தேங்காய்ப் பால் சாதம்..

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

தேங்காய்ப் பால் சாதம்..

Post by cm nair » Fri Nov 22, 2013 10:34 am

தேங்காய்ப் பால் சாதம்...(சாதத்தைத் தவிர மற்றவை இயற்கையானது)

கொத்துமல்லி,பருப்பு சட்டினி....

இந்த சாதம் ஒரு ஈடில்லாத சுவை கொண்டது! பாட்டிலில் அடைத்து விற்கும் நச்சுப் பொருட்களைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு அதற்குப் பதிலாகக் குழந்தைகளுக்குப் புகட்டவேண்டிய சத்தான உணவு...

இதை இனிப்பாகவும் செய்யலாம்....

தேவையான பொருட்கள்: நன்கு வெந்த சாதம், பச்சையான
தேங்காய்ப் பால், நறுக்கிய பெரிய வெங்காயம் , நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு,உப்பு...

நன்கு குழைய வெந்த சாதத்தை ஆறியபின்னால் மற்ற அனைத்தையும் சேர்த்துக் கலக்கினால் தேங்காய்ப்பால் சாதம் தயார்! தாளிப்பு கிடையாது...
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”