ஆன்மிகச் சிந்தனைகள்.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

ஆன்மிகச் சிந்தனைகள்.

Post by cm nair » Fri May 30, 2014 3:35 pm

1. சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டடு
அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.

நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.

நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.

குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.

ஆதலினால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.

2. நீ இறைவனுடைய கருனையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.

அது வெறும் வணக்கமும் வழிபாடும் மட்டுமன்று.

துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருனை செய். அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருனை செய்தால்
கடவுள் உன்னிடம் கருனை செய்வார்.
கருணையால் கருணையைப் பெறலாம்.
இதனை ஒருபொழுதும் மறவாதே.


3. உலகத்திலே நீ இரு. ஆனால் உலகம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

குடும்பத்தில் நீ இரு. ஆனால், குடும்பம் உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

உலகமும் குடும்பமும் உள்ளத்தில் புகுந்தால்
நீ அழுந்திவிடுவாய்.

வண்டிமேல் நீ ஏறு; வண்டி உன்மேல் ஏறக்கூடாது.

கப்பல் கடலில் இருக்க வேண்டும், கடல்
கப்பலில் புகக்கூடாது. கடல் நீர் கப்பலில் புகுந்தால் கப்பல் அழிந்திவிடும்.


4. வேறு எந்தப் பிராணிகளுக்கும் இல்லாத நரையை உனக்கு இறைவன் தந்தது எதன் பொருட்டு என்று சற்றுச் சிந்தித்துப் பார்; ஏனைய பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை;
மனிதனாகிய உன்னில் உறையும் உத்தமனை
அடைய நீ வந்தாய். அதை மறந்தவருக்கு ஓர்
உணர்ச்சி வரும்பொருட்டே இறைவன்
நரையைத் தந்தான்.

நரைக்கத் தொடங்கும்போதாவது உன் ஆவி
ஈடேறும் நெறியில் செல்.

5. யாசித்து, நெய்யும் பாலும் தயரும் சேர்நத் சிறந்த அன்னதை உண்பதைவிட, உழைத்து உண்ணும் தண்ணீரும் சோரும் சிறந்தது.

வீரமும் புகழுமில்லாமல் மங்கி நெடுங்காலம் இருப்பதைவிட, வீரமும் புகழும் பெற்றுச்
சிறிது காலம் வாழ்வது சிறந்தது.

உமிக குவியல் நெடுநேரம் காந்திக்
கருகவதைவிட, தைலமுள்ள மரம்
ஜொலித்துச் சிறிது நேரம் எரிவது சிறந்தது.

6. புலன்களை வென்றவனே வீரன்.
இறைவனுடைய இலக்கணங்களை உணர்ந்தவனே ஞானி.

துன்பங்களைப் பொறுப்பவனே தவசி.

விருந்தினருக்கென்று வாழ்பவனே இல்லறத்தான்.

அறஞ் செய்ய வாய்ப்பு இல்லாதபோது இறந்தவனே இருந்தவன்.

கொடுக்காமல் பொருளைத் திரட்டி வாழ்பவனே இறந்தவன்.


7. அழுக்கு மூன்று வகையாகும்..
i) மன அழுக்கு. அவை:- பொறாமை, ஆசை, கோபம்,
பகை என்பன.
இந்த மன அழுக்கைத் ‘தியானம்’ என்ற நீரால் கழுவுக.
ii). வாயழுக்கு, அவை:- பொய், புறங்கூறல், தீச்சொல்
என்பன.
இந்த வாயழுக்கைத் ‘துதி’ என்னும் நீரால் கழுவுக.
iii). மெய்யழுக்கு. அவை:- கொலை, புலை, பிறன்மனை
நயத்தல், களவு முதலியன.
இந்த மெய்யழுக்கை ‘அர்ச்சனை’ என்னும் நீரால் கழுவுக.

8. நாவுக்கு அடிமையாகாதே! ‘நல்லுணவு எங்கே? எங்கே?
என்று தேடி ஏங்காதே. இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடை.

நாவுக்கு அடிமையானால் உனது நல் குறையும்.

மீன் சதா உணவாசையினால் ஒழியாமல் தண்ணீர்ல்,
உலாவுகிறது, ஒருசமயம் உணவாசையால் தூண்டிலில் பட்டு இறந்துவிடுகிறது.

9. பாம்பு, தேள், நட்டுவாக்கிலி முதலிய பெருந் துன்பத்தைச்
செய்யும் உயிர்களைப் போலவும்.
பெருச்சாளி, எலி, பூனை, நாய் முதலிய துன்பத்தைச் செய்யும் உயிர்களைப் போலவும்,
கொசு, மூட்டை பூச்சி, உணி முதலிய சிறு துண்பத்தைச்
செய்யும் உயிர்களைப் போலும் நீ இருக்காதே.

அனில் என்ற உயிரை நோக்கு; அது ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்கிறது சேதுபந்தனத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது. அதுபோல் வாழ்தல் வேண்டும்.

