இனி, மொழி தெரியாத ஸ்லோகத்தையும் எளிதாக உச்சரிக்கலாம்!

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

இனி, மொழி தெரியாத ஸ்லோகத்தையும் எளிதாக உச்சரிக்கலாம்!

Post by தீபக் » Fri Mar 28, 2014 9:02 pm

சமஸ்கிருதம் அல்லது தெலுங்கு ஸ்லோகங்களையோ, பாடல்களையோ தமிழில் அதே உச்சரிப்போடு எழுதி வைத்துக்கொண்டு படிப்பது அல்லது பாடுவது நம் வழக்கம். இதற்கு முக்கிய காரணம், நமக்கு சமஸ்கிருதமோ, தெலுங்கோ தெரியாததுதான். ஆனால், அவ்வாறு தமிழில் எழுதிப் படிக்கும்போது அவற்றைச் சரியாக உச்சரிக்க இயலுவதில்லை. காரணம், ‘ப’ என்று எடுத்துக்கொண்டால், அதை அவ்விரு மொழிகளும் நான்கு வகை ஒலியன்களைக் (உச்சரிப்புகளைக்) கையாள்கின்றன. ஆனால், தமிழைப் பொறுத்தவரை ஒரே ஒரு ‘ப’ தான்.

சில சமஸ்கிருத ஸ்லோகப் புத்தகங் களில் இந்த நான்கு வகை உச்சரிப்பு களையும் வேறுபடுத்திக் காட்ட 1, 2, 3 அல்லது 4 என்று அந்தந்த எழுத்துக்குக் கீழே குறிப்பிடு வார்கள். அதாவது, இந்த எண்கள் அந்த நான்கு வகை உச்சரிப்புகளை அடையாளம் காட்டுகிறது என்பதாக. ஆனால், சமஸ்கிருதம் தெரியாத ஒருவர் 1, 2, 3, 4 என்ற எண்ணை, எப்படி, எந்த உச்சரிப்பு என்று அடையாளம் காண்பார்? இது முற்றிலும் இயலாத செயல். மேலும் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு எழுத்துக்கும் முன்பக்க அகராதி விளக்கத்தை புரட்டி புரட்டி பார்க்க வேண்டும்.

எண்கள் அடிப்படையிலான அந்த உச்சரிப்புகள் மனப்பாடம் ஆவது என்பதும் சாத்தியமில்லை. இச்செயலால், பாடு பவர்க்கு அல்லது படிப்பவர்க்கு எண்ண தொடர்ச்சி தடைபடும்; காலம் வீணாகும். கவனம் போய்விடும். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து தற்போது திருப்பதியில் வாழ்ந்து வரும்
திரு.அன்னமையா விஜயராகவலு என்ற தெலுங்கு- தமிழ்க் கவிஞர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான புது உத்தியை இந்த உச்சரிப்புப் பிரச்னைக்குத் தீர்வாகக் கொண்டுவந்திருக்கிறார். திரு.விஜயராகவலு, தாள்ளப்பாக்க அன்னமையா வம்சத்தின் 12வது பரம்பரையினர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் தெலுங்கில் திரு ந.சுப்புரெட்டியாரிடமும், தமிழில் பேராசிரியர் மு.வரதராசனாரிடமும் அந்தந்த மொழிகளில் செம்மை பெற பயின்றவர். குறிப்பாக பேராசிரியர் வரதராசனாரின் அறிவுரையை இன்றளவுக்கும் இவர் மறக்காதிருக்கிறார். என்ன அறிவுரை அது? ‘‘தமிழ் மாணவனான நீ, தெலுங்கு தேசத்தில் வாழ்கிறாயா, அப்படியானால் தெலுங்கை நன்றாகப் படி. பிறகு, தெலுங்கு இலக்கியத்தைத் தமிழில் கொண்டுவா,’’ என்ற அந்த அறிவுரையை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, தெலுங்கு மொழியில், இலக்கியத்தில் புலமை பெற்றார் விஜயராகவலு.

