காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
mithrajani
Posts: 94
Joined: Tue Jan 08, 2013 9:47 pm
Cash on hand: Locked

காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....

Post by mithrajani » Tue Feb 19, 2013 11:08 pm

காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் கோல் ஊன்றி நடப்பவர் கூட கோலை வீசி விட்டு கம்பீரமாக நடப்பார்கள் என சித்த மருத்துவம் சிறப்பித்துக் கூறுகிறது.

இஞ்சி : தோல் நச்சுத்தன்மை உடையது என்பதால் தோல் நீக்கிய இஞ்சியை சாறெடுத்து தெளிந்தவுடன் காலையில் அருந்தலாம், அல்லது தேனில் ஊறவைத்து விற்கப்படும் இஞ்சித்துண்டுகளையும் சாப்பிடலாம்.இது ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்.பசியை தூண்டும்,குமட்டல்,வாந்தியை நீக்கும்,வயிற்றுவலி,ஜீரணக்கோளாறுகளை சரி செய்யக்கூடியது.

சுக்கு : சுண்ணாம்பு சத்து மிகுந்தது, இதயத்திற்கும்,இரத்தக்குழாய்களுக்கும் வலு கொடுக்கக்கூடியது.வயிற்றுப்புண்களை தடுக்கும்,ஏற்கனவே இருந்தாலும் குணமாக்கிவிடும் ஆற்றல் உண்டு.வயிற்றில் எஞ்சி இருக்கும் பித்த நீரை சமன் செய்யும் ஆற்றல் உண்டு.இதை நண்பகல் வெந்நீருடன் சாப்பிடலாம்.

கடுக்காய் : கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் எனக்கூறுவார்கள்.

கடுக்காய்க்கு தாயினும் அதிகம் குணம் இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது.

இரத்தத்தை சுத்தம் செய்யும்,கழிவுகளை நீக்கும்,செல்களுக்கு புத்துணர்வு கொடுக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அரு மருந்து. கண் நோய்களுக்கு விடை கொடுக்கும். தீராத மலச்சிக்கலையும் குணப்படுத்தும்.

கடுக்காயை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் வயோதிகத்திலும் வாலிபர்களாக காட்சி அளிப்பார்கள், நரை அவர்களை அண்டாது.சுருக்கமாக சொன்னால் உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது.

பழங்காலத்தில் கடுக்காய் நீர் கொண்டு கட்டிய கட்டிடங்கள்,கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளைக்கடந்தும் நிலைத்து நிற்பதை காணலாம்.

இவ்வளவு அருமையான குணங்கள் கொண்ட ஒரு உடல் பாதுகாப்பு வழிமுறையை நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்,இதை கடைபிடிக்க ஒரு மாதத்துக்கு மிஞ்சி போனால் நூறு ரூபாய் பிடிக்குமா?
இதை நான் பயன்படித்தி வருகிறேன். உடலும் மனமும் freshsa இருக்குங்க..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....

Post by ஆதித்தன் » Tue Feb 19, 2013 11:24 pm

நல்ல பயனுள்ள தகவலை எளிமையாக சொல்லிட்டீங்க... நாளை முயற்சிக்கிறென்...
User avatar
சாந்தி
Posts: 1641
Joined: Fri Jul 13, 2012 6:48 pm
Cash on hand: Locked

Re: காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....

Post by சாந்தி » Wed Feb 20, 2013 10:41 am

ரஜனி...
உடலுக்குத் தேவையான முக்கிய குறிப்புகள் பதிவிட்டமைக்கு நன்றி.....
:thanks:
User avatar
mithrajani
Posts: 94
Joined: Tue Jan 08, 2013 9:47 pm
Cash on hand: Locked

Re: காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....

Post by mithrajani » Wed Feb 20, 2013 11:49 pm

நன்றி ஆதி சார்.

நன்றி சாந்தி மேடம். என் பெயர் செல்வராணி நீங்க என்னை ராணி என சொல்லாம்.

இரவில் ஒரு கடுக்காயயை ஊர வைத்து காலையில் அதை வாய்ல வைத்து மென்னு துப்பினால் பல்லுக்கு நல்லது, பல் வலி வாராது. இது நான் பயன் படித்தியது நல்ல பலன் உள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....

Post by ஆதித்தன் » Thu Feb 21, 2013 1:18 am

mithrajani wrote: இரவில் ஒரு கடுக்காயயை ஊர வைத்து காலையில் அதை வாய்ல வைத்து மென்னு துப்பினால் பல்லுக்கு நல்லது, பல் வலி வாராது. இது நான் பயன் படித்தியது நல்ல பலன் உள்ளது.
இதனை பல் வலி உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டுமா?