10. பிறர் உன்னை வைவார்களாயின் அந்த வன்சொற்களை இன் சொற்களாக கருது.
நீ எக்காரணத்தைக் கொண்டும் எப்போதும் எவ்விடத்தும் பிறரை வன்சொல் கூறி வையாதே.
கிடைத்தது கூழாயினும் அதனை
நெய்யன்னமாகக் கருதி உணவு செய்.
பழம் பாயேயானாலும் பஞ்சனையாகக் கருதிப் படு.
கசப்புப் பெருளாயினும் அதனைக் கற்கண்டாகக் கருதி
உட்கொள். அதனால் மெய்ப்பதம் காண்பாய்.

11. இப்போது நீ செய்கிற விவசாயத்தின் பயனை அடுத்த
ஆண்டில் நீ அனுபவிப்பாய்.
நன்கு உழைத்துப் பாடுபடுவாயானால் நல்ல பயன் விளையும். அடுத்த ஆண்டு உனக்கு நலமாக இருக்கும்.
சோம்பலாக இருந்து பாடுபடாமல் பொழுது போக்குவாயானால் அடுத்த ஆண்டில் உனக்கு நன்மை இராது.

அதுபோல் இந்தப் பிறப்பில் நீ செய்யும்
நன்மைகளை மறுபிறப்பில் அனுபவிப்பாய்.
நன்மை செய்யாமல் சோம்பியிருந்து, தீங்கு புரிவாயானால், மறுபிறப்பில் உனது வாழ்வு சிறப்படையாது தாழ்வு அடையும்.

12. பிறவியைத் தருவது பற்றும் அவாவுமாகும் என்று அறி.

பற்று என்பது:- உனது பொருளில் உள்ளம் வைப்பது.
அவா (ஆசை) என்பது:- பிறர் பொருளில் ஆசை வைத்திருப்பதால் பெருங்கேடு வரும்.
முதலில் ஆசையைத் தொலைத்துவிடு; பின்பு
பற்றையும் ஒழித்துவிடு.

‘அற்றது பற்றெனில் உற்றது வீடு’

13. பணிவு என்ற பண்பு உன் வாழ்க்கையின்
உயிர் நாடி. பணிவு இன்றி வாழ்பவனுடைய
வாழ்க்கைத் திறம் நிச்சயமாக
உயர்ச்சியடையாது.

14. இன்பமும் துன்பமும் உனது
மனதிலிருந்து உண்டாகின்றன; மனமே
பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகிறது.
தீய மனம் நரகத்தைத் தருகிறது. நன்மனம்
பரகதியைத் தருகிறது.
மனத்தழுக்கு அற்றவரே பெரியார்.
மனத்துக்கண் மாசில்லாமல் இருந்தால் எல்லா
அறங்களும் உண்டாகும். ஆதலினால் உன் மனம்
பளிங்குபோல் இருக்கட்டும்.

15. ஒரு மனிதனை வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு
நல்லவனென்றோ! தீயவனென்றோ! உறுதி செய்துவிடாதே, உள்ளத்தின் பண்பைக் கண்டு முடிவு செய்.

பலாப்பழம் முள்ளு முள்ளாக மேலே தோற்றமளிக்கும்.
உள்ளுக்குள் சுவையுள்ள சுளைகள் பல உண்டு. வீணை கோணல் – ஆனால் இனிய நாதமுண்டு.

எப்படிப்பழம் மேலே பளபளவென்றிருக்கும்; தொட்டாலே கசக்கும். நாவற்பழம் கருமை; ஆனால் இனிக்கும். பாம்புக்குட்டி பளபள வென்றிருக்கும்; கொடிய விஷத்தைத் தரும். அம்பு நேராக இருக்கும்; உயிரை வாங்கும்.

16. உன் இனத்துடன் நீ ஒற்றுமையாக இரு. அப்போதுதான்
உனக்கு உயர்வும் மதிப்பும் அழகும் உண்டாகும்.
உன் இனத்தை விட்டு நீ பிரிந்துவிட்டால் நீ எல்லோராலும் வெறுக்கப்படுவாய்.
தலையிலே மயிர் இருக்கும்போது அது
எவ்வளவு அழகாக உள்ளது? இருண்டு, சுருண்டு, நெய்த்து மிக அழகாக அமைந்து மதிப்பும் அழகும் பெறுகிறது. ஆனால் தன் இனத்தை விட்டு ஒரு மயிர் தனித்து வேறுபட்டு வந்துவிடுமானால் அது இகழ்வும் அருவருப்பும் அடைகிறது. இதனை நீ எண்ணிப் பார்த்து ஒற்றுமையாக இரு.

17. உனது மனைவி மக்களுக்கு நிரம்ப வேண்டும் என்று,
பொய்யும் வஞ்சனையும் செய்து பொருளைத் தேடாதே. அப்படித் தேடுவதனால், நீ தேடிய பொருள் மனைவி மக்களையடைந்து அவர்களுக்கு தீமையை விளைவிக்கிறது. அதனால் வரும் பாவ மூட்டை உன் உயிருடன் தொடர்ந்து வருகிறது.

உடம்புக்குச் சில ஆண்டுகள் தொடர்புடைய மனைவி மக்களுக்காகத் தீய வழியில் பொருள் ஈட்டி வைத்துவிட்டு, நீ கணக்கற்ற பாவத்தைச் சுமந்துகொண்டு போவது எத்துனைப் பெரிய மடமை? எண்ணிப் பார். அறநெறியில் பொருளை ஈட்டு.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”