Page 1 of 1

தனியா பிரியாணி

Posted: Mon May 23, 2016 12:44 pm
by SUGAPRIYA
பாசுமதி அரிசி - 2 கப், -தனியா = அரை கப், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன். அரைக்க: புதினா - அரை கட்டு, மல்லித்தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பல், பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் -



செய்முறை: தனியாவை 4 கப் தண்ணீரில் வேகவையுங்கள். தனியா வெந்து, தண்ணீர் 3 கப் அளவுக்கு வந்ததும், தண்ணீரை வடித்துத் தனியே வையுங்கள்.  பாசுமதி அரிசியைக் கழுவி ஊற வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். குக்கரில் நெய், எண்ணெயைக் காய வைத்து வெங்காயம் சேருங்கள்.  வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி தயிர், தனியா வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதித்ததும் அரிசி சேர்த்து நன்கு கிளறி,  மூடி போட்டு ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.