தீபாவளிக்கு சும்மா அழகா ஜொலிக்கணுமா? இதோ சில டிப்ஸ்.

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

தீபாவளிக்கு சும்மா அழகா ஜொலிக்கணுமா? இதோ சில டிப்ஸ்.

Post by cm nair » Thu Oct 31, 2013 10:58 am

கருவளையங்களைப் போக்க...
தீபாவளிக்கு முதல் நாள் இரவு முழுவதும் தூக்கமின்றி பட்டாசுகளை வெடித்து, மிகவும் தாமதமாக தூங்கினால், தீபாவளி அன்று கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்துவிடும். ஆகவே அந்த கருவளையங்களை போக்கி, கண்களை பொலிவானதாக மாற்றுவதற்கு, நல்ல குளிர்ச்சியான வெள்ளரிக்காயை கண்களில் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கருவளையங்கள் போய்விடும்.

ஃபேஸ் பேக்
தீபாவளி அன்று முகம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், ஸ்ட்ராபெர்ரி, பால் அல்லமு முல்தானி மெட்டி கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். இதனால் சருமம் பொலிவுறும்.

க்ளீனிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங்
இந்த மூன்று முறையை சரியாக செய்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி, முகம் அழகாக காட்சியளிக்கும்


கூந்தல் பராமரிப்பு
கூந்தல் பட்டு போன்று இருக்க வேண்டுமெனில், தீபாவளிக்கு முதல் நாள் கூந்தலுக்கு ஹேர் பேக் போடுங்கள். அதிலும் தயிர், தேன், முட்டை அல்லது வினிகர் கலந்து ஹேர் பேக் போட்டால், கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

உதடு பராமரிப்பு
உதடுகளில் உள்ள கருமைகள் மற்றும் உதடு வெடிப்புகளைப் போக்க, முதலில் உதடுகளை கடிப்பதை நிறுத்த வேண்டும். பின் பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்கு தடவவும். வறட்சியின்றி நல்ல மென்மையான உதடுகள் வேண்டுமெனில், ஷியா வெண்ணெய் கொண்டு உதடுகளை மசாஜ் செய்ய வேண்டும்.

நகப் பராமரிப்பு
பொதுவாக நகங்கள் அழகாக இருக்க வேண்டுமெனில், முதலில் எவ்வளவு நீளத்தில் நகம் வேண்டும் என்று முடிவு செய்து, அதனை ஷேப் செய்ய வேண்டும். பின்னர் தினமும் அரவில் நகங்களுக்கு எண்ணெயை வைத்து, தூங்க செல்ல வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நகங்கள் க்யூட்டாக இருக்கும்.

பாத பராமரிப்பு
பாதங்களைக் கொண்டு உடலை எவ்வளவு அக்கறையாக பராமரிக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே பாதங்கள சுத்தம் செய்து, தினமும் தவறாமல் பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். குறிப்பாக குளித்த பின்னர் மற்றும் இரவு தூங்கும் முன். இதனால் குதிகால் வெடிப்பு வருவதை தவிர்ப்பதோடு, பாதங்களும் மென்மையாக இருக்கும்.


கழுத்து மற்றும் மூட்டுகள்
ஆடைகள் அணியும் போது வெளியே தெரியும் பகுதிகள் தான் கழுத்து மற்றும் மூட்டுகள். மேலும் இந்த இடங்களில் தான் அழுக்குகள் அதிகம் தங்கும். ஆகவே அந்த இடத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீக்குவதற்கு எலுமிச்சை கொண்டு தேய்த்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளையும் நீக்கிவிடும்.

ஆரோக்கிய உணவுகள்
முக்கியமாக அழகாக இருக்க வேண்டுமெனில், மேற்கூறியவற்றுடன் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

தண்ணீர் மற்றும் ஜூஸ்கள்
அதிகப்படியான தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை குடித்து வந்தால், சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். அதிலும் ஜூஸில் கேரட் மற்றும் பாகற்காய் ஜூஸ் குடிப்பது, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கி, சருமத்தை பொலிவாக வைத்திருக்கும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால், கஷ்டப்பட்டு வாங்கிய புத்தாடைகளை அணியும் போது, அழகாக காணலாம்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”