எள்ளு வெல்ல லட்டு

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

எள்ளு வெல்ல லட்டு

Post by ASVM » Mon Jan 27, 2014 8:18 pm

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள்ளு - 1 கப்
வெல்லம் - 1 கப்
நெய் - 3
டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 2 (பொடி செய்தது)
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளை போட்டு தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு, வெல்லப் பாகுவை ரெடி செய்ய வேண்ம். பாகு நன்கு கெட்டியாகும் போது, அதில் வறுத்து வைத்துள்ள எள்ளு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, நெய்யை சேர்த்து கிளறி, இறக்கி வைக்க வேண்டும். இறுதியில் கலவையானது ஓரளவு சூடாக இருக்கும் போதே, அதனை லட்டுகளாக பிடிக்க வேண்டும். குறிப்பாக லட்டு பிடிக்கும் போது, கையில் லேசாக தண்ணீரால் நனைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், லட்டானது 10-15 நாட்கள் நன்றாக இருக்கும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”