பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Fri Mar 09, 2012 2:40 am

அழகு தரும் ஆப்பிள்!!!
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லைங்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி......!

* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by muthulakshmi123 » Fri Mar 09, 2012 11:35 am

ஓ பெண்கள் ஆண்கள் இருவருக்குமான அழகு குறிப்புகளா??? வாழ்த்துக்கள் ராம் ஒரு கல்லில் இரண்டு மாங்கா..
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Mon Mar 12, 2012 6:42 pm

முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..!

* வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்!

* உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஹை டென்ஸிட்டி லைபோபுரோட்டீன் (ஹெச்.டி.எல்) சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல் ஈரப்பசையுடன் மின்னிப்பிரகாசிக்கச் செய்யும்!

* ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, வைட்டமின் பி 12, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மீன் மற்றும் மீன் எண்ணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது! ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உங்கள் தலையின் மேற்பகுதியை என்றென்றும் ஈரப்பசையுடன் வளமாகத்திகழச்செய்து தலைமுடி செழிப்பாக வளர உதவுகிறது.

* நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுப்படைவீர்கள்!

* கந்தகம் மற்றும் சிலிகான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமன்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்காவிடில் அதற்கு இணையான காலிபிளவர் மற்றும் பீட்ரூட் இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன.

* வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 10:33 pm

பூசணிக்காய் கூட்டு செய்யலாம். சாம்பார் செய்யலாம். ஆனால் பூசணி விதை ரொம்ப நல்லது என கூறி இருக்கிறீர்கள் விதையை எப்படி பயன் படுத்துவது..
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Wed Mar 14, 2012 1:38 pm

Muthulakshmi அவர்களே, பூசணிக்காய் விதையை காயவைத்து உலரவைத்து பின்பு மேல் உள்ள தோளை அகற்றி உள்ளிருக்கும் பருப்பை சாப்பிடுங்கள்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Wed Mar 14, 2012 1:41 pm

ஜீன்ஸால் இளமை கூடுமா...?

பெருநகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும், 'காபி டே', 'நைட் கிளப்', அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் மற்றும் கல்லூரிகள் என்று எங்கே பார்த்தாலும் ஜீன்ஸ்தான். மகளோடு போட்டி போட்டுக்கொண்டு அவர்களுடைய அம்மாக்களும் 'ஸ்ட்ரைட் கட்' மற்றும் 'பேட்ஜ் ஒர்க்' ஜீன்ஸ் அணிந்து வலம் வருகின்றனர். ஜீன்ஸ் என்ற உடையால் சென்னை போன்ற பெருநகரங்கள் இளமை கூடி... பூத்துக் குலுங்குகின்றன என்றால் அது மிகையாகாது.

நீலக்கலரில் ஜீன்ஸ் போட்டிருந்த பெண்களை பார்த்து பலர், 'அடங்காப்பிடாரி' என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இன்றைக்கு ஜீன்ஸ் போட்ட பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்ற நினைப்பே அதிகமாகி வருகிறது.

அணிந்து கொள்ள சவுகரியம், எப்போதும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஜீன்ஸ் போன்ற சிறந்த உடை வேறு எதுவுமில்லை என்று கூறுகின்றனர் 'ஜீன்ஸ் கன்னியர்!'

ஒரே ஒரு ஜீன்ஸ் இருந்தாலும் போதும், டி-சர்ட், ஷார்ட் டாப்ஸ், சல்வாருக்கு போடும் குர்தா என்று எதையும் மேலாடையாக போட்டுக் கொண்டு கலக்கலாம். அதே மாதிரி, வெளியூர் சென்றாலும் ஓரிரு ஜீன்ஸ் எடுத்து வைத்தால் போதும்... சுமையும் குறைவு... வசதியும் அதிகம்.

ஜீன்ஸ் அணிவதற்கு பதிலாக சல்வார் மற்றும் சுடிதார் அணிந்தால், துப்பட்டாவை பாதுகாப்பாக பிடித்துக் கொள்ளவே நேரம் போதாது. இதற்கிடையில் கையில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்தாலோ... அல்லது சாலையில் நடந்து சென்றாலோ... இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் இயல்பு நிலை மாறிவிடும். ஆனால் ஜீன்ஸ் போட்டால் இப்படி எந்தக் கவலையும் இல்லை. இதனால் மற்ற உடைகளைவிட... ஜீன்ஸ் அணிந்தால் தன்னம்பிக்கை அதிகமாகும்.

