கத்திரிக்காய் வாங்கத் தெரியுமா?

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

கத்திரிக்காய் வாங்கத் தெரியுமா?

Post by cm nair » Fri Nov 29, 2013 9:53 am

பளிச்சென்று இருந்தால் போதும். அந்தக் கத்திரிக்காயை தேர்வு செய்ய மனதில் தோன்றும். ஆனால் அது சரியல்ல….
கத்தரிக்காய் வாங்க சின்ன டெக்னிக்! அது உங்களுக்குத் தெரிந்தால் போதும்.
கத்திரிக்காயை ஒரு நோட்டம் விடுங்கள். காம்பு தடித்து இருக்கின்றதா? பார்வையிலேயே தெரியும். தொட்டுப் பார்த்தாலும் புரியும். அடுத்தது அந்த கத்திரிக்காயை மேலெழுந்த வாரியாக…..மெதுவாக அமுக்கிப் பாருங்கள். கனமின்றி மெலிந்து கைக்கு சுகமாய் தெரியுதா? விடாதீர்கள்.
அதுதான் நல்ல கத்திரிக்காய்!
பொதுவாக கத்தரிக்காயை திருப்பிப் பார்க்க வேண்டும். எங்கும் கரும்புள்ளி தட்டுப்படக்கூடாது. அப்படி இருந்தால் பூச்சி விழுந்தது. அதை விட்டு விடுங்கள்.
சில கத்தரிக்காய் முத்தல் இருக்காது- வாடல் இருக்காது – புழு இருக்காது. ஆனால் உள்ளே புழு நெளியும்……அப்படி இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. தூக்கி தூரம் தான் வீச வேண்டும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”