பாசிப்பயிறு வெஜிடபிள் தோசையா..

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

பாசிப்பயிறு வெஜிடபிள் தோசையா..

Post by தீபக் » Fri Jun 20, 2014 8:39 pm

Image
தேவையான பொருட்கள்:

பாசிப்பயிறு - 2 கப்,
கோதுமை ரவை - 1கப்,
பச்சை மிளகாய் - 3,
காய்ந்த மிளகாய் - 4,
சீரகம் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு

வெஜிடபிள் செய்ய தேவையானவை :

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி நறுக்கிய கலவை - 1கப்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவையான அளவு,
கடுகு, சீரகம் - தாளிக்க

செய்முறை :

• வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கவும்.

• கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• நன்கு வதங்கியதும், அதில் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும்.

தோசை செய்முறை :

• பாசிப்பயிறை 3 மணி நேரம் ஊறவைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

• அதில் கோதுமை ரவையைக் கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

• தோசைகல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசை மாவை ஊற்றி அதன் மேல் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து சிறு தீயில் தோசை செய்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”