Page 1 of 1

ஆரோக்கியமான ராகி தோசை

Posted: Fri Sep 12, 2014 4:01 pm
by Neela
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு எடுத்தால், ராகி தோசை ரெடி!!!