Page 4 of 4

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Posted: Thu Oct 31, 2013 10:43 am
by Plaks1979
உடற் பயிற்சியின் முக்கியம்

Image
Image
Image
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும். நடை பயிற்சியோ அல்லது ஓட்டப் பயிற்சியோ அல்லது வேறு பிற விளையாட்டோ இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும். முகம் ஊடுதல் அழகுடனும் காணப்படும்.

இளம் வயதில் செய்யபடும் உடற்பயிற்சி மிகுந்த நன்மை பயக்கும். மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சினைகளுக்கு மூல காரணமான மன அழுத்தம் குறையும் இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கட்டாயம் பல விட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரதச் சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான விட்டமின்களை எடுத்துக் கொள்ளாமல் போனால் ஆராக்கியத்திருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த விட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை.40 வயதை எட்டிவிட்டால் நோய்களும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்து விடும் பல உடல் உபாதைகள் எட்டிப் பார்க்க தொடங்கி விடும். ரத்த அழுத்தம், சர்ச்சரை நோய், உடல் பளுமன், மூட்டு வலி என பல பிரச்சினைகளின் தொடக்கம் 40 வயதுதான்.

நீங்கள் கலை யில் எழுந்ததும் வாக்கிங் செலவதன் மூலம் உங்கள் கால்களை திட படுத்த முடியும் 40 வயதில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பது, உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ எவ்வளவு உடற் பயிற்சி செய்தீர்களோ அதை பொறுத்துதான் அமைகிறது என்கின்றனர்.

மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலாசனை நிபுணர்கள்.40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைப்பயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Posted: Fri Nov 01, 2013 11:42 pm
by Plaks1979
முகத்தை பொலிவாக்கும் கற்றாலை ஜெல்

Image
Image
அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாலையும் ஒன்று.. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல் பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாலை மூலிகையாக பயன்படுகிறது கற்றாலையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாலை..

கற்றாலையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாலையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாலையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல செயல்பாட்டு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதை அழகுக்கு பயன்படுத்தும் க்ரீமாகவும், முகம் கழுகும் போது உபயோகிக்கும் பேஸ் வாஸாகவும் பயன்படுத்தலாம்.

அலோவேராவின் நன்மைகள்

இது தோலுக்கு ஈரப்பதம் ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்துகின்றனர். கற்றாலை ஜெல்லில் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ளதால் சருமத்தை இளமையாக்கி, உங்களின் சருமத்தை எந்த நேரங்களில் பார்த்தாலும் புதியதாக தேற்றமளிக்கும் தனமையை கொண்டுள்ளது. கற்றாலையில் எதிர்ப்பு நுண்ணுயிர் பண்புகளை கொண்டுள்ளதால் முகத்தில் தோன்றும் ஆக்னோ, பருக்கள் வராமல் தடுக்கும். இதில் இயற்கையாக நிகழ்வதற்கு எதிராக எதிர்ப்பு ஆக்சிஜனேற்றத்தை கொண்டுள்ளதால் வயது மூப்பிலிருந்து சருமத்தை தக்கவைத்துக்கொள்கிறது.

அலோ வேரா உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஏற்படக்கூடிய வலிகளையும், வீக்கங்களையும் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. இது மருத்துவரீதியாக எரிகாயங்கள், பூச்சி கடி, எக்ஸிமா, வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது. வீட்டிலேயே கற்றாலை பயன்படுத்தி ஜெல் தயாரித்து ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து முகத்திறக்கு அவ்வப்போது பயன்படுத்தலாம்.

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Posted: Fri Nov 01, 2013 11:58 pm
by Plaks1979
உடல் நாற்றம்... எப்படித் தவிர்க்கலாம்?

Image
Image
Image
‘பூவெல்லாம் உன் வாசம்’ என்றும், ‘பூக்களுக்கு நீயே வாசமடி...’ என்றும் பாடல்களில் ரசிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது. நிஜமோ அப்படியிருப்பதில்லை... பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை! ‘நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்’ என வெயிலை வழியனுப்பிவிட்டு, கூடவே தொடர்ந்து வரும் பிரச்னை உடல் துர்நாற்றம். மற்ற நாள்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும்.

உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது... அதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்... இயற்கையான மணத்துடன் உலா வர என்ன செய்யலாம்? விளக்கமாகப் பேசுகிறார் பிரபல அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

நாற்றம் ஏன்?

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர்.

பெண்களுக்கு 14 - 16 வயதிலும், ஆண்களுக்கு 15 - 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்னை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 - 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில் இருக்கும். வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலிருந்து உடலைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும் பொருட்டு இந்த சுரப்பிகள் தூண்டப்படுவதால்தான் வியர்வை வெளியே வருகிறது. அதனால்தான் நமக்கு முகத்திலோ, கைகளிலோ வியர்க்கும்போது, அது அதிக வாசனையை ஏற்படுத்துவதில்லை.

அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்குள், காதுகளின் பின்புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகம் காணப்படும். இவை வியர்வையை வெளிப்படுத்தும்போது, அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது வாசனை அதிகமாக இருக்கிறது.

எப்படித் தவிர்க்கலாம்?

அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். நிறமும் மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

டீ ட்ரீ அல்லது லேவண்டர் - இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும். கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க வேண்டாம்.

வியர்வையையே நிறுத்தக்கூடிய ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. ஏதோ ஒருநாள் நடன நிகழ்ச்சி, முக்கியமான விசேஷம், உடையில் வியர்வைத் தடம் தெரிய வேண்டாம் என நினைக்கிற போது மட்டும் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம்.

அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம். உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும்.

உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம். பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் உதாரணம். காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும். குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என நிறைய கிடைக்கின்றன. நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும். வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Posted: Wed Nov 06, 2013 4:51 pm
by Plaks1979
பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளித்தாலே தனி அழகுதான்

Image
Image
Image
பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதே ஒரு தனி கலைதான். தங்களை அழகாக வைத்திருக்கும் பெண்களுக்கு உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

அழகாக என்றதும் ஏதோ அழகு நிலையம் சென்று மூடியை வெட்டிக் கொள்வதும், வண்ண சாயங்களை மூசிக் கொள்வதும் இல்லை.

பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளித்தாலே தனி அழகுதான். இப்பொழுதெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது பழமையாகிவிட்டது.

அப்படி இல்லாமல் வாரத்தில் ஒரு நாளாவது மஞ்சள் தேய்த்து குளிப்பது சருமத்திற்கு நல்லது. அப்படி ம‌ஞ்ச‌ள் தே‌ய்‌த்து கு‌ளி‌க்க முடியாதவ‌ர்க‌ள் கு‌ளி‌க்கு‌ம் த‌ண்‌ணீ‌‌ரி‌‌ல் ‌கொ‌ஞ்ச‌ம் ம‌ஞ்ச‌ள் பொடியை‌‌க் கல‌ந்து‌ம் கு‌ளி‌க்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் பன்னீர் கலந்து மஞ்சள் பூசிக் குளிப்பது சிறந்தது.

முல்தானி மெட்டி என்று மருந்துக் கடைகளில் கிடைக்கும். தூளாக இருக்கும். அதனை ஒரு சிட்டிகை எடுத்து பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற விடுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.

இதுபோல வாரம் ஒரு முறை செய்து வாருங்கள். உங்கள் முகம் தும்பம் பூ போல மிளிரும் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டோம். வாடித் தோய்ந்து இருந்த சருமம் புதுப் பொலிவு பெறும்.


பேஷியல் க்ரீம் செய்ய :

மைதா மாவு இரண்டு தே‌க்கர‌ண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்ஜளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.

கழு‌த்து, கை, பாத‌ங்க‌ளிலு‌ம் இதனை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

பேஷ் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்‌த்து‌ ‌விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.

குடு‌ம்ப‌த்‌தி‌ல் எ‌ல்லோரு‌ம் ஒரே வகை சோ‌ப்புகளை‌ப் பய‌ன்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். அவரவ‌ர் சரும‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற சோ‌ப்புகளை‌ப் பய‌ன்படு‌த்தவு‌ம்.

மாத‌த்‌தி‌ல் ஒரு நாளாவது எ‌ண்ணெ‌ய் தே‌‌ய்‌த்து‌க் கு‌ளி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் சரும‌த்‌தி‌ன் செ‌ல்க‌ள் எ‌ல்லா‌ம் பு‌த்துண‌‌ர்வு பெறு‌ம்.