காலையில் கல்லூரிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும்போது ஜீன்ஸ் அணிந்து கொண்டால் போதும்... மேலே ஒரு டி-சர்ட் போட்டு அலுவலகத்தை முடித்துவிட்டு, மாலையில் ஷாப்பிங் செல்ல... டி-சர்ட்டை கழற்றிவிட்டு, வேறு ஏதாவது டாப்ஸ் போட்டுக் கொள்ளலாம். நைட் பார்ட்டி என்றால் டாப்ஸை மாற்றிவிட்டு, 'சில்க் குர்தி' அணிந்து கொள்ளலாம். இப்படி 'த்ரீ இன் ஒன்' வசதி வேறு எந்த உடையிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விலையை பொறுத்தவரை நடுத்தர வர்க்கம் வாங்கும் வகையில்தான் உள்ளது என்பதும் ஜீன்ஸ் பிரபலமானதற்கு ஒரு முக்கிய காரணம். பிராண்டட் ஜீன்ஸ்கள் ஆயிரம் ரூபாய் முதல் தரமானதாக கிடைக்கின்றன. அதற்கு அடுத்து... 300 ரூபாய் முதல் ஜீன்ஸ் கிடைக்கின்றது. கால்களை இறுக்கிப் பிடிக்கின்ற 'ஸ்கின்னி ஜீன்ஸ்' இன்றைய இளம்கன்னியரின் 'பேவரைட் சாய்ஸ்'.

35 வயதைக் கடந்த பெண்கள்கூட 'ஸ்கின்னி ஜீன்ஸ்'-ஐ விரும்பி அணிகின்றனர். குறிப்பாக ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு இந்த 'ஸ்கின்னி ஜீன்ஸ்' மிகப் பொருத்தமாக இருக்கிறது.

* ஜீன்ஸ் வாங்கும்போது...

உங்களுடைய சைஸில் எல்லா பிராண்டட் ஜீன்ஸ்களிலும் இருக்காது. ஒவ்வொரு பிராண்ட்டுக்கும் சைஸ் அளவு மாறுபடும். ஆதலால் ஜீன்ஸ் வாங்கும்போது... அணிந்து பார்த்து வாங்குவது நல்லது.

ஜீன்ஸ் பின்பகுதியில் பாக்கெட் பெரிதாக இருந்தால் வாங்க வேண்டாம். இதனால் அந்த ஜீன்ஸ் அணிந்தவரின் பின்பகுதி பெரியதாக தெரியும். சின்ன பாக்கெட் இருந்தாலும் பரவாயில்லை... பாக்கெட் இல்லாத ஜீன்ஸ் மிகவும் நல்லது. அதேபோல், கீழே தள்ளியும் பாக்கெட் இருக்கக் கூடாது.

ஜீன்ஸ் கடைசி பகுதி பாதங்களைத் தொட்டு இருக்கலாம். ஆனால் மிகவும் நீளமாக இருக்கக் கூடாது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 9:40 pm

ஜீன்ஸ் என்றவுடன் எனக்கு ஞாபகம் வந்த ஒரு செய்தி:

ஒருவர் முதுகு வலியால் கஷ்டப்பட்டார். நிறைய சிகிச்சைகளை மேற்கொண்டார். பலனில்லை.பைக் கில் போக கூடாது என டாக்டர் சொல்லி விட்டார்..அதனால் காரில் பயணம் செய்தார்.உடன் டாக்டரும் இருந்தார். நேராக உட்கார்ந்து கார் ஓட்டுங்கள் என்றார். அப்போதும் அவருக்கு முதுகு வலித்தது..பார்த்தால் ஜீன்ஸ் பேண்ட் பாக்கட்டில் ஊரில் உள்ள கிரேடிட்கார்ட்,விசிட்டிங் கார்ட்,ஏடிஎம் கார்ட் என பர்ஸ் பிதுங்கி இருக்கு..பர்ஸ்சை பேண்ட் பாக்கட்டில் வைத்திருந்ததால் சரிவாக ஒரு மாதிரி உட்கார்ந்திருந்தார்.டாக்டர் பர்ஸ் ஐ எடுத்து விட்டு உட்கார்ந்து கார் ஓட்டச் சொன்னார்..சுமார் 3மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்தனர். என்ன ஒரு ஆச்சரியம் அவருக்கு முதுகுவலியே வர வில்லை....சரியாக உட்காரும் படி நமது உடம்பு வடிவமைக்கப்பட்டிருக்கு அதற்கு புறம்பாக உட்கார்ந்ததால் வந்த வினை...

எனவே, பர்ஸ்யில் கார்ட்களை அடுக்குவதை குறையுங்கள்..கூடுமான வரை பர்ஸ் பாக்கட் முன் புறமாக சைடில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் .வாழ்க ..வளமுடன்...
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by RJanaki » Fri Mar 23, 2012 3:11 pm

பூசணிக்காய் விதையை தோளை நீக்க எளிமை முறை தோசை வர்த்த பிறகு தோசை கல்லில் உலர்த்த பூசணி விதையே போட்டுடால் தோல் தனியாக விதை தனியாக வந்துவிடும்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Sun May 06, 2012 4:54 pm

வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!


பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்

இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள்

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

:thanks: :thanks: :thanks:
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Thu May 10, 2012 12:56 am

வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!


வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..

கவலையை விட்டுத் தள்ளுங்க.. எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்

எண்ணெய் பசை நீங்க:

வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.

தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக இருக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

சோளத்தை நன்கு பவுடர் செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்!
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”