பானகம்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

பானகம்

Post by cm nair » Sun Oct 06, 2013 10:09 pm

தேவையான பொருட்கள்:
***************************

புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - எலுமிச்சை அளவு
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
சுக்கு (அல்லது) இஞ்சி - ஒரு அங்குல துண்டு

செய்முறை:
***************

#புளியை நீர் மோர் பதத்திற்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

#வெல்லத்தை கால் கப் நீர் விட்டு மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

#சுக்கை தட்டி கொள்ளவும். (அல்லது) இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

#அரைத்த வெல்லத்தில் இஞ்சியை சேர்த்து நன்றாக மீண்டும் ஒரு முறைஅரைக்கவும்.

#அரைத்தவற்றில் புளி கரைசலை ஊட்டி ஒரு முறை அரைத்து பிரிட்ஜ்ஜில் வைத்துபரிமாறவும்.

#சுவையான பானகம் ரெடி.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”