ஏற்கெனவே தமிழர் என்பதால், தெலுங்குப் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இப்படி மொழிமாற்றம் செய்தபோதுதான் இவருக்கு ஒரு யோசனை உதித்திருக்கிறது. அதுதான் தெலுங்கின் நான்கு வகை உச்சரிப்புக்கு ஆங்கில எழுத்துகளை வைத்தே அடையாளம் காட்டுவது என்பது. ‘‘பொதுவாகவே தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்குமே ஆங்கில எழுத்துகள் நிச்சயம் பரிச்சயமாக இருக்கும்; அவற்றை அவர்களால் சரியாக உச்சரிக்கவும் முடியும்,’’ என்று தீர்மானமாகச் சொல்லும் இவர், அந்த யதார்த்தத்தின் அடிப்படையிலேயே தெலுங்குப் பாடல்களில் ஆங்கில எழுத்துகளை வைத்தே உச்சரிப்பை அடையாளம் காட்டுகிறார்.

உதாரணமாக அக்கா என்ற சொல்லில் உள்ள க, Ka என்றே ஒலிக்கிறது. நகம் என்ற சொல்லில், ‘க’ எழுத்து மாறுபடாவிட்டாலும் Ga என்று ஒலிக்கிறது.
பம்பரம் என்ற சொல்லில் முதலில் வரும் 'ப', Pa என்றும், இரண்டாவதாக வரும் 'ப', Ba என்றும் ஒலிக்கின்றன. இதனாலேயே குறிப்பிட்ட இந்த எழுத்துகளுக்குக் கீழ், ஆங்கில எழுத்துகளை இட்டால், உச்சரிப்பு சரியாக அமையும். தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனமான 'பண்டு தீய கொலுவிய்ய ராதா' என்ற பாடலில் வரும் பண்டு, Bantu என்றே சொல்லப்பட வேண்டும்.

தெலுங்கு தெரியாதவர்கள் Pantu என்றோ Pandu என்றோ உச்சரிக்க வாய்ப்பிருக்கிறது. Bantu என்றால் தெலுங்கில் வேலைக்காரன்; Pandu என்றால் பழம்! பொருளே மாறுபடுகிறது! எனவே, வேறுபடுத்தி காட்டுவதற்காக 'பண்டு' (Bantu) என்ற சொல்லில் 'ப'விற்கு கீழ் 'B' என்றும், ‘டு’விற்குக் கீழ் 'tu' என்றும் குறிப்பிடலாம் என்பது இவரது யோசனை. தாள்ளப்பாக்க அன்னமாசாரியார், பாமரரும் சாமானியரும் அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் தத்துவங்களையும், பக்தி மார்க்கத்தையும், எளிய நடையிலே விளக்கி, 32000 கீர்த்தனங்களை எழுதியுள்ளார்.

எனவே, தெலுங்கு மொழி தெரியாதோரும் புரிந்துகொள்வதற்காக, தமிழிலிருந்து மாறுபடும் ஒலியன்கள் கொண்ட எழுத்துகளுக்குக் கீழே ஆங்கில எழுத்துகள் குறிக்கப்பட்டுள்ளன. விஜயராகவலுவின் இந்த உத்தியை இதற்கு முன் வேறு யாரும் முயற்சித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தப் புதுமையை, சமஸ்கிருத அல்லது தெலுங்குப் பாடல்களைச் சரியான உச்சரிப்போடு அனைவரும் படிக்க, பாட வேண்டும் என்ற அவரது ஆர்வத்தைப் பாராட்டும் வகையில் சில பாடல்களை இங்கே பிரசுரிக்கிறோம். பாடலுக்குக் கீழே காணப்படும் தமிழாக்கமும் விஜயராகவலு அவர்கள் உருவாக்கியதுதான்.

