சிவராத்திரியின் உண்மை என்ன

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

சிவராத்திரியின் உண்மை என்ன

Post by ரவிபாரதி » Fri Jun 20, 2014 4:51 pm

சிவராத்திரியின் உண்மை என்ன?

Image


புராணம் / கதை எண்:1

பரம்பொருளான சிவத்தின் ஆணையை ஏற்றுப் படைத்தல் தொழிலைச் செய்கின்ற பிரமனுக்கும் காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலுக்கும் ஒருமுறை தர்க்கம் ஏற்பட்டதாம். அதாவது தம்மில் யார் உயர்ந்தவர் என்பதாகும். பிரமனும் திருமாலும் தங்கள் சிக்கலுக்கு முடிவு காண இயலாது பரப்பொருளான சிவத்திடம் முறையிட்டனர். இறைவரும் தம் கருணையினால் தங்களில் ஒருவர் என் திருமுடியையும் ஒருவர் என் திருவடியையும் தொட்டு வந்தால் உங்களில் சிறந்தவர் யார் என்பதைக் கூற இயலும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி அன்னப் பறவை வடிவில் பிரமன் இறைவன் திருமுடியைத் தொட்டுவர முயன்று சோர்ந்து திரும்பினான். திருமாலோ பன்றி வடிவில் பூமியைக் குடைந்து உட்சென்று இறைவன் திருவடியைக் காண இயலாது சோர்ந்து திருப்பினான்.

திருமாலும் பிரமனும் தங்கள் அறியாமையை உணர்ந்து, சிறுமையை உணர்ந்து இறைவனை வணங்கித் தங்களுக்கு அருள்புரியுமாறு வேண்டி நின்றனர். பிரமனுக்கும் திருமாலுக்கும் அருள்புரிகின்ற மாதேவனாகிய சிவப்பரம்பொருள் அவர்கள் அறியாமை நீங்க முதலில் பெரும் சோதிப் பிழம்பாய்க் காட்சி கொடுத்து நின்றார்.

இறைவனின் இப்பெருஞ்சோதி வடிவினைக் காண இயலாது பிரமனும் திருமாலும் கலங்கி நின்றனர். அவர்கள் காணும்படியான வடிவினைக் காட்டியருளுமாறு வேண்டினர். இறைவன் சோதிப்பிழம்பாய் நிற்பதை விட்டு தணிந்தார். அப்பிழம்பே திருவண்ணாமலையாகக் குளிர்ந்தது என்பர்.

பிறகு நீண்ட நாள் திருமாலும் பிரமனும் தவம் இயற்ற அவர்களின் அறியாமை நீங்க வேண்டி இறைவன் நள்ளிரவில் சிவலிங்கமாகத் தோன்றி அவர்கள் காணும்படியாக அருள்புரிந்தார். இதுவே இலிங்கோத்பவர் என்றும் அன்றைய தினமே சிவராத்திரியாகவும் கொண்டாடப் பெறுகிறது என்றும் குறிப்பிடுவர்.

புராணம் / கதை எண்:2

சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் உமாதேவி. அதனால் உலகங்கள் இருளில் மூழ்கின. அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள் உமையவள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள். இதுவே சிவராத்திரி.

இவைபோல் இன்னும் பல புராணக்கதைகளுடன் நான் என்னுடைய சொந்தக் கதைகளையும் சேர்த்துச் சொல்லவேண்டிய விதத்தில் சொன்னால் அதனையும் மக்கள் நம்பி என்னுடன் கூட்டம் சேர்ந்து ஆட தயாராகியுள்ளார்கள். அந்த அளவிற்கு மக்களிடம் ஆண்மீக விழிப்புணர்வு தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இன்று இரவு கண்விழித்து விட்டு நாளை பகலில் தூங்குவதற்க்காக எத்தனை புத்திசாலிகள் தங்கள் அலுவலகங்களில் விடுமுறை கடிதம் கொடுத்துள்ளனரோ தெரியவில்லை.

இப்போது நான் கூறுவதுதான் உண்மையான சிவராத்திரி புராணக்கதையாகும். (கதையென்றாலே பொய்தான், இதில் உண்மை கதை வேறா? என்றெல்லாம் சிந்திக்காமல் எப்பொழுதும் போல் இதனையும் நம்பத்தான் வேண்டும். 'நம்பினால் கெடுவதில்லை' இது நான்கு மறைத் தீர்ப்பு அல்லவா?)

