வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

Post by cm nair » Fri Oct 11, 2013 9:20 am

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் -1 கப்
தண்ணீர்-2 கப்
கேரட்-1
பீன்ஸ்-4
பச்சைப் பட்டாணி-ஒரு கைப்பிடி
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3
கறிவேப்பிலை, கொத்துமல்லி - கொஞ்சம்
கடுகு-1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பு- தலா 1/2டீஸ்பூன்
உப்பு எண்ணெய்

செய்முறை

* வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும்.

* கேரட், பீன்ஸை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.

* கேரட்-பீன்ஸ்-பட்டாணியை தேவையான தண்ணீர் விட்டு 30 செகண்ட் மைக்ரோவேவ் செய்து எடுத்துக்கொள்ளவும்.

* ஓட்ஸை வெறும் கடாயில் வாசம் வர வறுத்துவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் மைக்ரோவேவ் செய்த காய்கள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

* தண்ணீர் கொதி வந்ததும் ஓட்ஸை சேர்க்கவும்.

* ஓட்ஸ் சில நிமிடங்களிலேயே வெந்துவிடும். தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை சேர்க்கவும்.

* சூடான சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி.

* ஓட்ஸை வறுத்து சேர்க்காமல் அப்படியே சேர்த்தால் உப்புமா கொழகொழவென ஆகிவிடும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”