மகாசிவராத்திரி மகிமையை நான் அறிந்த நன்மைகள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

மகாசிவராத்திரி மகிமையை நான் அறிந்த நன்மைகள்

Post by agntvm » Thu Feb 27, 2014 12:12 pm

மகாசிவராத்திரி மகிமையை நான் அறிந்த நன்மைகள்
மகாசிவராத்திரி, பிரதோஷம், திருவோண விரதம்,
வழிபாடு: சிவாலயங்களில் மாலை 4.30- 6 மணிக்குள்
நந்திதேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்,
இரவு சிவபெருமானுக்கு நான்கு கால அபிஷேகம் செய்து
வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து
வழிபடுதல் மிகவும் நன்மை தரும்.

[youtube]http://www.youtube.com/watch?v=RzAPUt4L6Yw[/youtube]

[youtube]http://www.youtube.com/watch?v=HdHmhgM8OFo[/youtube]

[youtube]http://www.youtube.com/watch?v=vwnNp1dbL2g[/youtube]

சிவராத்திரி தோன்றியது எப்படி?
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும்
பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள்
மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே
பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார்.
இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும்
பயந்தனர். அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள்.
இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி
கொண்டாடப்படுகிறது.
சிவனாரை வழிபட்ட பார்வதியாள், இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை
வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில்
செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும்
என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும்
அருள்பாலித்தார். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.

பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து
திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில்
சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு
யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி
என்றும் கூறப்படுகிறது. இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி
தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, விரதம் இருந்து
முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து, இரவு கண் விழித்து
நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால், துன்ப இருள்
அகன்று, சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும்.
மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் நடராஜ மூர்த்தியையும்,
பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல்
காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும்,
மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட
(சந்திரசேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும். இந்தத் திருநாளில்
கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், திருவிளையாடல் கதைகள்,
அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும்
ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும்
கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம், உங்களை
வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை
14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும்
பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி)
இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும்.
வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது.
நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால்
அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த
விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி,
தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற,
எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர்.
விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம்.
இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும்,
எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட
மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”