என்னுடைய கட்டளயை ஏற்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலை செய்யக்கூடிய கர்த்தாக்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்குள் தங்களில் யார் பெரியவர் என்ற தர்க்கம் வந்துவிட்டது. அந்த தர்க்கம் அடிதடியில் போய், ஒருவனுக்கு கையை கானோம், ஒருவனுக்கு காலை கானோம், ஒருவனுக்கு இரண்டையும் கானோம். மூவரும் இரத்தம் சொட்ட சொட்ட என்னைநாடி வந்து 'பரம்பொருளே, உங்கள் கட்டளைப் படி நடக்கும் எங்களின் யார் பெரியவர்? என்று நீங்கள் தான் கூறவேண்டும்,' என்று மன்றாடினர்!

(நல்லவேளை, எங்கே இம்மூவரும் சேர்ந்து - எங்களைவிட நீ என்ன பெரியவனா? என்று கேட்காமல் விட்டனரே! என்று எனக்குள் நினைத்துக்கொண்டு, நமக்கு இன்று ஒன்று இரண்டல மூன்று அடிமைகள் சிக்கிக்கொண்டார்கள் என்ற சந்தோஷத்துடன் தீர்ப்பு கூற தயாரானேன்.)

அடப்பாவமே! இதற்க்காகவா மூவரும் அடித்துக்கொண்டீர்கள்? சரி, தர்க்கம் என்று வந்துவிட்டாலே, ஏதாவது போட்டி வைத்து அதில் வெல்பவர்கள் தான் உங்களில் பெரியவராக இருக்க முடியும். என்ன? போட்டிக்கு மூவரும் ரெடியா?

ஐயோ, ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டு, நாங்கள் எங்களுக்குள் அடித்துக்கொண்டு இரத்தம் வழிய நிற்கிறோம், இதில் இன்னொரு போட்டியா? என்றான், கையையும் காலையும் இழந்த சிவன்.

சிவன் சொன்னதையும், அவன் நிலையையும் கண்டு நான் என்னுடைய பெருங்கருணையால் அவர்கள் மூவரின் அங்களையும் பழைய ரூபத்திற்கு மாற்றினோம்! அவர்களும் மகிழ்ந்து புதியப் போட்டிக்கு தயாராகினர்,

பரம்பொருளாகிய நான் அம்மூவரையும் நோக்கி - அருள்சார்ந்தப் போட்டி யாதெனில் "உங்கள் மூவரில் யாரொருவர் என்னுடைய "அடி, முடி, நடு" இம்மூன்றையும் இன்றைய 'ஒரே இராத்திரியில்' பார்க்கிறீர்களோ, அவரே உங்களுள் பெரியவர் என்று கருதமுடியும், என்று கூறிவிட்டு - உடனே பரம்பொருளான நான், மூவரும் பார்த்துவிடாதபடி பாம்புபோல் வட்டவடிவமாக எனது அடியைக்கொண்டு முடியை மூடிக்கொண்டு இராத்திரியில் ஒளிந்துக்கொண்டேன்.

பிரம்மா - அன்னப் பறவை வடிவம் கொண்டு முதலில் எனது முடியைக்கண்டு வருமோம் என்று மேலே பறந்துவிட்டான்.

விஷ்ணு - பன்றி வடிவம் எடுத்துக்கொண்டு முதலில் எனது அடியைக்கண்டு வருவோம் என்று பூமிக்குக் கீழே சென்றுவிட்டான்.

சிவன் - ஆந்தை வடிவம் எடுத்துக்கொண்டு முதலில் எனது நடுவைக்கண்டு வருமோம் என்று பூமியைத் தழுவியே தேடச் சென்றுவிட்டான்.

அன்றைய ராத்திரி முடிந்தது, பொழுது விடிந்தது, பரம்பொருளாகிய நான் மூவரையும் ஒரு விசில் சவுண்டு விட்டு அழைத்து, என்ன? மூவரும் எனது மூன்று நிலையையும் பார்த்தீர்களா? என்று வினவினேன். அதற்கு ஒவ்வொருவராக என்னருகில் கையைக் கட்டிக்கொண்டு, தங்களது சிறுமையை உணர்ந்து பதில் கூறினார்கள்...

