Page 1 of 1

மங்களூர் முட்டை குழம்பு

Posted: Fri Sep 12, 2014 4:10 pm
by Neela
தேவையான பொருட்கள்:
முட்டை - 5-6 (வேக வைத்து தோலுரித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
எண்ணெய் - 3 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
ஓமம் - 1 சிட்டிகை
பட்டை - 1
கறிவேப்பிலை - சிறிது
முட்டை - 1 அல்லது 2
மசாலாவிற்கு...
மல்லி - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1 சிட்டிகை
கடுகு - 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 5-6
பூண்டு - 3-4 பற்கள்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கெட்டியான புளிச்சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்து, பின் அதில் மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் வறுத்து, இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 6-7 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், பூண்டு, துருவிய தேங்காய் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் வதக்கி குளிர வைத்துள்ள வெங்காயம் மற்றும் தேங்காய் கலவையை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றையும் ஊற்றி, தேங்காய் பால் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம், பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். குழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு, மிதமான தீயில் 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், மங்களூர் முட்டை குழம்பு ரெடி!!!

Re: மங்களூர் முட்டை குழம்பு

Posted: Sun Aug 16, 2015 12:36 pm
by kavinayagam
சமைதுத்து பார்த்தேன். சூப்பர். எத்தனயோ முட்டைக்குழம்பு சாப்பிட்டுருக்கேன்.இது ரொம்ப ந்ல்லாயிருந்தது.

Re: மங்களூர் முட்டை குழம்பு

Posted: Tue Aug 18, 2015 12:27 pm
by marmayogi
வினை விதைத்தவன் வினை அறுப்பான். எந்த ஒரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு.