தயிர் சாண்ட்விச்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

தயிர் சாண்ட்விச்

Post by ரவிபாரதி » Fri Jun 20, 2014 5:13 pm

தேவையானவை:

Image
கோதுமை பிரெட் துண்டுகள் – 10,
புளிக்காத தயிர் – ஒரு கப்,
வெள்ளரிக்காய், தக்காளி – தலா 1,
புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னி – 3 டேபிள்ஸ்பூன், சாட் மசாலா, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வெள்ளரிக்காய், தக்காளியை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கவும்.

• கோதுமை பிரெட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கவும்.

• ஒரு பிரெட் துண்டின் மீது, புதினா – பச்சை மிளகாய் சட்னியைப் பரவலாகத் தடவவும்.

• பிறகு, நறுக்கிய வெள்ளரி, தக்காளித் துண்டுகளை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடவும்.

• இதேபோல் எல்லா பிரெட் துண்டுகளையும் தயார் செய்து கொள்ளவும்.

• தயிருடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து தயார் செய்து வைத்துள்ள ஸ்லைகள் மேல் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சாட் மசாலா, சீரகத்தூள் தூவி பரிமாறவும்
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”