சூரை மீன் கட்லெட்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Neela
Posts: 10
Joined: Sat Dec 22, 2012 11:24 am
Cash on hand: Locked

சூரை மீன் கட்லெட்

Post by Neela » Fri Sep 12, 2014 4:15 pm

தேவையான பொருட்கள்:
சூரை மீன் - 2 சிறிய டின்
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
முட்டை - 1-2 (நன்கு அடித்தது)
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, மசித்தது)
பிரட் தூள் - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு கரம்

மசாலாவிற்கு...
கிராம்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் பட்டை - 3 சிறிய துண்டுகள்

செய்முறை:
முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை லேசாக 2 நிமிடம் வறுத்து, குளிர வைத்த, பின் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சூரை மீனை நன்கு சுத்தமாக கழுவி, துண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, 3 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின்பு துண்டுகளாக்கப்பட்ட மீனை சேர்த்து, மீன் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும். (குறிப்பாக தண்ணீர் சேர்க்கக்கூடாது.) பின்னர் அந்த மீன் கலவையை குளிர வைத்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அத்துடன் சேர்த்து, கையால் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கட்லெட் போன்று தட்டையாகவோ அல்லது வட்டமாகவோ தட்டி, அதனை அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள மீன் கலவையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சூரை மீன் கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி/புதினா சட்னியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.
kselva
Posts: 97
Joined: Mon Jun 09, 2014 4:30 pm
Cash on hand: Locked

Re: சூரை மீன் கட்லெட்

Post by kselva » Fri Sep 12, 2014 4:56 pm

படிக்கும் போதே சூரை மீன் கட்லெட் சாப்பிட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பாராட்டுக்கள். :ro: :ro: :ro: :ro:
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”