இந்த வார விசேஷங்கள் (10-12-2013 முதல் 16-12-2013 வரை)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

இந்த வார விசேஷங்கள் (10-12-2013 முதல் 16-12-2013 வரை)

Post by தீபக் » Fri Dec 13, 2013 8:02 pm

10-ந் தேதி (செவ்வாய்)

* சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* ஆவுடையார் கோவில் சிவபெருமான் முதலமைச்சர் திருக்கோலம், இரவு பூத வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* சங்கரன்கோவில் சிவபெருமான் தந்த பல்லக்கில் பவனி வரும் காட்சி.
* கீழ் நோக்கு நாள்.

11-ந் தேதி (புதன்)

* ஆவுடையார் கோவில் சிவபெருமான் கோஸ்திரிபுர சம்ஹாரம், இரவு கைலாச பர்வத வாகனத்தில் திருவீதி உலா.
* திருக்குற்றாலம் சிவபெருமான் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி.
* சிதம்பரம் சிவபெருமான் காலை சூரிய பிரபையில் புறப்பாடு.
* மேல் நோக்கு நாள்.

12-ந் தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
* ஆவுடையார் கோவில் சிவபெருமான் காலை வெள்ளி சீவிகையிலும், மாலை சிவ பூஜை செய்தருளல். திருக்குற்றாலம், சங்கரநயினார் கோவில் ஆகிய தலங்களில் சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* வீரவநல்லூர் சுவாமி அம்பாள் வெள்ளி விருட்ச சேவை.
* சமநோக்கு நாள்.

13-ந் தேதி (வெள்ளி)

* கைசீக ஏகாதசி, சர்வ ஏகாதசி.
* வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.
* ஆவுடையார் கோவில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்தில் திருவீதி உலா.
* திருக்குற்றாலம் சிவபெருமான் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம், இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.
* வீரவநல்லூர் சிவபெருமான் விருட்ச சேவை, இரவு இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா.
* சமநோக்கு நாள்.

14-ந் தேதி (சனி)

* சனிப் பிரதோஷம்.
* ஆவுடையார் கோவில் சிவபெருமான் காலை ருத்ராட்ச விமானத்தில் பிட்டுக்கு மண் சுமந்து அருளிய காட்சி.
* வீரவநல்லூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
* கீழ் நோக்கு நாள்.

15-ந் தேதி (ஞாயிறு)

* செப்பரையில் அழகியகூத்தர் உருகுசட்ட சேவை.
* ஆவுடையார் கோவில் சிவபெருமான் எல்லாம் வல்ல சித்தராய் காட்சியளித்தல், இரவு வெள்ளை குதிரையில் சேவகனாய் காட்சி தருதல்.
* திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் பவனி.
* கீழ் நோக்கு நாள்.

16-ந் தேதி (திங்கள்)

* தத்தாத்திரேயர் ஜெயந்தி.
* திருப்பெருந்துறை சிவபெருமான் மகா ரத உற்சவம்.
* சிதம்பரம் சிவபெருமான் தங்க ரதத்தில் பவனி.
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”