Page 1 of 1

நான் யார்? இக்கேள்வியினை உங்களிடம் நீங்கள் கேட்டீர்களா?

Posted: Sat Dec 07, 2013 3:53 pm
by ஆதித்தன்
[youtube]http://www.youtube.com/watch?v=vd5FitbLaV4[/youtube]

நான் யார்?

தன்னைத் தானே அறிய வைக்கும் தியானக் கலை.

Re: நான் யார்? இக்கேள்வியினை உங்களிடம் நீங்கள் கேட்டீர்களா?

Posted: Tue Dec 10, 2013 3:19 pm
by cm nair
நான் என்று ஒன்றில்லை...

நான் ஒரு யந்திரம்....

என்னை இயக்குபவன்...பரம்பொருள்.....

அந்த பரம்பொருளுக்கு உருவம் இல்லை...

காற்று.... .....நீர் என பஞ்ச பூதங்களுடன்

உணர்வும் இணைந்தது......

நான் மாயையில் உட்பட்ட ஒன்று....

மாயையினால் இன்ப..துன்பங்கள் வருகின்றன.....

நான் ஒரு ஆன்மா...!

ஆன்மாவாகிய எனக்கு மரணம் இல்லை.....

இன்ப.. துன்பம்... விருப்பம்... வெறுப்பு.... என்று

எந்த உணர்வுகளும் இல்லை......

உடல் என்னும் கூட்டினுள் வசிக்கிறேன்....


கூடு அழிந்தாலும் ஆன்மாவாகிய

எனக்கு மரணம் இல்லை.....

என்னை அறிந்தவன் தன்னையும்,

பிரபஞ்சத்தையும் அறிகிறான்... ஆள்கிறான்...

பரம் பொருளையும் அறிகிறான்...

தியானம் மூலம் இந்த கேள்விக்கான

பதில் கிடைக்கலாம்.....

தியானம் செய்ய முதலில் அமைதியாக

இருக்க பழகி கொள்ளுங்கள்..

நாள்பட நாள்பட... தியானத்தில் லயிக்கலாம்.

கற்றறிந்த இந்த படுகை தளம்தனில் அடியேனின் சிந்தை தவறு எனில் மன்னிக்கவும்......

Re: நான் யார்? இக்கேள்வியினை உங்களிடம் நீங்கள் கேட்டீர்களா?

Posted: Sat Apr 18, 2015 1:17 am
by marmayogi
நான் யார் என்ற கேள்விக்கு:-

தலையிலிருந்து பாதங்கள் வரை ஒவ்வொரு உறுப்புகளையும் இது என் தலை, எனது கால், எனது உயிர், எனது மனம் என்று ஒவ்வொன்றையும் எனது எனது என்று உரிமை கொண்டாடுகிறதே அது யார்?.உங்களுடைய உடலுக்குள் எங்கு தேடினாலும் கிடைக்காது அது. அது சூன்யமானது.

அந்த சூன்யம்தான் சுத்தவெளி,இறைவெளி. அதுதான் இப்போது இந்த உடலாக இருக்கிறது. அதனால்தான் இதை தன்னுடையதாக உரிமை கொண்டாதுகிறது. எனக்குள் இருக்கும் இறைவனே நான் என்று சொல்கிறது.நான் இறைவன்.

நான் கடவுள்

நானே பிரமம்

நானே சிவகலம்

நானே இறைதுகள்

நானே கடவுள்துகள்

நானே பரமணு

நானே ஆதி அந்தம்

நானே சுத்தவெளி

நானே வெட்டவெளி

நானே இறைநிலை

நானே ஆதி மூலம்

நானே சிவம்

நானே கும் இருட்டு

நானே சூழ்ந்தலுத்தும் ஆற்றல்

நானே அதுவாக இருக்கிறேன்

நான் என்ற வார்த்தை அகங்காரத்தை குறிப்பதாகும் . நான் என்ற வார்த்தை அகங்காரத்தை குறித்தால்,ஞா னம் அடைய வேண்டும் என்பதே "நான்" என்ற உணர்சியை குறிக்கிறது. நான் என்ற அகங்காரமே மனிதன். அகங்காரத்தின் முழு வடிவம் மனிதன்.

Re: நான் யார்? இக்கேள்வியினை உங்களிடம் நீங்கள் கேட்டீர்களா?

Posted: Sun Apr 19, 2015 8:35 pm
by marmayogi
Image
எல்லா மகான்களும் பிறப்பை வெல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் வள்ளலார் மட்டும் மரணத்தை வென்றால் தான் பிறப்பை ஒழிக்க முடியும் என்று கூறினார் .


அதை செய்து காண்பித்தவர் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள். வள்ளலாரை ஒன்பது முறை புகை படம் எடுத்தார்கள். ஒரு புகைபடத்தில் கூட அவர் ஸ்துல தேகம் தெரியவில்லை. அவர் உருவம் ஒளி தேகமாக மாறிவிட்டது. நாம் எப்போது மரணத்தை ஜெயிப்பது?. யாராவது மரணத்தை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இருக்கிறதா?.
Image
மரணம் அடைந்தால் திரும்ப திரும்ப பிறந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டும். இந்த ஜென்மத்தில் மனிதனாக பிறந்து விட்டோம் ஓகே!!!. அடுத்த ஜென்மத்தில் நம் நிலை என்ன ?. எதிர்பாராத விதமாக விலங்காக பிறந்து விட்டால் அடுத்த வேலை உணவுக்கு எதை நம்பி வாழ்வது!!.

விலங்காக பிறந்துவிட்டால் நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் போய்விடுமே !!!!. மற்ற உயிர்களுக்கு பயந்து நடுங்கி ஓடி ஒழிந்து வாழ வேண்டுமே!!!!. இது தான் மனித வாழ்க்கையா!!!!.


ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்நாளை வீணடிக்கிறான். புற உலகில் கவனத்தை செலுத்தி இறப்பிற்காக காத்திருக்கிறான்.

Re: நான் யார்? இக்கேள்வியினை உங்களிடம் நீங்கள் கேட்டீர்களா?

Posted: Fri May 29, 2015 1:55 pm
by marmayogi
நான் யார் ?
ஆதிப் புள்ளி , அகர புள்ளியுள் இறைவன் இருக்கிறார் .
விதி எழுத்தை மாற்றும்
மதி எழுத்தின் உள்
இறைவன் இருக்கிறார் .
இவற்றை ,
மெய்க்குருவின் மக்கா மதி
நா வின் மூலம் ,
நா விண் மூலம் ,
யா
ன்
அறிந்நு தொழுதால் ,
நான் யார் என்று அறியலாம் .