பிரம்மா - "பரம்பொருளே! அன்னமாகிய நான் முதலில் தங்களது புனித முடியைக்காண மேலே சென்றபோது அங்கே தங்களது முடியைக் காணவில்லை, ஆனால் என்ன ஆச்சரியம் அங்கே முடியிருக்குமிடத்தில் தங்களது அடியைக்கண்டேன், முடியையும், நடுவையும் என்னால் காணமுடியவில்லை, அதற்குள் பொழுது விடிந்துவிட்டது." என்றான்.

விஷ்ணு - "பரம்பொருளே! பன்றியாகிய நான் முதலில் தங்களது புனித அடியைக்காண பூமிக்கும் கீழே சென்றபோது அங்கே தங்களது அடியைக் காணவில்லை, ஆனால் தங்களது வளைந்த உடல் பாகங்களின் சிலவற்றையே என்னால் பார்க்க முடிந்தது, அதற்குள் பொழுது விடிந்துவிட்டது." என்றான்.

சிவன் - "பரம்பொருளே! ஆந்தையாகிய நான் முதலில் தங்களது புனித நடுவைக் காண பூமியின் மேற்பரப்பில் தேடினேன். இங்கே நான் தங்களது நடுவைக் கண்டேன், அது மட்டுமல்ல நடுவிலிருந்து பார்த்தபோது தங்களது அடியையும் கண்டேன், ஆனால் முடியைக் காணவில்லை, அதற்குள் பொழுது விடிந்துவிட்டது." என்றான்.

இப்போது பட்டிமன்றத்தின் தலைவரும் பரம்பொருளாகிய நான் தீர்ப்பு கூறியாகவேண்டும்,

நான் ஒருதடவச் சொன்னால் நூறு தடவ சொன்ன மாதிரி! அப்புறம், 'நாட்டாம தீர்ப்பை மாத்தி சொல்லு' என்றெல்லாம் என்னை கட்டாயப்படுத்தக்கூடாது என்று முதலில் அம்மூவரையும் எச்சரித்துவிட்டு மேற்கொண்டு தீர்ப்பை கூறினேன்...

பிரம்மாவே, எனது 'அடி, முடி, நடு' இவற்றில் அன்னப் பறவையாகிய நீ எனது முடியைப் பார்க்கச் சென்று அதனை காண இயலாது, கீழே இருக்கும் எனது அடியை மேலே சென்று பார்த்தாய். இதன் உண்மை யாதெனில், பரம்பொருளாகிய நான் "எனது முடியை பக்தர்களாகிய உங்கள் அடியில் மறைத்து வைத்துள்ளேன்" என்பதனை அறியவேண்டும். எனது முடியையும், நடுவையும் காண இயலாத இந்த அன்னப் பறவை, எதிர்காலதில் இவ்வுலகிலிருந்து காணாமல் போகட்டும். மேலும் நீ முதலில் மேலே சென்று எனது முடியைக் காண விழைந்ததினால், உனது அகங்காரம் அழியும்வரை இந்த பூமியில் உன்னை மக்கள் வணங்கமாட்டார்கள்.

விஷ்ணுவே, எனது 'அடி, முடி, நடு' இவற்றில் பன்றியாகிய நீ எனது அடியைப் பார்க்க கீழே சென்று அதனை பார்க்கத் தவறியது மட்டுமன்றி நீ எனது இம்மூன்றில் எதையும் பார்க்கவில்லை. இதன் மூலம், பரம்பொருளாகிய நான் " எனது அடியை பக்தர்களாகிய உங்கள் முடிமீதுதான் வைத்துள்ளேன்" என்பதனை அறியவேண்டும். என்னில் எதையும் காண இயலாத இந்த பன்றி, எதிர்காலத்தில் சுத்தமானதை அறியாவண்ணம், அசுத்தத்தையே உண்டு, அசுத்ததிலேயே வாழவேண்டும். மேலும் நீ என்னை முதலில் கீழே சென்று எனது அடியைக் காண விழைந்ததினால், உனது அறியாமை நீங்கும்வரை இந்த பூமியில் பல அவதாரங்கள் எடுத்து மீள்வாய்.

