பச்சைப் பயறு கேரட் சுண்டல்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

பச்சைப் பயறு கேரட் சுண்டல்

Post by தீபக் » Fri Mar 28, 2014 9:21 pm

Image

தேவையான பொருட்கள் :

பச்சைப் பயறு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
கேரட் துருவல் - அரைகப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - விருப்பத்திற்கு

செய்முறை :

• இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

• பச்சை பயறை ஊறவைத்து இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும்.

• அடுப்பில் கடாய் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, ப.மிளகாய் போட்டு தாளிக்கவும்.

• பின் அதில் கேரட் துருவலை வதக்கி சீரகப்பொடியுடன் வெந்த பச்சை பயறையும் உப்பு சேர்த்து சற்றே வதக்கி இறக்கவும்.

• கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லியைத் தூவவும்.

• காலை இந்த டிபனுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மிகவும் சத்தானது.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”