சித்த மருத்துவ குறிப்புகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Thu Apr 12, 2012 4:00 am

தேமல்:

வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்:

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Thu Apr 12, 2012 4:03 am

பப்பாளிக்காய்


விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க
விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும். இரு நல்லது

கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள் : சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து

பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by sumayha » Thu Apr 12, 2012 9:32 pm

muthulakshmi123 wrote:
காடி நீர் என்றால் என்ன?
காடி நீர் என்றால் புளித்த நீர். அதாவது வினிகர். இதற்கு பதிலாக இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றிக் காலையில் அந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம், அல்லது எலுமிச்சைச் சாறு பயன்படுத்துவது சிறந்தது.

மருத்துவக் குறிப்புகள் எல்லாமே சிறப்பாக உள்ளது ஓட்டக்காரு ... தொடருங்கள்... :clab: :clab: :clab:
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by muthulakshmi123 » Fri Apr 13, 2012 5:00 pm

sumayha wrote:
muthulakshmi123 wrote:
காடி நீர் என்றால் என்ன?
காடி நீர் என்றால் புளித்த நீர். அதாவது வினிகர். இதற்கு பதிலாக இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றிக் காலையில் அந்த தண்ணீரைப் பயன்படுத்தலாம், அல்லது எலுமிச்சைச் சாறு பயன்படுத்துவது சிறந்தது.

மருத்துவக் குறிப்புகள் எல்லாமே சிறப்பாக உள்ளது ஓட்டக்காரு ... தொடருங்கள்... :clab: :clab: :clab:
நன்றி சுமையா.. சுந்தரின் குறிப்புகள் எல்லாம் அருமை அருமை அருமை...
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sat Apr 14, 2012 4:37 am

முத்துலட்சுமியம்மா மற்றும் சுமையா அவர்களுக்கும் எனது நன்றி
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sat Apr 14, 2012 4:37 am

சரும நோய்:

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தீப்புண்:

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sat Apr 14, 2012 4:38 am

முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.

:amen:

வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sat Apr 14, 2012 4:39 am

கோதுமையில் உள்ள அற்புதமான ஊட்டச்சத்து:
கோதுமை, பச்சைப்பயிறு, உளுந்து, பொட்டுக்கடலை, கம்பு, அரிசி - இவைகளை வறுத்து பொடித்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை எடுத்து, அதனுடன் சூடான பால், வெல்லம் சேர்த்து உருண்டைபோல் உருட்டி காலை, மாலை டிபனாக உட்கொள்ளலாம். இந்த உணவு அதிக ஊட்டச்சத்து கொண்டது. ஊட்டச்சத்துக் குறைவினால் அவதிப்படுபவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் இதனை உட்கொண்டால் ஆரோக்கியமான உடல் சக்தியைக் கூடிய விரைவில் பெறலாம்.
Oattakaran
Posts: 477
Joined: Mon Mar 12, 2012 2:06 am
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by Oattakaran » Sat Apr 14, 2012 4:41 am

இதயத்திற்கு

இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.

இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: சித்த மருத்துவ குறிப்புகள்

Post by muthulakshmi123 » Sat Apr 14, 2012 11:04 pm

Oattakaran wrote:
இதயத்திற்கு

இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.

இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளிக்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும்.
விளாம்பழம் ருசி எப்படி இருக்கும் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா?/
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”