சிவனே, எனது 'அடி, முடி, நடு' இவற்றில் ஆந்தையாகிய நீ எனது நடுவைப் பார்க்க பூமியின் மீது தேடி கண்டுகொண்டாய். அதுமட்டுமல்லாமல் எமது நடுவிலிருந்தவேறே எனது அடியையும் கண்டதும் சிறப்பு. இதன் மூலம், பரம்பொருளாகிய நான் "யார் ஒருவர் ராத்திரியில் 'நடு' நின்று பார்க்கிறார்களோ அவர்களுக்கே எனது காட்சி கிடைக்கும்" என்பதனை அறியவேண்டும். எனினும் எனது முடியைக் காணாத இந்த ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது போகட்டும். மேலும் நீ முதலில் பூமியின் மேலேயே எனது நடுவை பார்க்க விழைந்ததால், மனிதர்களின் இருகண்களின் நடுவே நடனம் புரிந்து, நெற்றிக்கண்ணாக விளங்கவேண்டும். நீ எனது 'நடுவை' கண்ட இந்த ராத்திரி இனிமேல் உனது பெயரிலேயே 'சிவராத்திரி' என்று வழங்கப்படும்.

பரம்பொருளே! எங்கள் மூவராலுமே தங்களது முடியைக் காணமுடியவில்லையே? அது ஏன்? மூவரும் ஒரே குரலில் என்னைக் கேட்டனர். பரம்பொருளாகிய நான் விடை பகருகிறேன்...

அற்பர்களே... உங்களால் எனது முழு வடிவையும் காண இயலாது. உங்களையும் விட பெரியவர்கள் மனிதர்களே! அவர்களால்தான் என்னை முழுதும் காண முடியும். நீங்கள் மூவரும் என்னை ஒப்பிட்டால் 'எனது இடது கால் கட்டை விரலில் ஒட்டிக்கொண்டுள்ள ஒரு சிறு தூசியே" என்று அறிய வேண்டும். நீங்கள் என்னைக் காணவேண்டுமெனில் மீண்டும் நீங்கள் மனிதப் பிறவி எடுத்து அதற்கு முயற்சிக்கவும்.

"ராத்திரி" என்று சொன்னால் இரா+திரி = திரிபு இல்லாத ஒன்று என்று பொருள். அந்த ஒன்றை (பரம்பொருளை) இந்த இராத்திரியில் (இரவில்) உறங்காமல் சிந்தனைச் செய்தால் நெற்றிக்கண்ணாக நான் இருப்பது தெரியும். இந்த இரவு மட்டுமல்ல, அனைத்து இரவு நேரங்களிலும் இதனை செய்யவேண்டும். இரவு நேரங்களில்தான் இதனை தனித்திருந்து செய்ய வேண்டும். நான் (பரம்பொருள்) வரும் நேரம் 'நடு' இரவு தான் என்பதனை அறியவேண்டும்.

எனது ஞானம் உள்ள மனிதர்கள் மேற்கண்டவாறு முயலுவார்கள். அஞ்ஞானம் உள்ளவர்கள் இதனை ஒரு சடங்காக கோயில்களிலும் மற்ற இடங்களிலும் ஆடம்பரமாக செய்து வீண்போவார்கள்.

பரம்பொருளே! இன்னும் எங்களில் யார் பெரியவர் என்று சொல்லவில்லையே? என்று மூவரும் மீண்டும் ஒருங்கே முழங்கினர்.

மூவரில் எமது 'நடு' நிலையைக் கண்ட 'சிவன்' பெரியவன். மேலும் உங்களுக்குள்ள ஆயுளை கூறுகிறேன் கேளும்...

பிரம்மன் வயது - 4,36,000 ஆண்டுகள்
விஷ்ணு வயது - 8,64,000 ஆண்டுகள்
சிவன் வயது - 17,28,000 ஆண்டுகள் (திருஅருட்பா)

இதன் பிறகு நீங்கள் மரணமடைவீர்கள். மீண்டும் பிறவி உங்கள் வினைக்கேற்ப ஏற்படும். இப்படி எண்ணற்ற பிரம்மன், விஷ்ணு, சிவன் தோன்றியுள்ளனர்.

ஆனால் மனிதர்களால் மட்டுமே மரணத்தை தவிர்க்க முடியும். ஆக இன்று சிவராத்திரி - நீங்கள் அனைவரும் 'சிவனே' என்று இருப்பதைவிட 'சிவமே' என்று இருங்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”