கந்தமு பூசவேல - 5/2

சந்தனமே பூசுகிறாய் மேனியிலே
சந்தனம் உன் அவளைவிட சிறந்ததோ
கண்ணாடி ஏனோ பார்க்கிறாய் அவ்வய் பொழுது
கண்ணாடியோ அவள் அழகு வதனத்தைவிட
அபுரூபமா
கண்ணிலே தாமரை இதழ் ஒத்தி ஒத்திகை
பார்க்கிறாய்
வண்ணவிழி பார்வையைவிட கமலமும் சிறந்ததோ
தங்கமே மேனி எங்கும் அணிவதேனோ
தங்கபதுமை அவள் ஒளிக்கு ஈடாகுமோ
சிங்கார மோதிரமேன் சின்ன விரலுக்கே - அவள்
சிங்கார நகத்திற்கே இந்த மணிகள் பொருத்தமா
கொண்டை நீண்ட ஜடைதான் எதற்கு - அவள்
நீண்ட ஜடைக்கே இணையாகுமோ - திரு
வேங்கடவா உனக்கேன் இன்னும் அழகு
மங்கை அவள் இணை இல்லா அழகை விடவா.

இதிகாக சௌபாக்ய - 5/17

இதைவிட சௌபாக்யமும்
இதைவிட தவமும் இன்னும்
இதைவிட வைபவமும் இன்னொன்று உண்டோ?
மானிய ஜென்ம மீதினில் ஆசை கொண்ட பரம
யோகிபோல்
வீணான மோக ஆசை எல்லாம் விட்டதே
சதியவளின் எண்ணமது சாந்தமானது
காணுங்களேன்
புதிய விஞ்ஞான வாஸம்போல் இருந்தாளே
தாரிணி இதயமது பிறந்த பயனாய் அவனை
அடைந்தே
பரவச ஆனந்த அணிகளுக்கு பொருத்தமானாளே
இந்நிலையிலே திருமகள் மணாளன்
மனதை வெற்றி கொண்டாளே
நிலையிலா மனதும் நிலையான பாவமானதே
திருவேங்கடவனை எண்ணியே பரதத்வமதை
நிஜமாய் அடைந்தே அக்கணமே அவள் ஆத்மா
தேவதேவனின் அருளுக்கு பாத்திரமாய்
அலர்மேல் மங்கையவள் உள்ளமது நிலையானதே

கலலோ - 5/21

கனவிலே இருவரும் கண்டு கண்டு வாடுவதேன்
கனவென்று தெரிந்து உன்மீது மையல்
கொண்டேன்
அண்டை அயலார் இவனே மணாளன்
எனகேட்டு
வழக்கம் தெரியாது வாடினேனே
உன் எண்ணம் என் மனதை வாட்டிட இன்று
இதற்குள்ளே
மலர்ந்த மலர்களெல்லாம் வாடியதே
அந்தி சாயும் நேரம் சந்திரனே சூரியனாய் காய
சந்தன மேனியும் தோயுதே
சந்தனம் வெறுத்ததே கஸ்தூரி என்றதும்
பந்தம் எப்பொழுது வரும் அப்பொழுது
கொண்ட எண்ணம் ஈடேறுமடா
கோனேரிக்கரை தேவ உன்னை விட மாட்டோம்
நீ எங்கு சென்றாலும் என்மேனியை எங்ஙனம்
சுமப்பேனோ
நம்மிருவர் நிலை நான் மறந்தேன்
எப்படியும் எண்ணம் ஈடேற்றுவாய் என
நினைத்தேனடா
உறக்கம் கலைய கனவென்று எண்ணி
தெளிந்தேனடா

அலருலு குரியக நாடனதே - 5/24

ஆனந்த நர்த்தனம் ஆடி வந்தாள் மலர் சிந்த
சிற்றிடை அசைந்திட அலர்மேல் மங்கை
அழகிய மங்கையர் அதிசயத்து மெச்சிட
அறை திரை மறைவினில் ஆடினளே
சின்ன அசைவினில் அழகிய நங்கை
ஸ்ரீஹரி உருகிட அலர்மேல் மங்கை
கால்கள் பின்னலிட தோகை மயிலென
தாளமிடும் நடை நடந்து ஆடினளே
சூடிய வைர அட்டிகை அலை பாய
சுழன்று சுழன்று அலர்மேல் மங்கை அங்கும்
இங்கும்
சிந்து பாடலுக்கு அழகிய ஆடலுக்கு
மென்மேலும் அழகாய் ஆடினளே
அன்பான திருவேங்கடன் புகழ்ந்திட
அழகாய் சுழன்று சுழன்று ஆடினளே
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”