லஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

லஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி

Post by cm nair » Sun Dec 22, 2013 2:10 pm

மருதாணியை வைத்துக்கொண்டால் லஷ்மி கடாக்ஷம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் இன்றுவரை மதுரையில் இருக்கும் மதனகோபால சுவாமி ஆலயத்தில் இருக்கும் தாயாருக்கு மருதாணியை காணிக்கையாக தருகிறார்கள் பக்தர்கள். அதனை அர்ச்சகர்கள் தாயார் பாதத்தில் வைத்து அந்த மருதாணியை பக்தர்களுக்கு தருவார்கள். அந்த பிரசாதத்தை கையில் வைத்துக்கொண்டால் பக்தர்களுக்கு ஐஸ்வரியங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இ...து உண்மையும் கூட என்கிறார்கள் பக்தர்கள்.

ஏன் தாயாருக்கு மருதாணியை காணிக்கையாக தருகிறார்கள்.? மருதாணிக்கும் ஸ்ரீமகாலஷ்மிக்கும் என்ன சம்மந்தம் என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

சீதை, இராவணனால் கடத்தபட்டு அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள். அந்த அசோகவனத்தில் மருதாணி செடிகளும் இருந்தது. சீதை, தன் மனகவலையை யாரிடம் சொல்வது? என்றும், யாரிடமாவது சொல்லி அழுதால் மனம் ஆறுதலாக இருக்கும் என எண்ணினாள். ஆனால் அந்த அசோகவனத்தில் இருந்த அனைவரும் அரக்கிகள்.

அச்சமயத்தில் அசோகவனத்தில் இருக்கும் செடிகொடிகளிடம் தன் துயரத்தை சொல்வாள். அப்போது, அங்கு இருந்த மருதாணி செடி ஒன்று, சீதை சொல்லும் துன்பங்களை கேட்பது போல் அசையும். இதை பார்த்த சீதாதேவி, தன் கஷ்டத்தை கேட்க இந்த அசோகவனத்தில் இந்த மருதாணி செடியாவது இருக்கிறதே என்று ஆறுதல் அடைவாள். தினமும் அந்த மருதாணி செடியிடம், தன் தோழியிடம் பேசுவது போல பேசி வந்தாள் சீதை. சீதையின் பேச்சுக்கேற்றார் போல அந்த செடியும் தலை அசைக்கும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”