P Lakshmanan Wrote:

தாய்மார்களே! தங்கைமார்களே!! சகோதரிகளே!!! தோழிகளே!!!! இந்த டிப்ஸ் போதுமா இல்லை இன்னும் நிறைய டிப்ஸ் வேணுமா சொல்லுங்கம்மா சொல்லுங்கம்மா.
:thanks: :thanks: :thanks: :clab: :clab: :clab: :great: :great: :great:

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Posted: Mon Nov 18, 2013 7:52 pm
by Plaks1979
கடலை மாவு ஆரோக்கியத்திற்கும், சருமத்தை அழகூட்டவும் உணவுப் பொருளாக மட்டுமல்லாது, சிறந்த அழகு சாதானமாகவும் பயன்படுகிறது

Image
Image
Image
நம் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், சருமத்தை அழகூட்டவும் தானிய வகைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

கடலைப்பருப்பு : கடலைப்பருப்பும் இதிலிருந்து மாவாகும் கடலை மாவும் சமையலறையில் அதிகமாகப் பயன்படுத்தக்கூடியது. ஆபத்தபாந்தவன் மாதிரி அநேக சந்தர்ப்பங்களில் கை கொடுக்கக் கூடியது இந்த கடலை மாவு தான். இது உணவுப் பொருளாக மட்டுமல்லாது, சிறந்த அழகு சாதானமாகவும் கருதப்படுகிறது. எளிய, செலவில்லாத முகத்திற்குப் போடக் கூடிய பேக், கடலை மாவுதான். இது தோலை இறுக்கச் செய்யும். இறந்த செல்களை அகற்றக்கூடியது. நல்ல நிறமாக வர வேண்டுமென்பவர்கள் கடலை மாவை உபயோகித்தால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

கடலை மாவு ஒரு சிலருக்கு அலர்ஜியாவதுண்டு. அவர்கள் கடலை மாவுடன், பன்னீர், தேன், பால் தயிர், இவைகளில் ஏதாவது ஒன்றை சிறிதளவு கலந்து முகத்தில் பேக்காகப் போடலாம். (அவரவர் சரும வகைக்குத் தகுந்த மாதிரி ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்) பச்சைப் பயறு பொதுவாகவே எல்லோருடைய சருமத்திற்கும் பொருந்தக் கூடிய தானிய வகை பச்சைப் பயறு. இது பித்தத்தைப் போக்கக் கூடியது. புரதச் சத்து அதிகமாக இருக்கும். இதில் ஒட்டும் தன்மை (பசைத் தன்மை) அதிகம்.

நமது சருமம் புரதத்தால் ஆனது. உணவாகச் சாப்பிடும் போதும் புரதம் நமக்குத் தேவையான ஒன்று. அதே சமயம் புரதத்தை வெளிப் புறத்தில் கொடுக்கும் பொழுது, சருமம் மென்மையாக மாறுகிறது. முளை கட்டின பச்சைப் பயறில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.

பயத்தம் மாவுடன் பால், தேன், பன்னீர் கலந்து சருமத்திற்குச் பூச உபயோகப்படுத்தலாம். அல்லது வெள்ளரிச்சாற்றை பயத்ம் மாவுடன் கலந்து பேக்காகப் பயன்படுத்தலாம்.

எண்ணெய் குளியல் எடுக்கும்பொழுது சிலருக்கு சிகைக்காய் தேயத்துக் குளிப்பது, அலர்ஜியாக இருக்கும். கண் எரிச்சலைக் கொடுக்கும். அவர்களும்

சரி, சிறு குழந்தைகளுக்கு எண்ணெய் குளியலின் போது சரி பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கலாம்.
உலர்ந்த சரும வகைக்கு பால் ஏடுடன் பயத்தம் மாவையும், எண்ணெய் சருமத்திற்கு பயத்தம் மாவுடன் ஆரஞ்சு சாற்றையும் கலந்து உபயோகப்படுத்தலாம். இதைத் தவிர வெள்ளரிச்சாறு, பன்னீர், இளநீர் இவைகளில் ஏதாவதொன்றைச் சேர்ப்பது சருமத்திற்கு எந்தவித தீங்கும் செய்யாது.