அல்லது

பல் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தினம் செய்யலாமா?

கடுக்காயை மென்று துப்ப வேண்டும் என்றால், அதனை உண்ணக் கூடாதா?

விவரம் சொல்லவும்..
User avatar
mithrajani
Posts: 94
Joined: Tue Jan 08, 2013 9:47 pm
Cash on hand: Locked

Re: காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....

Post by mithrajani » Thu Feb 21, 2013 10:18 am

பல் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தினம் செய்யலாம்
அது முடியவில்லை எனில் வாரத்தில் 4 அல்லது 3 நாட்கள் செய்யலாம்.
கடுக்காயை உண்ணலாம்.
ஆனால் வாயில் வைத்து
மெல்லுவதால் பல்லில் உள்ள அசுத்தம் உடலில் செல்லும்.இது பல்லுகுதான் அதனால் அதை உண்ண கூடாது.

கடுக்காயை துள் செய்து
இரவில் உண்ணும் போது ஒரு ஸ்பூண் கடுக்காயை துளை உணவுடன் சேர்த்து உண்ணலாம். அல்லது இரவில் தூங்கும் முன் ஒரு ஸ்பூண் கடுக்காயை துளை வெண்நீரில் கலக்கி அருத்தலாம்.

கடுக்காய் துள் கிடைக்கும். இல்லை எனில் கடுக்காய்
வாங்கி மிக்சிய்ல் நாம் அறைக்காலம் கடுக்காய்
கொட்டையை அரைக்க கூடாது
arrs
Posts: 63
Joined: Tue Sep 18, 2012 6:28 pm
Cash on hand: Locked

Re: காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....

Post by arrs » Fri Nov 28, 2014 11:46 am

mithrajani wrote:காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் கோல் ஊன்றி நடப்பவர் கூட கோலை வீசி விட்டு கம்பீரமாக நடப்பார்கள் என சித்த மருத்துவம் சிறப்பித்துக் கூறுகிறது.

இஞ்சி : தோல் நச்சுத்தன்மை உடையது என்பதால் தோல் நீக்கிய இஞ்சியை சாறெடுத்து தெளிந்தவுடன் காலையில் அருந்தலாம், அல்லது தேனில் ஊறவைத்து விற்கப்படும் இஞ்சித்துண்டுகளையும் சாப்பிடலாம்.இது ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட்.பசியை தூண்டும்,குமட்டல்,வாந்தியை நீக்கும்,வயிற்றுவலி,ஜீரணக்கோளாறுகளை சரி செய்யக்கூடியது.

சுக்கு : சுண்ணாம்பு சத்து மிகுந்தது, இதயத்திற்கும்,இரத்தக்குழாய்களுக்கும் வலு கொடுக்கக்கூடியது.வயிற்றுப்புண்களை தடுக்கும்,ஏற்கனவே இருந்தாலும் குணமாக்கிவிடும் ஆற்றல் உண்டு.வயிற்றில் எஞ்சி இருக்கும் பித்த நீரை சமன் செய்யும் ஆற்றல் உண்டு.இதை நண்பகல் வெந்நீருடன் சாப்பிடலாம்.

கடுக்காய் : கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் எனக்கூறுவார்கள்.

கடுக்காய்க்கு தாயினும் அதிகம் குணம் இருப்பதாக சித்தர் பாடல் கூறுகிறது.

இரத்தத்தை சுத்தம் செய்யும்,கழிவுகளை நீக்கும்,செல்களுக்கு புத்துணர்வு கொடுக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அரு மருந்து. கண் நோய்களுக்கு விடை கொடுக்கும். தீராத மலச்சிக்கலையும் குணப்படுத்தும்.

கடுக்காயை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் வயோதிகத்திலும் வாலிபர்களாக காட்சி அளிப்பார்கள், நரை அவர்களை அண்டாது.சுருக்கமாக சொன்னால் உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது.

பழங்காலத்தில் கடுக்காய் நீர் கொண்டு கட்டிய கட்டிடங்கள்,கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளைக்கடந்தும் நிலைத்து நிற்பதை காணலாம்.

இவ்வளவு அருமையான குணங்கள் கொண்ட ஒரு உடல் பாதுகாப்பு வழிமுறையை நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்,இதை கடைபிடிக்க ஒரு மாதத்துக்கு மிஞ்சி போனால் நூறு ரூபாய் பிடிக்குமா?
இதை நான் பயன்படித்தி வருகிறேன். உடலும் மனமும் freshsa இருக்குங்க..
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய்
மண்டலம் உண்டால் கோலூன்றி நடக்கும் கிழவனும் குமரனாவான்
இக்குவலயத்தே*=உலகம்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”