மாணவர்கள் அதிக பயன்தராத பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடாது.

பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன், சிவனடியார்க்கு உணவு வழங்கலாம். :god:

மிதுனம்:
http://img.dinamalar.com/horoscope/Gemini.jpg[/fi]

தன்னிடம் பழகுபவரின் மனம் அறிந்து பேசும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இரண்டில் குரு லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது அனுகூலமாக உள்ளனர். செயல்கள் குறித்த காலத்தில் நிறைவேற, அறிவுப்பூர்வமாக பணிபுரிவீர்கள். குடும்பத்தேவை நிறைவேற்ற, போதுமான பணவசதி இருக்கும். வஞ்சக எண்ணத்துடன், உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பவரிடம் விலகுவது நல்லது. வாகன பயணத்தில், மிதவேகம் பின்பற்ற வேண்டும். புத்திரர் தெய்வ நம்பிக்கையுடன் செயல்புரிந்து, கூடுதல் நற்பலன் பெறுவர். ஊட்டச்சத்து மிகுந்த உணவு உண்பதால், உடல் நல ஆரோக்கியம் மேம்படும். இல்லறத்துணை நல்ல ஆலோசகராக பணி சிறக்க உதவுவர். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்களை செயல்படுத்துவீர்கள். பணியாளர் தொழில் நுட்ப அறிவில் முன்னேற்றம் காண்பர். குடும்ப பெண்கள், பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

பரிகாரம்: தன்வந்தரி பகவானை வழிபடுவதுடன், ஏழைச்சிறுமியின் சிகிச்சைக்கு உதவலாம். :god:

கடகம்:
http://img.dinamalar.com/horoscope/cancer.jpg[/fi]

சான்றோரின் வழி காட்டுதல் ஏற்று செயல்படும், கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம்இடத்தில், செவ்வாய், பதினொன்றாம் இடத்தில் புதன் அனுகூலமாக உள்ளனர். நற்கருணை மனம் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். நிதான அணுகுமுறையினால், செயல்களில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்கு, மங்கல நிகழ்ச்சி நடத்த உரிய வழி வகை உருவாகும். வாகனத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், பயணம் எளிதாகும். புத்திரர் படிப்பிற்கு தேவையான பணவசதி, திருப்திகர அளவில் கிடைக்கும். சிலர் உதவுவது போல பேசி, இடையூறு உருவாக்குவர். கவனம் அவசியம். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர்களிடம், உங்கள் மீதான நம்பிக்கைக்கு குறை ஏதும் வராமல் நடந்து கொள்ளவும். தொழில், வியாபாரம் சிறிதளவு மந்த கதியில் இயங்கும். பணியாளர்கள், பணக்கடன் பெறுவதில் அதிக கெடுபிடி இல்லாதவரிடம் வாங்குவது நல்லது. பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால், படிப்பில் கவனம் வளரும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதுடன் அவல், பொரி சர்க்கரை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம். :god:

சிம்மம்:
http://img.dinamalar.com/horoscope/leo.jpg[/fi]
தெய்வ நம்பிக்கையும் ஆராய்ந்து செயல்படும், குணமும் கொண்ட சிம்ம, ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது, குரு தவிர, மற்ற கிரகங்கள் வியத்தகு அளவில் நற்பலன் தருகின்றனர். எவரிடமும் நிதானித்து பேசி, நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். புதிய முயற்சிகளில், கூடுதல் நன்மை கிடைக்கும். வாகனம் வழக்கத்தை விட அதிகமாக பயன்படுத்துகிற அவசியம் ஏற்படும். புத்திரர் சில விஷயங்களை உங்களிடம் பேச தயங்குவர். அவர்களின் எதிர்பார்ப்பு உணர்ந்து உதவுவது நல்லது. பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை உங்களின் நல்ல செயல்களை பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழித்து உபரி பணவரவு கிடைக்கும். அதிகாரிகள், பணியாளர்களை ஊக்கப்படுத்தி, திட்டமிட்ட பணி இலக்கை பூர்த்தி செய்வர். பெண்கள், குடும்பத்தினரின் கூடுதல் பணவரவில் ஆடை, ஆபரணம் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், நண்பரிடம் படிப்பு தவிர, பிற விஷயம் பேச வேண்டாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், வெண்ணெய் சாற்றி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம். :god:

கன்னி:
http://img.dinamalar.com/horoscope/virgo.jpg[/fi]
உழைப்பின் அருமையை, பெருமிதமாக கருதும், கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானத்தில் சுக்கிரன், பத்தில் சூரியன், பதினொன்றில் குரு அனுகூலமாக உள்ளனர். சிலர், மீது உங்களுக்கு உருவான வெறுப்பு எண்ணங்களை மறந்து, அன்றாட பணியில் ஈடுபடுவீர்கள். சூழ்நிலை அனுகூலமாக அமைந்து உதவும். பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி கை கூடும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு தவிர்ப்பது நல்லது. இல்லறத்துணை சொல்லும் ஆலோசனை, சில மாற்றத்தை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, தேவையான அரசு உதவி எளிதில் கிடைக்கும். பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து, கூடுதல் சம்பளம் பெறுவர். பெண்கள், குடும்பத்தினரின் பண வரவுக்கேற்ப, வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 22.6.14 அதிகாலை 1.34 மணி முதல் 24.6.14 காலை 7.33 மணி வரை.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதுடன், பழ வகைகள் படையல் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம். :god:

துலாம்:
http://img.dinamalar.com/horoscope/Libra.jpg[/fi]
நண்பர்களிடம், வெளிப்படையாக பேசும் மனமுள்ள, துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள புதன், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டும நற்பலன் வழங்குகின்றனர். நிறைவேற்ற வேண்டிய பணிகளை நினைத்து தயக்கமும், வருத்தமும் மனதில் உருவாகும். உங்கள் நலம் விரும்புபவரின் உதவியும், ஆர்வம் மிகுந்த செயலும் நன்மையை தரும். வாகனத்தில் பராமரிப்பு பயணமுறையை இலகுவாக மாற்றும். புத்திரரின் அறிவுப்பூர்வமான செயல், நண்பர்களின் மாற்றுக்கருத்தினால் நிறைவேற தாமதமாகும். தொழில், வியாபாரம் கூடுதல் உழைப்பினால், சராசரி பணவரவைத்தரும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால், குளறுபடி வராமல் தவிர்க்கலாம். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மாணவர்கள், நண்பரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 24.6.14 காலை 7:35 மணி முதல் 26.6.14 மதியம் 3:58 மணி வரை.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுவதுடன், காகத்திற்கு தயிர், எள் கலந்த சாதம் வைக்கலாம். :god:

விருச்சிகம்:
http://img.dinamalar.com/horoscope/Scorpio.jpg[/fi]
நல்ல எண்ணங்களை, மனதில் நாளும் வளர்த்திடும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு கேது, குரு, செவ்வாய் அனுகூலபலன் வழங்குகிற இடங்களில் உள்ளனர். வாழ்வின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த சூழல் மாறும். புதிய சிந்தனையும், உற்சாகமும் மனதில் உருவாகும். குடும்பத்தின் தேவை நிறைவேற்ற, ஆர்வமுடன் செயல்படுவீர்கள். உறவினர்களும் உதவிகரமாக நடந்து கொள்வர். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் ஏற்படும். புத்திரர் அறிவு, செயல்திறனில் முன்னேற்றம் காண்பர். எதிரி உங்கள் வாழ்க்கை முறையின் சிறப்பை வியப்புடன் காணுவர். இல்லறத்துணையின் கவனக்குறைவான செயலை, பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அரசின் சட்டதிட்ட நடைமுறையை, தவறாமல் பின்பற்ற வேண்டும். இயந்திரபிரிவு பணியாளர்கள் பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்வது நல்லது. பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள், படிப்புக்கு தேவையான பணவசதி திருப்திகர அளவில் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 26.6.14 மதியம் 3:59 மணி முதல் 28.6.14 இரவு 2:33 மணி வரை.

பரிகாரம்: மகாலட்சுமி தாயாரை வழிபடுவதுடன், இனிப்பு பதார்த்தம் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம். :god:

தனுசு:
http://img.dinamalar.com/horoscope/Sagittarius.jpg[/fi]
எவரிடமும் உயர்வு, தாழ்வு கருதாமல் பழகும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்தில் சுக்கிரன், ஆறாம் இடத்தில் புதன், லாப ஸ்தானத்தில் சனி, ராகு அனுகூல பலன் தரும் வகையில் செயல்படுகின்றனர். தாழ்வு மனப்பான்மையை தவிர்த்து, வாழ்வின் அர்த்தம் உணர்ந்து பணிபுரிவீர்கள். வாகன பயன்பாடு, சராசரி அளவில் மேற்கொள்வீர்கள். பூர்வ புண்ணிய பலமும், பூர்வ சொத்தில் கிடைக்கிற பணமும் வாழ்வை வளமாக்கும். பிள்ளைகளின் எதிர்கால தேவைகளுக்காக, சிலதிட்டம் உருவாக்குவீர்கள். உடல்நலம் ஆரோக்கிய பலத்துடன் இருக்கும். இல்லறத்துணையுடன் ஆன்மிக வழிபாடு, விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேற்றலாம். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை, வெகுமதி கிடைக்கும். பெண்கள், தெய்வ அருளும், செல்வ வளமும் பெற்று சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், படிப்பில் உருவாகிற சிரமம் சகமாணவரின் உதவியால் சரியாகும்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதுடன், தந்தை வழிசார்ந்த முதியவருக்கு இயன்ற உதவி வழங்கலாம். :god:

