சைனஸ் ஒர் கண்டம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

சைனஸ் ஒர் கண்டம்

Post by சாந்தி » Sun Jul 29, 2012 10:12 am

Image0070-1.jpg
சென்ற வருடம் என் கணவருக்கு (சைனஸ்) மூக்கில் சதை வளர்ந்து அதனுடைய பாதிப்பு கண்கள் வழியாக மூளைக்கு அருகில் படர்ந்துவிட்டது.
அதனை அறுவை சிகிச்சை பண்ணிய சிறிது நேரத்துக்கெல்லாம் கண்கள் இரண்டும் பெரிதாக வீங்கிவிட்டது. எங்களுக்கு எல்லாம் மிகவும் பயமாகிவிட்டது. மருத்துவர் தான், ஏதும் ஆகாது... வலியால் ஏற்பட்ட சிறு வீக்கம், இது மாலைக்குள் குறைந்துவிடும் என்று.

என் பையன் அவரைப் பார்த்தவுடன் பயத்தில்... அழுது கொண்டே
"என்னப்பா....... Alien மாதிரி இருக்கிறீர்கள்" என்று சொன்னான். அந்த அளவிற்கு முக மாற்றமும் அமைந்தது எங்களுக்கு மிகவும் பயத்தினைக் கொடுத்துவிட்டது. ஆண்டவன் புண்ணியத்தில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல இரண்டு நாட்கள் கழித்து சரியாகிவிட்டது. (புகைபடத்தை பாருங்கள்)
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Alien

Post by ஆதித்தன் » Sun Jul 29, 2012 7:45 pm

நேற்று அல்லது அதற்கு முந்தைய நாள், உதடில் சின்ன கட்டி என்று ஆபரேஷன் பண்ண, ஊசி போட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் மரணம் என்ற செய்தி வெளியினாதனை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அதன் விளைவு.. உங்கள் வரலாற்று செய்தியை படித்ததும்...முதலில் என்னவோ ஆயிடுச்சின்னு......

கடைசியில் ... சிரிப்பாக முடித்துவிட்டீர்கள். ஆனாலும் சிரிப்பை உணரவில்லை.
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re:ஸைனஸ்

Post by சாந்தி » Mon Jul 30, 2012 12:33 pm

ஆதி சார்,
தப்பு என் மீதுதான். மன்னித்துக் கொள்ளுங்கள். என் பையன் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. அவரைப் பார்த்த அதிர்ச்சியில்தான் அந்த மாதிரி சொன்னான். நேற்று நெட் விட்டு விட்டு வந்ததால் இந்தப் பகுதியில் என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை. ஸைனஸால் பாத்திக்கப்பட்டால் எந்த அளவுக்கு விபரீதம் ஆகும் என்பதை விளக்கவே புகைபடத்துடன் பதிவு செய்தேன். மறுபடியும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பு வேறு ஏதாவது கொடுத்திருக்க வேண்டும். இப்பொழுது தலைப்பை மாற்றிவிட்டேன். நான் "சிரிப்பு" என்ற கண்ணோட்டத்தில்
இதைப் பதியவில்லை. முடிந்தால் இந்தப் பதிவை "delete" பண்ணிவிடுகிறீர்களா?
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: Re:ஸைனஸ்

Post by mnsmani » Mon Jul 30, 2012 1:32 pm

சகோதரி சாந்தி அவர்களே, நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை ஒரு முறைக்கு இருமுறை preview ல் சரிபார்த்து பின்னர் Submit செய்தால் இம்மாதிரி குழப்பங்கள் இருக்காது. இத்ற்க்கு தலைப்பாக நீங்களே அந்த பகுதியில் edit செய்து ”சைனசா, எச்சரிக்கை” போன்ற தலைப்பிடலாம். மேலும் நமது எழுத்துக்களை தினம் ஒரு 500 வாசகர்ளாவது பார்பதால் எழுதுவதில் சற்று கவணம் தேவை. நாமெல்லாம் சிறந்த எழுத்தாசிரியர்கள் அன்று. போக போக எல்லம் சரியாகிவிடும். இது உங்கள் எழுத்தார்வத்தை மேலும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. (இன்னமும் எனக்கு ந,ண,ன,ள,ல போன்றவற்றில் குழப்பமுண்டு, அதற்க்கு ராம்குமாரும், சுமையாவும் சாட்சி).அவசரபட்டு இந்த பகுதியை delete செய்ய வேண்டியதில்லை. :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: சைனஸ் ஒர் கண்டம்

Post by ஆதித்தன் » Mon Jul 30, 2012 7:43 pm

தவறுகள் திருத்தப்படும் பொழுதுதான் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உறுதியாகிறது. அந்த வகையில் நீங்கள் எங்களை விட விரைவில் எழுத்தாசிரியர் ஆகிவிடுவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”