நகங்கள் பற்றி ...

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

நகங்கள் பற்றி ...

Post by sumayha » Tue Apr 17, 2012 7:17 pm

நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் `மானிட்டர்' போலவும் செயல்படும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு இவற்றைக் கண்டுபிடிக்கலாம். நகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும் வருமாறு...

* நகங்கள் உடைசலாக வளர்கிறதா? மேட்ரிக்ஸ் பகுதி பாதிக்கப்பட்டிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். சிறுநீரக பிரச்சினை, தைராய்டு நோய் போன்றவற்றின் அறிகுறி யாகவும் இது கருதப்படுகிறது.

* நகங்கள் கடினமாகவும், அகன்றும் வளர்ந்தால் உடம்பில் பிராணவாயு பற்றாக்குறை என்று அர்த்தம். இதைக் கவனிக்காவிட்டால் ரையீரல் நோய்கள் வரலாம்.

* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி ஏற்படும்.

* நகங்கள் வெளிறி இருந்தால் ரத்தசோகை, சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருக்கலாம்.

* நகங்கள் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அடையாளம்.

* கீறல்- குழிகள் விழுந்தால் சரும பிரச்சினைகளின் அறிகுறி.

* நீலநிறமாக மாறிவிட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்த அறிகுறி ஆஸ்துமா, இதயநோய்களைக் கொண்டு வரலாம்.

* நகங்கள் உள்நோக்கி குழிந்திருந்தால் அல்லது கருமை நிறமாக காணப்பட்டால் இரும்புச்சத்து, வைட்டமின் பி 12 பற்றாக்குறை என்று பொருள்.

* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

விரலுக்கு கிரீடமான நகங்களை, வீண் என்று நினைக்காமல் கவனித்துக் கொள்வது நலம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: நகங்கள் பற்றி ...

Post by umajana1950 » Tue Apr 17, 2012 8:10 pm

நகங்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருப்பது அத்தனையும் உண்மை. பொதுவாக இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டால், உடனே அதனை குறிப்பிட்ட மருத்துவரை அணுகி நாம் இன்னும் தெளிவாக அறிந்து கொண்டு அதற்கான வைத்தியத்தைப் பெற முடியும். இவை எல்லாம் அறிகுறிகளே.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: நகங்கள் பற்றி ...

Post by muthulakshmi123 » Wed Apr 18, 2012 11:16 am

நகங்கள் பற்றி நீங்கள் கூறிய அத்தனை தகவல்களும் உண்மை..நோய் வாய்ப்பட்டால் முதலில் நகத்தை அழுத்தி பார்ப்பார்கள்..
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”