தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 1/2 கப்
காய்கறிகள் - 1/4 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி அல்லது விருப்பமான காய்கறிகள்)
கொண்டைக்கடலை - 2 1/2 டேபிள் ஸ்பூன்
பாஸ்தா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 (சிறியதில் பாதி மற்றும் பொடியாக நறுக்கியது)
பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காய்கறிகளை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும். கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து, அதனை தனியாக குக்கரில் போட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, பாஸ்தாவை போட்டு, உப்பு சேர்த்து, பாஸ்தா வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி, நீரை வடிகட்டி, பின் அதனை தனியாக ஒரு பௌலில் போட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, வேக வைத்த கொண்டைக்கடலை, காய்கறிகளை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் பாஸ்தா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டி விட வேண்டும். காய்கறிகள் சாஸ் உடன் சேர்த்து ஒரு பதத்திற்கு வந்ததும், அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் இறுதியில் அதில் சோள மாவு சேர்த்து, நன்கு கிளறி விட்டு, கலவையானது சற்று கெட்டியாக, சூப் போன்று வரும் போது, அதனை இறக்கி, அதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால், அருமையான வெஜிடேபிள் பாஸ்தா சூப் தயார்!!!
- Forex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை
-
- It is currently Tue May 21, 2024 11:42 pm
- All times are UTC+05:30
வெஜிடேபிள் பாஸ்தா சூப்
உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- Posts: 10
- Joined: Sat Dec 22, 2012 11:24 am
- Cash on hand: Locked
Return to “நம் வீட்டுச் சமையலறை”
Jump to
- Forex Online Home Business Website
- ↳ ONLINE JOB PAYMENT PROOFS
- ↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க
- ↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்
- ↳ IndianCashier Currency Exchange
- ↳ இலட்சமே இலட்சியம்
- ↳ விளம்பரமும் பணமும்
- ↳ செய்தால் உடனடி பணம்
- ↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்
- ↳ டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- ↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்
- ↳ படுகை உறவுப்பாலம்
- ↳ படுகை ஓரம்
- ↳ உதவிக் களம்
- ↳ குப்பைத் தொட்டி
- ↳ பழமைச் சுவடுகள்
- ↳ படுகை பரிசுப் போட்டி மையம்.
- ↳ நம் வீட்டுச் சமையலறை
- ↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!
- ↳ சக்தி இணை மருத்துவம்
- ↳ ஆன்மிகப் படுகை
- ↳ Forex Trading Tutorial & Signal
- ↳ Free Online Job Resources
- ↳ To be become a Millionaire
- ↳ Digital Currency Exchange
- ↳ Support Forum
- ↳ Online Job Free Tutorial
- ↳ Home Business & Jobs Talk
- ↳ Mobile, Computer & Internet World
- ↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்
- ↳ கவிதை ஓடை