திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு

Post by தீபக் » Sun Jan 12, 2014 9:04 am

Image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டுநடைபாதையில் வரும் பக்தர்களுக்கான டிக்கட் விற்பனை நேற்று துவங்கியது. திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய நாள்களில் சொர்க்கவாசல் என்னும் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிந்தா மாலை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க வருவது வழக்கம். பொங்கல் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என தேவஸ்தானம் எதிர்பார்க்கிறது. இதனால் இன்று வி.ஐ.பி.க்கள் குலசேகரப்படி வரை அனுமதிக்கப்பசுவார்கள். அதன்பிறகு சர்வ தரிசனம் மற்றும் மலைப்பாதையில் வரும் திவ்ய தரிசன டிக்கட் பெற்றவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் ரூ.300 டிக்கட் பெற்ற உள்ளூர் பக்தர்கள் 10,11, 12 மணி ஆகிய நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் ஏகாதசிக்கான திவ்ய தரிசன டிக்கட் வழங்கப்பட்டது. இந்த டிக்கட் பெற்றவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் நாராயணகிரி தோட்டத்தலிருந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனால் இன்று நடைபெற இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனா ளிகள் ஒரு வயது குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. திவ்ய தரிசன பக்தர்களுக்காக வைகுண்ட ஏகாதசி 25 ஆயிரமும், துவாதசிக்கு 15 ஆயிரம் டிக்கட்டுகளும் வழங்க அதிகாரிகல் முடிவு செய்துள்ளனர். சுமார் 1 லட்சம் லட்டுகள் தயாராக உள்ளதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி பழனி வருகிறார்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”