மகரம்:
http://img.dinamalar.com/horoscope/Capricorn.jpg[/fi]
தன் தகுதி உணர்ந்து, வாழ்க்கை முறையை உருவாக்கும், மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், குரு பகவானின் அமர்வு, சிறப்பான பலன்களைத் தருகிறது. வாழ்க்கையின் லட்சியங்களை நிறைவேற்ற, புதிய வழிவகை குறித்து ஆராய்வீர்கள். உறவினர்களின் உதவி திருப்திகரமாக கிடைக்கும். பேசும் வார்த்தை புதிய வரவேற்பை பெறும். வாகன பயணம், சூழ்நிலையின் முக்கியத்துவம் உணர்ந்து மேற்கொள்வீர்கள். புத்திரரின் விருப்பம் நிறைவேற்றுவதில், தாமதம் உருவாகலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உண்பதால் உடல்நலம் மேம்படும். இல்லறத்துணை உங்களின் கருத்துக்களை வேதம் என கருதுவார். தொழில், வியாபாரத்தில் சில மாறுதல் செய்து உற்பத்தி, பணவரவை அதிகரிப்பீர்கள். பணியாளர்களுக்கு பணி சிறப்பாக அமைந்து பாராட்டு, கூடுதல் சம்பளம் கிடைக்கும். பெண்கள், குடும்ப உறவுகளை பேணி காப்பதில், கூடுதல் அக்கறை கொள்வர். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருள் கவனமுடன் பயன்படுத்தவும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதுடன், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம். :god:

கும்பம்:
http://img.dinamalar.com/horoscope/Aquarius.jpg[/fi]
குடும்பத்தின் பணவரவுக்கு ஏற்ப, செலவு செய்யும், கும்பராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு அசுர கிரகம் கேது, அசுர குருவாகிய சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். புதன் அளப்பரிய நற்பலன் வழங்குகிறார். இஷ்டதெய்வ அருள் பலத்துடன் முருகப்பெருமானின் அருளும், வாழ்வில் துணை நிற்கும். முக்கியமான செயல் எளிதாக நிறைவேறும். குடும்பத்தினரிடம் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். வீடு, வாகனத்தில் சீரான பயன்பாட்டு வசதி கிடைக்கும். புத்திரர் படிப்பில் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். இல்லறத்துணையின் நல்ல ஆலோசனையை ஏற்பது, எதிர்கால நன்மையை உறுதியாக்கும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை, மன உறுதியுடன் எதிர்கொள்வீர்கள். பணியாளர்கள், பணியிடத்தில் தேவையற்ற விவாதம் பேசக்கூடாது. பெண்கள், பிள்ளைகளின் நலன் சிறக்க, தேவையான முயற்சி மேற்கொள்வர். மாணவர்கள், நன்றாக படித்து பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதுடன், ஆதரவற்ற வயதான பெண்ணுக்கு உதவலாம். :god:

மீனம்:
http://img.dinamalar.com/horoscope/Pisces.jpg[/fi]
செயல்நிறைவேற, மாற்று உபாயம் பின்பற்றுகின்ற, மீனராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன், ஐந்தில் குரு அனுகூலமாக உள்ளனர். அஷ்டமச்சனியின் தாக்கத்தினால் வரும் சிரமம் தவிர்க்க, மனதில் மாற்று யோசனை உருவாகும். பழகுபவர்களின் குணம் அறிந்து பேசி அன்பு, நட்பு பாதுகாத்திடுவீர்கள். உங்களை அவமானப்படுத்த எண்ணியவர் விலகுகிற புதியசூழல் உருவாகும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்ற வேண்டும். புத்திரர் அறிவில் சிறந்து, நண்பருக்கு இணையாக உங்களிடம் பழகுவர். அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு உதவுவதில் நிதானம் வேண்டும். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். பணியாளர், கூடுதல் வேலைவாய்ப்பை விருப்பமுடன் ஏற்று வாழ்வை வளமாக்குவர். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவுவீர்கள். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் தகுந்த கவனம் வேண்டும்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன், புளியோதரை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம். :god:




:god: :thanks: :god:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”